சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லாத்தையும் விடுங்க.. 22 தொகுதியில் யார் ஜெயிப்பா.. ஏன் யாருமே அதைப் பத்தி பேசலை!!??

Google Oneindia Tamil News

Recommended Video

    Exit Poll: எந்த கருத்து கணிப்பிலும் இடைத்தேர்தலை பற்றி பேசவே இல்லையே- வீடியோ

    சென்னை: லோக்சபா தேர்தலில் யார் யாருக்கு எத்தனை சீட் என்பதை எக்ஸிட் போல் முடிவுகள் மூலம் வட இந்திய ஊடகங்களும், நம்மூர் ஊடகங்கள் சிலவும் கூறி விட்டு போய் விட்டன. ஆனால் யாருமே 22 தொகுதி சட்டசபை இடைத் தேர்தல் குறித்து வாயே திறக்கவில்லை.

    தமிழக மக்கள் இந்த 22 தொகுதி இடைத் தேர்தல் முடிவைத்தான் ரொம்ப ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். காரணம், இந்த இடைத் தேர்தல் முடிவுகள், ஆட்சி மாற்றத்திற்கு வித்திடும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ஆனால் இந்த 22 தொகுதி இடைத் தேர்தல் குறித்து எந்த ஊடகமும் எக்ஸிட் போல் நடத்தவில்லை. இதனால் மக்களிடையே சலசலப்பு கிளம்பியுள்ளது.

    Exit polls: மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட காங்கிரஸ்.. மற்ற கட்சிகளையும் கெடுத்துவிட்டதுதான் மிச்சம் Exit polls: மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட காங்கிரஸ்.. மற்ற கட்சிகளையும் கெடுத்துவிட்டதுதான் மிச்சம்

    மெகா இடைத் தேர்தல்

    மெகா இடைத் தேர்தல்

    தமிழக வரலாற்றில் எப்போதுமே இந்த அளவுக்கு அதிகமான சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்ததில்லை. இதில் 18 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாலும், மற்ற நான்கு தொகுதிகளில் உறுப்பினர்கள் மரணமடைந்ததாலும் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.

    மினி சட்டசபைத் தேர்தல்

    மினி சட்டசபைத் தேர்தல்

    அதிக அளவில் நடந்த தேர்தல் என்பதால் இந்த தேர்தலின் முடிவுகள் பெரும் பரபரப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் இதுதொடர்பாக யாரும் எக்ஸிட் போல் நடத்தி முடிவை வெளியிடவில்லை. இதனால் சஸ்பென்ஸ் கூடியுள்ளது.

    யாருக்கு வெற்றி

    யாருக்கு வெற்றி

    இந்த இடைத் தேர்தலில் முக்கியமாக மோதிய கட்சிகள் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் ஆகியவைதான். இதனால் வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மக்கள் நீதி மய்யமும், நாம் தமிழர் கட்சியும் வெகுவாக வாக்குகளைப் பிரிக்கும் என்பதால் முடிவுகளும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளன.

    திமுகவுக்கு வெற்றியோ

    திமுகவுக்கு வெற்றியோ

    லோக்சபா தேர்தல் கருத்துக் கணிப்புகளில் அனைத்து ஊடகங்களுமே திமுகவுக்கே பெரு வெற்றி என்று கணித்துள்ளன. அந்த அடிப்படையில் பார்த்தால் இந்த 22 சட்டசபை இடைத் தேர்தலிலும் திமுகவே வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கலாம் என்று ஒரு பேச்சு கிளம்பியுள்ளது. ஒரு வேளை 22 தொகுதிகளிலும் திமுக வெல்லும் என்று முடிவுகள் வந்ததால் அவை வெளியிடப்படாமல் கைவிடப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    எய்யா.. ஏதாச்சும் இருந்தா அதையும் வெளியிடுங்கய்யா!

    English summary
    Suspension contines as no media house has released exit poll results for Tamil Nadu by election to 22 seats.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X