சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மய்யம் பாதி.. கழகங்கள் மீதி.. கமல் யாருடன் கூட்டணி வைப்பார்?

யாருடன் மக்கள் நீதிமய்யம் கூட்டணி வைக்கும்?

Google Oneindia Tamil News

Recommended Video

    லோக் சபா தேர்தல்: மக்கள் நீதி மய்யம் - திமுக ஒரே கூட்டணியில் இருக்குமா?- வீடியோ

    சென்னை: கடைசியில யாரு கூடதான் கமல் கூட்டணி வைப்பார்?

    கட்சி ஆரம்பிச்சு முழுசா ஒரு வருஷம்கூட முடியல... ஆனால் கமல் ஆளுங்கட்சி தரப்பை பிரித்து மேய ஆரம்பித்துவிட்டார்.

    ட்விட்டர் போர் என்பது கமலுக்குதான் சரியாக பொருந்தும். சில ட்வீட்கள் புரியவில்லை என்றாலும் அமைச்சர்களை ஏதோ காரசாரமாக திட்டுகிறார் என்பது மட்டும் தெரிந்து விடுகிறது. அதனால் அதிமுகவுடன் கமலுக்கு ஆரம்பத்திலிருந்தே அக்கப்போர்தான்!!

    அதிமுகவை அதிகமாக சாடுவதால் திமுகவுடன் நெருக்கமாகிறார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியது. உண்மையிலேயே கமல் என்னவோ திமுகவுடன் ஒன்றுசேர காத்திருந்தார்.

    ஓபன் ஸ்டேட்மெண்ட்

    ஓபன் ஸ்டேட்மெண்ட்

    இதற்காக திமுகவை அதிக அளவு விமர்சித்துக்கூட கருத்துக்களை சொன்னதில்லை. அதேபோல, திமுக நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டங்களுக்கும் தன்னை அழைப்பார்கள் என்றும் எதிர்பார்த்தால், ஒரு கட்டத்தில், "அழைப்பு வந்தால் கலந்து கொள்வோம்" என்று கூட ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்தார்.

    நல்லது நினைப்பவர்கள்

    நல்லது நினைப்பவர்கள்

    ஆனால் திமுகதான் அதை கண்டுகொள்ளாமலேயே விட்டுவிட்டது. அதேபோல செய்தியாளர்கள் கமலை சந்தித்தபோதெல்லாம், திமுகவுடன் கூட்டணி வைப்பீர்களா? என கேட்டனர். அதற்கு, "நல்லது செய்ய நினைக்கிறவர்களுடன் கூட்டணி வைப்பேன்" என்றும் ஒரு படிமேல போய் சொன்னார். ஆனாலும் திமுக இதையும் சட்டை செய்யவில்லை.

    உடையும் வாய்ப்பு?

    உடையும் வாய்ப்பு?

    திமுகவுடனான தனது ஆதங்கத்தை எல்லாம் சேர்த்து தொலைக்காட்சி ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல், "திமுக, காங்கிரஸ் கூட்டணி உடைய கூடிய வாய்ப்பு உண்டு. அப்படி கூட்டணி உடையும் பட்சத்தில் வரும் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் இணைந்து போட்டியிடும்.

    குழப்பம்

    குழப்பம்

    அதேபோல, அதிமுக, திமுகவை தமிழக அரசியலில் இருந்து அகற்ற மக்கள் நீதி மய்யம் பாடுபடும், திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்காது" என்று சொன்னார். திமுக - காங்கிரஸ் கூட்டணி எந்த விரிசலுமின்றி சென்று கொண்டிருந்த சூழலில் கமலின் இந்த கருத்து, பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. இதோடு திமுக - கமல் பற்றின நினைப்பே எழ முடியாமல் போய்விட்டது.

    கூட்டணி?

    கூட்டணி?

    காங்கிரசோடு கூட்டணி என்று கமல் சொல்லிவிட்டார். இதற்காக டெல்லி சென்று ராகுலை பார்த்து பேசிவிட்டு வந்தார். ஆனால் கூட்டணி குறித்து பேசவில்லை என்றும் சொன்னார். இதுகுறித்து அப்போது கருத்து தெரிவித்த திருநாவுக்கரசரோ, "ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸுடன் கூட்டணியில் இணைவதாகக் கமல் கூறியுள்ளார்" என்றார்.

     டிடிவி தினகரன்

    டிடிவி தினகரன்

    இன்னொரு பக்கம் குஷ்பு, "கமல் வந்தால் வரவேற்போம்" என்றார். இப்போது திமுக - காங்கிரஸ், அல்லது கமல் - காங்கிரஸா? என்று தெரியாத நிலை உள்ளது. மீதமிருப்பது அமமுக, பாமக, விடுதலைசிறுத்தைகள், போன்றவைதான். இதுவரை கமல் டிடிவி தினகரனையும், அன்புமணியையும், திருமாவளவனையும் கடிந்து பேசியதில்லை.

    புரியவில்லை

    புரியவில்லை

    தினகரனுக்கும் அன்புமணிக்கும் முதல்வர் ஆசை உள்ளதால் ஏற்கனவே முதல்வர் ஆசை உள்ள கமல் ஏற்பாரா என தெரியவில்லை. ஆகவே இந்த நிமிஷத்தை பொறுத்தவரை கமலுக்கு யாருடன் கூட்டணி என்பது அவரது சில ட்வீட் போலவே புரியாமலேயே உள்ளது!!

    English summary
    MNM Kamal told to put up a coalition with Congress. But he has already said that will not have a coalition with dmk and admk. So far no one knows about the Kamal's decision about alliance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X