இன்னிக்கு நீ எம்எல்ஏ நேர்காணலில்.. நாளை அமைச்சரவையில்.. அதில் நானும்.. துரைமுருகன் மைன்ட் வாய்ஸ்!
சென்னை: சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்த உதயநிதி ஸ்டாலினிடம் துரைமுருகன் ஏதோ சிரித்து பேசுகிறார். இதை பார்த்தால் உதய்! இன்னிக்கு நீ எம்எல்ஏ நேர்காணலில் இருக்கிறாய், நாளை அமைச்சரவையில் இருப்பாய், அதில் நானும் இருக்க வேண்டும் ஓகே வா என துரைமுருகன் கேட்டது போல் கற்பனையாக இந்த செய்தி விளக்குகிறது.
திமுக இளைஞரணி செயலாளராக உள்ளார் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின். திரைப்பட நடிகரான இவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். திமுகவின் வெற்றிக்காக விடியலை நோக்கி ஸ்டாலின் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே இவர் தொடங்கி விட்டார்.
நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு இவரும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. இதனால் இவருக்கு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என உதயநிதி ஆதரவாளர்கள் விரும்புகிறார்கள்.

திருவல்லிக்கேணி தொகுதி
இந்த நிலையில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் விருப்பமனு தாக்கல் செய்தார். இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் நடந்த நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது துரைமுருகன் ஏதோ கேட்க அதற்கு மற்ற உறுப்பினர்கள் சிரிக்கிறார்கள்.

நெளிந்த உதயநிதி
உதயநிதியோ எதையோ நெளிந்து கொண்டே சிரிக்கிறார். அப்படி துரைமுருகன் என்னதான் சொல்லியிருப்பார் என்பதை நாமே கற்பனையாக இந்த செய்தியை பிரசுரித்துள்ளோம். பொதுவாக கருணாநிதியுடன் பழகிய துரைமுருகனுக்கு யூமர் சென்ஸ் அதிகம். சட்டசபையிலும் அவர் சிரிப்பை வரவழைக்கும்படி பேசுவார்.

உதயநிதி
அவரது வீட்டில் ரெய்டு நடந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, வருமான வரித் துறையினர் வந்தபோது நான் குளித்து கொண்டிருந்தேன் என கூறியது அனைவரையும் சிரிப்பில் மூழ்கடித்தது. அது போல் இவர் உதயநிதியிடம் என்னவெல்லாம் கேட்டிருப்பார் என்பதை பார்ப்போம்.

உன் பேரு
1. என்ன உதய் இந்த பக்கம் கூட்டத்தை பார்த்துட்டு ஷூட்டிங்னு நெனச்சியா. 2. உதய்! என்ன இந்த பக்கம்? அப்பாவ பாக்க வந்தியாப்பா, 3. ஆமா உன் பேரு என்ன? என்ன படிச்சிருக்கே? 4. சேப்பாக்கத்துல கரை சேர்ந்துடுவியாப்பா, 5. என்ன ஜெயிச்சுட்டா இனி அடிக்கடி உன் பிரண்டு பார்த்தாவை பார்க்க போவீயா (திருவல்லிக்கேணி தொகுதி- பார்த்தசாரதி கோயில்), 6. உதய்! இன்னிக்கு நீ எம்எல்ஏ நேர்காணலில் இருக்கிறாய், நாளை அமைச்சரவையில் இருப்பாய், அதில் நானும் இருக்க வேண்டும் ஓகே வா. இப்படியெல்லாம் அவர் கேட்டிருப்பார் என சிரிப்புக்காக கற்பனையான உரையாடல் இது. யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல!.