பல்லாவரம் ஐடி ஊழியர் தற்கொலை வழக்கு.. இறந்தவர்களின் நெற்றியில் விபூதி.. நடந்தது என்ன?
சென்னை: சென்னை பல்லாவரத்தில் மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட ஐடி ஊழியர் வழக்கில் பல்வேறு திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவரது மனைவி காயத்ரி (39). இவர்களுக்கு மகள் நித்யஸ்ரீ (13), மகன் ஹரி கிருஷ்ணன் (8) ஆகியோர் இருந்தனர். இந்த நிலையில் பிரகாஷும் காயத்ரியும் நேற்றுமுன் தினம் தங்கள் திருமண நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
மாயமான நேபாள விமானம்.. 4 இந்தியர்கள் உட்பட 22 பேர் பயணித்த நிலையில் தொடர்பை இழந்ததால் அதிர்ச்சி!
காயத்ரி அவர் வீட்டருகே நாட்டு மருந்து கடை நடத்தி வந்தார். இவர் பாஜக மகளிர் அணி செயலாளராகவும் இருந்தார். நித்ய ஸ்ரீ குன்றத்தூர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். ஹரி கிருஷ்ணன் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

காயத்ரி
இந்த நிலையில் காயத்ரியின் திருமண நாளையொட்டி திருப்பதி சென்று வந்த அவரது தந்தை லட்டு பிரசாதத்தை எடுத்துக் கொண்டு மகளை பார்க்க ஆசை ஆசையாக வந்தார். ஆனால் கதவு தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால் அச்சமடைந்த காயத்ரியின் தந்தை, அக்கம்பக்கத்தினர் உதவியை நாடினார்.

கதவு தாழிடப்படவில்லை
அப்போது கதவு தாழிடப்படாமல் இருந்தது. உடனே அவர்கள் கதவை திறந்து பார்த்த போது மகள், மருமகன், பேர பிள்ளைகள் என 4 பேரும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதையடுத்து குன்றத்தூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மரம் அறுக்கும் மிஷினால் குழந்தைகளின் கழுத்தையும் மனைவியின் கழுத்தையும் அறுத்த பிரகாஷ் அதே மெஷினை கொண்டு தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

மர்ம அறுக்கும் மெஷின்
மரம் அறுக்கும் மெஷின் பிரகாஷின் கழுத்தை அறுத்த போதிலும் பிரகாஷின் கழுத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. போலீஸார் வந்து அந்த இயந்திரத்தின் ஸ்விட்சை நிறுத்தினர். திருமண நாளன்று குழந்தைகளையும் காயத்ரியையும் அழைத்துக் கொண்டு பிரகாஷ் மெரினாவுக்கு சென்றிருந்தார் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். பின்னர் அன்றைய தினம் இரவு இந்த சம்பவத்தை செய்துள்ளனர்.

108 ஆம்புலன்ஸ்
நேற்று காலை 7.30 மணிக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் உதவியாளர்கள், ரத்தம் உறைந்திருந்ததை வைத்து 6 மணி நேரத்திற்கு முன் நடந்திருக்கலாம் என தெரிவித்திருந்தனர். இதனால் நள்ளிரவு 1 மணிக்குமேல் இந்த கொடூர சம்பவம் நடந்திருக்கலாம் என தெரியவந்தது. சுவற்றில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தற்கொலை கடிதம் ஒட்டப்பட்டிருந்தது.

மயக்க மருந்து
இந்த முடிவு நாங்களே எடுத்த முடிவு. யாரும் வற்புறுத்தவில்லை என எழுதி வைத்துள்ளனர். மேலும் தற்கொலை கடிதத்தின் மற்றொரு காப்பியை டைரியிலும் வைத்துள்ளனர். கழுத்து அறுக்கப்பட்ட போது காயத்ரியோ குழந்தைகளோ அலறியது போல் இல்லை. ஏனெனில் அலறினால் கை, கால்கள் உதைத்து ஏதேனும் பொருட்கள் நகர்ந்திருக்கும். ஆனால் அது போல் எந்த பொருட்களும் கலையவில்லை.

காலி டம்ளர்கள்
அந்த அறையில் டம்ளர்கள் இருந்தது. இதனால் வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து கொடுத்து அறுத்திருக்கலாம் என தெரிகிறது. பிரகாஷ உள்பட அனைவரின் நெற்றியிலும் விபூதி வைக்கப்பட்டிருந்தது. எனவே இறப்பதற்கு முன்னர் 4 பேரும் சுவாமி கும்பிட்டுவிட்டு வந்து படுத்தனரா இல்லை மூவரும் இறந்த பின்னர் பிரகாஷ் அவர்களது நெற்றியில் விபூதி வைத்தாரா என்ற கேள்வி எழுகிறது.