சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எம்கே ஸ்டாலின்னு சொன்ன ஆளுநர்.. முத்துவேல் கருணாநிதினு சொன்ன ஸ்டாலின்.. தலை நிமிர்ந்த அந்த தருணம்

Google Oneindia Tamil News

சென்னை: பதவியேற்பு விழாவில் எம்கே ஸ்டாலின் என ஆளுநர் சொன்ன போது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என ஸ்டாலின் சொல்லவிட்டு தலைநிமிர்ந்து பார்த்த போது அரங்கமே கைதட்டல்களால் அதிர்ந்தது.

தமிழகத்தில் 10 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சி அமைந்துள்ளது. ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமாணம் எளிமையாக மேற்கொள்ளப்பட்டது.

மனைவி கையால் தாலி.. மாற்றி யோசித்த ஷர்துல்.. மோசமாக டிரோல் செய்யும் நெட்டிசன்கள்!மனைவி கையால் தாலி.. மாற்றி யோசித்த ஷர்துல்.. மோசமாக டிரோல் செய்யும் நெட்டிசன்கள்!

அப்போது விழா தொடங்கிய போது ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அப்போது ஆளுநரோ "I MK Stalin" என தொடங்கினார்.

கைதட்டல்கள்

கைதட்டல்கள்

ஆனால் மு.க.ஸ்டாலினோ முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என கூறிவிட்டு அப்படியே கெத்தாக நிமிர்ந்து பார்த்தார். அரங்கமே கைத்தட்டி உற்சாகத்தில் மகிழ்ந்தது. அப்போது துர்கா ஸ்டாலின் மட்டும் ஆனந்த கண்ணீர் சிந்தினார்.

பதவியேற்பு

பதவியேற்பு

இதுவரை அமைச்சர், துணை முதல்வராக பதவியேற்று கொண்ட போதிலும் முக ஸ்டாலின் எனும் நான் என்றுதான் பதவியேற்று கொண்டார். கருணாநிதி உயிருடன் இருந்த காலத்தில் கூட அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் ஸ்டாலின்தான் முதல்வர் பதவியையேற்பார் என சொல்லப்பட்டது.

திமுக ஆட்சி

திமுக ஆட்சி

இந்த நிலையில் ஜெயலலிதா மறைந்தபிறகு திமுக ஆட்சி அமைக்க எத்தனை வழிகள் இருந்த போதிலும் அதை ஸ்டாலின் மறுத்துவிட்டார். கொள்ளைப்புறமாக ஆட்சியை பிடிப்பதை நான் விரும்பவில்லை. மக்களின் ஏகோபித்த ஆதரவுடன்தான் ஆட்சியை பிடிப்பேன் என கூறி தனக்கு கிடைத்த எத்தனையோ சந்தர்ப்பங்களை ஸ்டாலின் மறுத்துவிட்டார்.

கட்சி

கட்சி

இதனால் கட்சியினருக்கு சரி பொதுமக்களுக்கும் சரி ஸ்டாலின் மீது ஒருவித மரியாதை கூடியது. இந்த முறை எப்படியாவது "மு.க.ஸ்டாலின் எனும்நான்" என்ற வார்த்தையை கேட்க தொண்டர்கள் விரும்பினர். ஆனால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என கூறி திமுகவினரையே ஆச்சரியத்தில் மூழ்கடித்துவிட்டார் ஸ்டாலின்.

English summary
What happened when MK Stalin swear in as CM of Tamilnadu?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X