• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

வச்சுக்கோங்க.. அவர்தான் சபாநாயகர்.. கொளுத்திபோட்ட பாஜக.. "சிஎம்" காட்டும் கறார்.. "ஜெர்க்" ஆன டெல்லி

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக தன் கெத்தை காட்ட முயன்றால், ரங்கசாமி அதற்கு மேல் ஒரு கெத்தை காட்டி, பாஜகவையே மிரள வைத்து கொண்டிருக்கிறார்.. எனவே, நாளுக்கு நாள் புதுச்சேரி அரசியலில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் நடக்கிறதே தவிர, இப்போதைகுகு ஆட்சி அமைவதுபோல தெரியவில்லை..!

தமிழ்நாட்டுக்கும், பாண்டிச்சேரிக்கும் ஒன்றாகத்தான் தேர்தல் நடந்து, ரிசல்ட்டும் ஒன்றாகவே வந்தது.. இதையடுத்து, ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று கொண்டார்.. கொரோனா தடுப்பு பணிகள் உட்பட அடுத்தடுத்த வேலைகளிலும் முழுமையாக களமிறங்கி விட்டார்.

ஆனால், புதுவையில், இன்னும் யார் அமைச்சர்கள் என்றே தெரியவில்லை.. பதவி ஏற்றதுமே ரங்கசாமி ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிவிட்டார்.. அவர் டிஸ்சார்ஜ் ஆகி வருவதற்குள் பாஜக, உள்ளே புகுந்து நியமன எம்எல்ஏக்களை அமர்த்தி, அது பெரும் புகைச்சலை தந்துவிட்டது.

புதுவை க்ளைமாக்ஸ் ஓவர்... சபாநாயகர் பிளஸ் 2 அமைச்சர்கள் பதவி.. பாஜக நெருக்கடிக்கு பணிந்தார் ரங்கசாமிபுதுவை க்ளைமாக்ஸ் ஓவர்... சபாநாயகர் பிளஸ் 2 அமைச்சர்கள் பதவி.. பாஜக நெருக்கடிக்கு பணிந்தார் ரங்கசாமி

பாஜக

பாஜக

ரங்கசாமி டிஸ்சார்ஜ் ஆகி வந்தும் பிரச்சனை தீரவில்லை.. துணை முதல்வர் பதவி தந்தே ஆக வேண்டும் என பாஜக எம்எல்ஏ நமச்சிவாயம் பிடிவாதம் பிடிக்கிறார்.. அதற்கு ஒப்புக் கொள்ள முடியாது என்று ரங்கசாமி கறாராக சொல்லி வருகிறார்.. மேலும் பாஜக கேட்ட அமைச்சர் பதவியையும் ஒதுக்க ரங்கசாமி விரும்பவில்லை..

சண்டை

சண்டை

இப்படி பாஜகவும் - என்ஆர் காங்கிரசும் ஒரு சுமூக முடிவுக்கு வராமல், மக்களை கவனிக்காமல், தொற்றையும் குறைக்க முடியாத சூழல் அங்கு நிலவு வருகிறது.. இவர்களுக்குள் சண்டை எப்போது முடிந்து, எப்போது அரசு எந்திரம் செயல்பட போகிறதோ என்ற கவலையும் புதுச்சேரியை சூழ்ந்துள்ளது.. இந்நிலையில், புதுச்சேரி அரசில், என்னென்ன மாறுதல்கள் ஏற்படும்? பாஜகவின் அடுத்த குறி என்னனவாக இருக்கும் என்பன போன்ற வியூகங்களும் நம்மிடம் எழுந்து வருகின்றன..

சிஸ்டம்

சிஸ்டம்

எல்லாரும் தேர்தலை முன்வைத்து அரசியல் செய்வார்கள் என்றால், பாஜக தேர்தலுக்கு பிறகுதான் தன்னுடைய அரசியலையே கையில் எடுக்கும்.. வடமாநிலங்களில் அப்படித்தான் நடந்து வருகிறது.. அப்படித்தான் பெரும்பாலான மாநிலங்களில் தன் ஆட்சியை விரிவுபடுத்தி வருகிறது.. முழுமையாக இல்லாவிட்டாலும், ஆட்சியில் பங்கு என்ற புது சிஸ்டத்தை கொண்டு வந்து அரங்கேற்றி கொண்டிருக்கிறது பாஜக.

கறார்தன்மை

கறார்தன்மை

அப்படித்தான் புதுச்சேரியிலும் என்ட்ரி தந்தது.. அதற்காக, இப்படி, வியூகம் அமைத்து, எடுத்து எடுப்பிலேயே பாஜக முன்னேறும் என்று யாருமே நினைக்கவில்லை.. துணை முதல்வர், சபாநாயகர் பதவிகளுடன் இரண்டு அமைச்சர் பதவியையும் கேட்டு செக் வைத்தது.. அதிலும் ரங்கசாமி ஆஸ்பத்திரியில் அட்மின் ஆன நேரத்தில், 3 சுயேட்சை எம்எல்ஏக்களை வளைத்து, தன்னுடைய பலத்தை பெருக்கி கொண்டதுடன், ரங்கசாமி டிஸ்சார்ஜ் வந்ததுமே, கறார் தன்மையை மறுபடியும் காட்ட துவங்கியதே பாஜகவின் கைதேர்ந்த அரசியல்..!

பிடிவாதம்

பிடிவாதம்

ரங்கசாமியை பொறுத்தவரை கறார் பேர்வழி.. ஜெயலலிதா காலத்தில் இருந்தே, யாருக்கும் வளைந்து போகாதவர், பாஜகவின் வியூகம் அனைத்தும் தெரிந்தும், தன்னுடைய பிடிவாதத்தை பன்மடங்காக பெருக்கி, பாஜகவுக்கே போக்கு காட்டி கொண்டிருக்கிறார்.. இப்படி ஒரு இழுபறி நிலையை எந்த மாநிலத்திலும் பாஜக சந்தித்தது இல்லை.. ஒற்றை ஆளாக, தேசிய கட்சியான பாஜகவை ரங்கசாமி சமாளித்து கொண்டிருக்கிறார்..

 அமித்ஷா

அமித்ஷா

இது சம்பந்தமாக அமித்ஷாவே போன் போட்டு கூப்பிட்டும், அந்த போனை எடுக்காமல் தவிர்க்கும் துணிச்சல் ரங்கசாமிக்கே பொருந்தும்... இதனால் அரண்டு போன பாஜக, வேறு வழியில்லாமல்தான், லேசாக பணிய தொடங்கி உள்ளது.. சுமூக பேச்சுவார்த்தை என்ற முடிவுக்கும் வந்துள்ளது.

 அமித்ஷா

அமித்ஷா

அதனாலேயே ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல தமிழிசை சென்றபோது, இந்த விவகரம் தொடர்பான பேச்சை ஆரம்பித்துள்ளார்.. அதற்குபிறகுதான் அமித்ஷாவுக்கு போன் போடப்பட்டு, ரங்கசாமி பேசியதாகவும் தெரிகிறது.. ஆனால், இது குறித்தெல்லாம் எந்தவித அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகாத நிலையில், பாஜகவின் மாநில தலைவர் சாமிநாதன் திடீரென செய்தியாளர்களிடம் "எங்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டுவிட்டது... பாஜகவின் எம்எல்ஏதான் சபாநாயகர் வேட்பாளர்" என்று கொளுத்தி போட்டு விட்டு போயுள்ளார்.

பாஜக

பாஜக

அதுவும் இல்லாமல், பாஜகவின் நியமன எம்எல்ஏக்களில் ஒருவரான அசோக் பாபுதான் சபாநாயகர் வேட்பாளராக அறிவிக்க போவதாகவும் தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது.. இதுதான் பாஜக.. தேர்தலுக்கு முன்பு, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ரங்கசாமிதான் தலைமை வகிப்பார் என்று சொல்லிவிட்டு, 3 எம்எல்ஏக்கள் நியமனம் முதல், அதில் ஒரு எம்எல்ஏ வாபஸ் என்பது முதல், பாஜகவின் சபாநாயகர் வேட்பாளர் வரை அனைத்து முடிவுகளையும், தன் விருப்பப்படியே அறிவித்து வருகிறது.. ஆனால், எதற்குமே ரங்கசாமி வாய் திறக்காமல் இருக்கிறார்..

முயற்சி

முயற்சி

அமைச்சரவை விவகாரம் குறித்து பலமுறை முயன்றும் ரங்கசாமி பிடி கொடுக்காததால் இனி அவராக அழைக்கும் வரை இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த செல்வதில்லை என்று பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது..

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

அதேசமயம், பாஜக பொறுப்பாளர்கள் சிடி ரவி உட்பட, முக்கிய பிரமுகர்கள் ரங்கசாமியிடம் பேச்சுவார்த்தைக்கு வர உள்ளார்கள் என்றும் சொல்லப்படுகிறது.. இதில் எது உண்மை என்று தெரியவில்லை.. யார் வந்தாலும், ரங்கசாமி வாய் திறந்தால்தான் முடிவு தெரியும்.. அதுவரை அமைச்சரவை பதவி ஏற்பு இன்னும் தள்ளிப்போகும் நிலை ஏற்படத்தான் செய்யும்.. அந்த மாநில மக்கள் கொரோனாவில் சிக்கி கொண்டிருப்பதும் நீடிக்கத்தான் செய்யும்போல..!

English summary
What happens next in Puducherry politics
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X