சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Anbumani:ஆட்சியை பிடிப்பது நோக்கம் இல்லைன்னா.. எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாங்கன்னு கேட்டது என்னவாம்

Google Oneindia Tamil News

Recommended Video

    இதனால்தான் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்தோம் - அன்புமணி விளக்கம்!

    சென்னை: மாற்றம், முன்னேற்றம் என்ற மந்திரத்துடன் தமிழக அரசியலில் ஒரு கலக்கு கலக்கியவர் அன்புமணி ராமதாஸ். இவரது செயலால் தற்போது தாங்கள் ஏமாற்றமடைந்தோம் என அவரது கட்சியினர் முணுமுணுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு வகை அதிர்ச்சியையும் டுவிஸ்டையும் கொடுக்கும் என்பர். அது போல் தேர்தலுக்காக அமைக்கப்படும் கூட்டணி குறித்த தகவல்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

    அந்த வகையில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றவர் பாமக நிறுவனர் ராமதாஸ். மேலும் அதிமுகவை விமர்சித்து, அதன் ஊழல்களை தோலுரித்து காட்டியவர்களுள் அன்புமணிக்கு பெரும் பங்கு உண்டு.

    அன்புமணி

    அன்புமணி

    இத்தகைய சூழலில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்துள்ளது பெரும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் எழுப்புகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

    நோக்கம்

    நோக்கம்

    அதில் அவரிடம் செய்தியாளர்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது எங்களின் நோக்கமல்ல. தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் காண வேண்டும் என்பதே நோக்கம் என்று கூறியுள்ளார்.

    மதுவிலக்குதான்

    மதுவிலக்குதான்

    இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இத்தனை நாட்களாக எங்களுக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள் தமிழகத்தையே மாற்றிக் காட்டுகிறோம் என அமெரிக்கன் அரசியல்வாதி போல் ஸ்டைலாக பேசி கொண்டிருந்தார். அது மட்டுமா எத்தனை பில்டப். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே மதுவிலக்குதான் என்றெல்லாம் வியாக்யானம் பேசினார்.

    தடுமாற்றம்

    தடுமாற்றம்

    ஆனால் இன்றோ அதையெல்லாம் பேசாதது போல் நினைத்துக் கொண்டு தமிழகத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல என்று கூறியுள்ளதை பார்க்கும் போது ஏதோ பதில் சொல்ல முடியாமல் மாற்றம் ஏமாற்றம், தடுமாற்றத்தின் பேரில் இவ்வாறு சொல்லியுள்ளார் என்றே தெரிகிறது. இதை எல்லாம் பார்க்கும் போது நிச்சயம் எதிர்க்கட்சிகள் சொல்வதை போல் சந்தர்ப்பவாத கூட்டணியோ என எண்ணத் தோன்றுகிறது.

    English summary
    Anbumani Ramadoss is not answering seriously and properly in his press meet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X