Trust Votes: விஜய் பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால்! ஆளுநர் அடுத்து என்ன செய்வார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தலைவர் விஜய் கேட்டபடியே ஆளுநர் ராஜேந்திர கர்லேகர், பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசம் கொடுத்தும் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க தவறினால் அடுத்து ஆளுநர் என்ன செய்வார் என்பதை பார்க்கலாம்.

தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க.வின் எதிர்பாராத வெற்றி, 59 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. இது அவர்களின் முதல் தேர்தல் வெற்றி. இதன் மூலம் த.வெ.க. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது.

Vijay Fails to Prove Majority

ஆனாலும், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்குத் த.வெ.க. வெற்றி பெறவில்லை. 234 தொகுதிகளில் 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், த.வெ.க. 108 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இதனால், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்த கேள்வி எழுந்துள்ளது.

த.வெ.க. தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வென்றார். விதிகளின்படி ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். மேலும், நம்பிக்கைத் தீர்மானத்தில் வாக்களிக்க இயலாத சபாநாயகரும் கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இது த.வெ.க.வின் பலத்தை இரு இடங்கள் குறைக்கும்.

இந்தக் கணக்கீட்டின்படி, த.வெ.க. தனது பெரும்பான்மையை நிரூபிக்க, கூடுதலாக 12 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகளில் உள்ள கட்சிகளின் ஆதரவு த.வெ.க.விற்கு கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் (5), இரு கம்யூனிஸ்டு கட்சிகள் (4), தே.மு.தி.க (1), இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (2), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2) என 15 இடங்கள். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. (4), பா.ஜ.க. (1), அ.ம.மு.க. (1) என 6 இடங்கள். இக்கூட்டணிகளிலிருந்து ஆதரவு கிடைத்தால், த.வெ.க.வுக்கு 21 கூடுதல் இடங்கள் கிடைக்கும். ஆனால் பாமக ஆதரவு தருமா என்பது சந்தேகம்தான்.

தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் நாளை சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகைக்கு வரவுள்ளார். அவர் த.வெ.க.வுக்கு ஆட்சி அமைக்க இரு வாய்ப்புகளை வழங்குவார். விஜய் பெரும்பான்மையைச் சட்டசபையில் நிரூபிக்க உத்தரவிடுவார் அல்லது ஆதரவு கடிதங்களைப் பெற்று தன்னைச் சந்திக்குமாறு அறிவுறுத்துவார்.

118 இடங்களுக்கு மேல் ஆதரவு உறுதி செய்யப்பட்டால், ஆட்சி அமைக்க த.வெ.க.வுக்கு அழைப்பு விடுக்கப்படும். பெரும்பான்மை நிரூபிக்கப்படாவிட்டால், அதிக இடங்களைக் கொண்ட தி.மு.க.வை ஆளுநர் அழைப்பார்.

திமுக கூட்டணி இணைந்தே 73 இடங்களில் வென்றிருக்கின்றன. ஒரு சபாநாயகர் போய்விட்டால் 72 திமுக கூட்டணியின் பலம். 118 என்ற மேஜிக் நம்பரை எட்ட 46 இடங்கள் தேவை. இதை திமுக எப்படி பெறும். ஒரு வேளை தவெக, அதிமுகவிடம் குதிரை பேரம் நடத்தப்படுமா? தவெக எம்எல்ஏக்கள் விஜய் வெறியர்கள், அவர்கள் திமுகவுக்கு ஆதரவு என்பதால் நினைத்து பார்க்க முடியாது. திமுக- அதிமுக இணைந்து கூட்டணி என்பதெல்லாம் கற்பனைக்குக் கூட எட்டாத விஷயம்.

ஆனால் உண்மையில் ஸ்டாலின் புறவாசல் வழியாக ஆட்சி அமைக்க விரும்ப மாட்டார். அப்படி ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் அவருக்கு கிடைத்த எத்தனையோ சான்ஸ்களை மிஸ் செய்திருக்க மாட்டார். இன்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூட, வலிமையான எதிர்க்கட்சியாக இருப்போம் என சொல்லிவிட்டார்.

எனவே திமுகவும் நேர்மையாக பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால் அடுத்து தமிழகம் ஆறு மாதம் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் வரும், பின்னர் 234 தொகுதிகளுக்கும் மறுதேர்தல் நடத்தப்படும். Calculative -ஆக எல்லா இடங்களிலும் சொல்லி அடித்த விஜய்க்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகாது என்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+