சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்த 6 மணி நேரம்.. லேசாக மாறிய நிவர்.. கடைசி நேர டிவிஸ்ட்.. புயல் கரையை கடக்கும் போது நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: இன்று அதிகாலை 2.30 மணிக்கு தமிழகத்தில் நிவர் புயல் கரையை கடந்தது எப்படி என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.

நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முதல்நாள் காலை தொடங்கிய மழை விடாமல் தமிழகம் முழுக்க வெளுத்தெடுத்து வருகிறது.

முக்கியமாக சென்னையில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. சென்னையின் புறநகர் பகுதிகள் இந்த மழை காரணமாக வெள்ளக்காடாக மாறியுள்ளது.

நிவர் புயல் காரணமாக மூடப்பட்ட சென்னை விமான நிலையம் மீண்டும் திறப்பு நிவர் புயல் காரணமாக மூடப்பட்ட சென்னை விமான நிலையம் மீண்டும் திறப்பு

எப்படி

எப்படி

இன்று அதிகாலை 2.30 மணிக்கு தமிழகத்தில் நிவர் புயல் கரையை கடந்தது எப்படி என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. நேற்று மதியம் 3 மணிக்கு இந்த புயல் அதி தீவிர புயலாக உருவெடுத்தது. இதனால் புயல் தாக்கும் வேகம் 145-153 கிமீ வேகத்தில் இருக்கும் என்று கணிக்கப்பட்டது.

மேற்கு

மேற்கு

இது 15-16 கிமீ வேகத்தில் நகர்ந்தது. அதேபோல் இந்த புயல் தொடக்கத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தது. மொத்தமாக மேற்கு நோக்கி நகரமாக சில நிமிடம் மேற்கு நோக்கியும், பின் லேசாக வடக்கு நோக்கியும் நகர்ந்தது. இதனால் புயல் எங்கே கரையை கடக்கும் என்று குழப்பம் ஏற்பட்டது.

குழப்பம்

குழப்பம்

முதல் கட்ட கணிப்புகளின்படி இந்த புயல் காரைக்கால் அருகே கரையை கடக்கும் என்றுதான் கூறப்பட்டது. ஆனால் நிவர் புயல் அதி தீவிரமாக உருவெடுத்த பின் கொஞ்சம் கொஞ்சமாக திசை மாறியது. மேற்கு திசையில் இருந்து வடமேற்கு திசை நோக்கி நகர தொடங்கியது. இதனால் பாண்டிச்சேரி நோக்கி சென்ற நிவர் புயல் விழுப்புரம் பக்கம் வந்தது.

கடந்தது

கடந்தது

இங்குதான் புயலின் பாதையில் டிவிஸ்ட் ஏற்பட்டது. லேசாக நிவர் வழிமாறிய நிலையில், காரைக்காலை விட மரக்காணத்திற்கு மிக அருகில் புயல் கரையை கடந்து உள்ளது. இந்த புயலுக்கு கண் பகுதி இல்லையென்றாலும் இதன் மையம் மிகவும் வலிமையாக இருந்தது. இது கரையை கடக்க அதிக நேரம் எடுத்தது. மொத்தமாக இந்த புயல் கரையை கடக்க 5-6 மணி நேரங்கள் ஆகும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் கிட்டத்தட்ட 4 மணி நேரங்களில் புயல் கரையை கடந்துள்ளது.

வேகம்

வேகம்

இந்த புயல் காரணமாக மொத்தம் 143 கிமீ வேகத்தில் காற்று வீசியது. நினைத்ததை விட புயல் வலிமையாகவே இருந்தது. புயல் பெய்வதற்கு முன் அதிக மழை இருந்தது. புயலின் போது குறைந்த மழை, புயல் கடந்ததும் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. கரையை கடந்த பின் புயல் தொடர்ந்து வடமேற்கு திசையில் சென்றது.

எங்கே

எங்கே

மரக்காணத்தை தாண்டிய புயல் அப்படியே ஆந்திரா பக்கம் சென்றது. தூரம் செல்ல செல்ல இதன் அழுத்தம் குறைந்தது. அதி தீவிர புயல் தீவிர புயலாக மாறி தற்போது சாதாரண நிவர் புயலாக உள்ளது. இன்னும் 1-2 மணி நேரங்களில் இந்த புயல் மொத்தமாக வலிமை இழந்து ஆந்திர பிரதேசத்தை சென்று அடையும்.

English summary
What happened when Nivar Storm took landfall in Tamilnadu early morning?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X