சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதற்கு தடை நீடிப்பு..புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து இல்லை முழு லிஸ்ட்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

Recommended Video

    தமிழகத்தில் 4 முக்கியமான தளர்வு, முதல்வர் பழனிசாமி அதிரடி

    புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை. பள்ளிகள், கல்லூரிகள் இயங்க அனுமதி இல்லை என்று அரசு அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்பட்டியலை பார்ப்போம்

    தமிழகத்தில் அதிரடி தளர்வுகள்.. இ-பாஸ் முதல் ஞாயிறு லாக்டவுன் வரை.. சந்தேகங்களும்.. விளக்கமும்!தமிழகத்தில் அதிரடி தளர்வுகள்.. இ-பாஸ் முதல் ஞாயிறு லாக்டவுன் வரை.. சந்தேகங்களும்.. விளக்கமும்!

    தமிழகத்தில் இ - பாஸ் முறையில் தளர்வு.. பொது போக்குவரத்துக்கு அனுமதி.. தமிழக அரசு அதிரடி!தமிழகத்தில் இ - பாஸ் முறையில் தளர்வு.. பொது போக்குவரத்துக்கு அனுமதி.. தமிழக அரசு அதிரடி!

    செப் 7ம் தேதி முதல் சென்னையில் ஓடப்போகுது மெட்ரோ ரயில்... மகிழ்ச்சியான அறிவிப்புசெப் 7ம் தேதி முதல் சென்னையில் ஓடப்போகுது மெட்ரோ ரயில்... மகிழ்ச்சியான அறிவிப்பு

    செப்.1 முதல் பேருந்துகள் இயக்கம்- வழிபாட்டு தலங்கள் திறப்பு... இயல்பு நிலைக்கு திரும்பும் தமிழகம்செப்.1 முதல் பேருந்துகள் இயக்கம்- வழிபாட்டு தலங்கள் திறப்பு... இயல்பு நிலைக்கு திரும்பும் தமிழகம்

    தமிழகத்தில் இ-பாஸ் தளர்வு.. உடனே வெளிமாநிலத்தில் இருந்து கிளம்பி வர வேண்டாம்.. இதை கொஞ்சம் படிங்க!தமிழகத்தில் இ-பாஸ் தளர்வு.. உடனே வெளிமாநிலத்தில் இருந்து கிளம்பி வர வேண்டாம்.. இதை கொஞ்சம் படிங்க!

    முதல்வர் பழனிசாமி அதிரடி.. தமிழகத்தில் 4 மிக முக்கியமான தளர்வு.. எதற்கெல்லாம் அனுமதி? முழு விபரம்!முதல்வர் பழனிசாமி அதிரடி.. தமிழகத்தில் 4 மிக முக்கியமான தளர்வு.. எதற்கெல்லாம் அனுமதி? முழு விபரம்!

    தமிழகத்தில் பொது ஊரடங்கு .. செப்.30 வரை தளர்வுகளுடன் நீட்டிப்பு.. முதல்வர் அறிவிப்புதமிழகத்தில் பொது ஊரடங்கு .. செப்.30 வரை தளர்வுகளுடன் நீட்டிப்பு.. முதல்வர் அறிவிப்பு

    ஆன்லைன் கல்வி

    ஆன்லைன் கல்வி

    பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள் அடுத்த ஒரு மாதத்திற்கு திறக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. எனினும், கல்வி இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்குவிக்கலாம் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

    திரையரங்குகள்

    திரையரங்குகள்

    தமிழகத்தில் திரையரங்குகளை அடுத்த ஒரு மாதத்திற்கு திறக்க தடை விதித்துள்ளது. நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை திறக்க தடை விதித்துள்ளது. இதனால் இ பாஸ் ரத்து செய்தாலும் சுற்றுலாவிற்காக யாரும் எங்கு செல்ல முடியாது. கேளிக்கை தளங்களுக்கும் செல்ல முடியாது.

    மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் எந்த சர்வதேச விமானமும் அடுத்த ஒரு மாதத்திற்கு சென்று வராது. உள்ளூர் விமான போக்குவரதது இயங்கும். நகரங்களுக்கு இடையிலான விமான போக்குவரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது.

    ரயில் போக்குவரத்து

    ரயில் போக்குவரத்து

    சென்னையில் மட்டும் தான் புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து இருக்கிறது. அடுத்த ஒரு மாதத்திற்கு புறநகர் ரயில்போக்குரத்து செயல்படாது என்று அரசு அறிவித்துள்ளது. எனினும் மெட்ரோ ரயில் வரும் செப்டம்பர் 7ம் தேதி வரை இயங்க போகிறது.

    மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த உள்ள விதிக்கப்பட்ட தடை அடுத்த ஒரு மாதத்திற்கு தொடரும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் யாரும் கூட்டங்கள் நடத்த முடியாது. குறிப்பாக அரசியல் கூட்டங்கள், போராட்டம், ஊர்வலம் நடத்த முடியாது.

    கொடைக்கானல் செல்ல தடை

    கொடைக்கானல் செல்ல தடை

    இபாஸ் இல்லையே இனி ஜாலியாக ஊட்டி, கொடைக்கானலுக்கு டூர் போகரலாம் என்று எண்ண வேண்டாம். ஏனெனில் அந்த ஊரை சாராதவர்கள் யாரும் நுழைய முடியாது.
    நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து மலை வாசஸ்தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்லுவதை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதியுடன் இ பாஸ் பெற்று செல்ல அனுமதிக்கப்படுவர் என்று அரசு அறிவித்துள்ளது.

    சினிமா ஷூட்டிங் அனுமதி

    சினிமா ஷூட்டிங் அனுமதி

    திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரே சமயத்தில் 75 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும், படப்பிடிப்பின் போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

    English summary
    Extension of ban on opening schools and colleges, No suburban electric train transport, What is banned in Tamil Nadu for the next one month, details here.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X