ஹெலிகாப்டரில் வந்து ஏர்போர்ஸில் ரிட்டர்ன்.. பக்கா பிளானோடு தமிழ்நாடு வரும் மோடி.. நாளை அது நடக்குமா?
சென்னை: பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வர உள்ள நிலையில், அவரின் வருகையை முன்னிட்டு பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒருநாள் பயணமாக பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வருகிறார். பிரதமர் மோடி பயணத்தின் போது ரூ31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இந்த பயணத்தின் போது சென்னையில் இருந்து, மதுரை - தேனி அகல ரயில்பாதையை ரிமோட் கண்ட்ரோல் மூலம் பிரதமர் மோடி துவங்கி வைக்க இருக்கிறார். தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள், ரயில்வே துறையின் புதிய திட்டங்களை பிரதமர் மோடி இந்த நிகழ்வில் தொடங்கி வைக்க உள்ளார்.
சீனாவுக்கு எதிராக..அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஆஸி. பிரதமர் அல்பானீசுடன் பிரதமர் மோடி பேசியது என்ன?

மோடி
பிரதமர் மோடியின் இந்த தமிழ்நாடு பயண திட்டம் மிகவும் டைட்டாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரே ஒருநாள்தான் பயணம். அதிலும் மாலைக்கு பின்புதான் பயணம் மேற்கொள்கிறார். நாளை காலை ஹைதராபாத் வரும் பிரதமர் மோடி அங்கு பல கூட்டங்களை முடித்துவிட்டு மாலை 5.10 மணிக்கு சென்னைக்கு வருகிறார். தனி விமானம் மூலம் சென்னை பழைய விமான நிலையத்திற்கு வருகிறார்.

மோடி தமிழ்நாடு
அங்கிருந்து ஹெலிகாப்டர் எடுத்துக்கொண்டு ஐஎன்எஸ் அடையாறுக்கு வருவார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் நேரு விளையாட்டு அரங்கத்திற்கு வருகிறார். இங்குதான் பிரதமர் மோடி விழாவில் கலந்து கொள்வார். அங்கு பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் வரவேற்க இருக்கிறார். மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் இந்த நிகழ்வில் இடம்பெறுவார்கள்

சந்திப்பு நடக்குமா
அதன்பின் நிகழ்ச்சியை முடித்துவிட்டு கார் மூலம் மீண்டும் ஐஎன்எஸ் அடையாறு செல்கிறார் பிரதமர் மோடி. பின்னர் அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் சென்னை பழைய விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து இந்திய விமானப்படை விமானத்தில் டெல்லிக்கு திரும்புகிறார். பிரதமர் மோடியை இந்த பயணத்தில் சந்திக்கும் பாஜக தலைவர்கள் பலர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பிரதமர் மோடியின் இந்த தமிழ்நாடு பயண திட்டம் மிகவும் டைட்டாக அமைக்கப்பட்டுள்ளது.

கோ பேக் மோடி
இதனால் இந்த சந்திப்பு நடக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால் பிரதமர் மோடியை வரவேற்க பாஜகவினர் சார்பாக ஆட்கள் களமிறக்கப்பட உள்ளனர். சென்னை முழுக்க பல வார்டுகளில் இருந்து பாஜகவினரை களமிறக்கி மோடிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க உள்ளனர். அதே சமயம் ஆளும் தரப்பில் இருந்து அதிகாரபூர்வ வரவேற்பு பிரதமர் மோடிக்கு வழங்கப்பட உள்ளது. திமுக ஆளும் கட்சி என்பதால் கோ பேக் மோடி போராட்டத்தை மேற்கொள்ளாது.

திமுக அமைச்சர்கள்
மாறாக திமுக கூட்டணி கட்சிகள் இந்த போராட்டத்தை முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கும் நேரு உள் விளையாட்டு அரங்கை சமீபத்தில் அமைச்சர் ஏ.வ.வேலு பார்வையிட்டார். அங்கு ஏற்பாடுகள் எப்படி உள்ளன, பாதுகாப்புகள் முறையாக செய்யப்பட்டு உள்ளதா என்று ஆய்வு செய்தார். நாளை நிகழ்வில் ஆளும் தரப்பில் இருந்து மூத்த அமைச்சர்கள் சிலர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.