சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 ஜாதி.. உடும்பு பிடி பிடித்த எடப்பாடி! பட்டதெல்லாம் போதாதா.. சட்டென கேட்ட ஓபிஎஸ்! என்னங்க நடக்குது?

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக சார்பில் இன்று ராஜ்ய சபா எம்பி வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்ற எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், கட்சிக்குள் சாதி ரீதியான மோதல்கள் நிலவுவதாக ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவிக்கிறார்கள்.

ராஜ்ய சபா என்பது நாடாளுமன்றத்தில் இருக்கும் மாநிலங்களவை ஆகும். ஜூலையில் தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 6 ராஜ்யசபா இடங்களுக்கும் தேர்தல் நடக்கவிருக்கிறது. சட்டமன்றத்தில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் திமுக 4 இடங்களையும் அதிமுக 2 இடங்களையும் எளிதாக கைப்பற்றும்.

திமுக சார்பில் தஞ்சை கல்யாணசுந்தரம், கேஆர்என் ராஜேஷ்குமார், ரா கிரிராஜன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னொரு எம்பி பதவி காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த 2 பேருக்காக போராடும் ஓபிஎஸ்.. அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்களை அறிவிப்பதில் இதனால்தான் தாமதம்! இந்த 2 பேருக்காக போராடும் ஓபிஎஸ்.. அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்களை அறிவிப்பதில் இதனால்தான் தாமதம்!

ஒருவர் உறுதி

ஒருவர் உறுதி

ஆனால் அதிமுக சார்பில் இன்னும் எம்பி வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் அதிமுக வட்டார தகவலின் படி அதிமுகவின் ஒரு எம்பியாக ஜெயக்குமார் தேர்வு செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாம். அவரை எம்பியாக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தொடக்கத்தில் எதிர்த்தார். ஆனாலும் இவரின் நியமனத்திற்கு மட்டும் சில கண்டிஷன்களுடன் அவர் இறங்கி வந்ததாக கூறப்படுகிறது. அந்த கண்டிஷன்தான் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

வன்னியர்

வன்னியர்

அதன்படி அதிமுகவில் இன்னொரு எம்பி வேட்பாளராக வன்னியர் பிரிவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரை தேர்வு செய்ய எடப்பாடி விரும்பினாராம். கடந்த தேர்தலில் இருந்தே வன்னியர்கள் மீது எடப்பாடிக்கு சாப்ட் கார்னர் உள்ளது. கடந்த முறை வன்னியர்களுக்கு வேலை வாய்ப்பில் 10.5 சதவிகிதம் உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று எடப்பாடி அறிவித்தார். ஆனால் தேர்தல் நேரத்தில் இது அவருக்கு கை கொடுக்கவில்லை.

பாமக கண்டிஷன்

பாமக கண்டிஷன்

வன்னியர்கள் வாக்கு பெரிதாக அதிமுகவிற்கு வரவில்லை. அதோடு அதிமுகவிற்கு ஆதரவாக இருந்த முக்குலத்தோடு வாக்கும் எதிர் பக்கம் சென்றன. இந்த நிலையில்தான் மீண்டும் வன்னியர்களை ஈர்க்கும் வகையில், அப்பிரிவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க எடப்பாடி நினைக்கிறாராம். எடப்பாடி இந்த முடிவில் உடும்பு பிடித்தது போல உறுதியாக இருக்கிறராம். ஆனால் இதை ஓபிஎஸ் விரும்பவில்லை. முக்குலத்தோடு

ஓபிஎஸ் எதிர்ப்பு

ஓபிஎஸ் எதிர்ப்பு

வன்னியர் பிரிவில் இருந்து இன்னொரு எம்பி வருவதை ஓபிஎஸ் விரும்பவில்லை என்கிறார்கள். உங்கள் ஆள் ஜெயக்குமார் எம்பி ஆகிறார். அதனால் எனக்கு ஆதரவாக இருக்கும் ஒருவருக்கு எம்பி பதவி கொடுக்க வேண்டும். கடந்த முறை வன்னியர்களுக்கு சலுகை காட்டியதால் பலன் இல்லையே. அப்போது பட்டதெல்லாம் போதாதா? என்று ஓபிஎஸ் கேட்டு இருக்கிறாராம். இதனால் முக்குலத்தோர் பிரிவில் இருந்து ஒருவர் வர வேண்டும் என்று பன்னீர்செல்வம் கேட்கிறாராம்.

முக்குலத்தோர்

முக்குலத்தோர்


முக்குலத்தோர் பிரிவில் இருந்து ஒரு எம்பி வந்தால் தென் மண்டலத்தில் இழந்த செல்வாக்கை மீட்கலாம். முக்குலத்தோர் vs வன்னியர் ஆகிய இரண்டு ஜாதி பிரச்சனை மீண்டும் அதிமுகவில் தலைதூக்கி உள்ளதாம். சசிகலாவிற்கு பதிலடி கொடுக்கவும் வசதியாக இருக்கும் என்று ஓ பன்னீர்செல்வம் கருதுகிறாராம். ஏற்கனவே ஒரு எம்பி வேட்பாளர் டிக் அடிக்கப்பட்டு விட்டாராம். இன்னொருவரையும் இன்றே டிக் அடிக்க முடிவில் இருக்கிறார்கள். பெரும்பாலும் இன்று இரவிற்குள் வேட்பாளரை அறிவிக்கும் திட்டத்தில் அதிமுக இரட்டை தலைமை இருக்கிறதாம்.

English summary
What is really happening inside the selection process of AIADMK Rajya Sabha candidates? அதிமுக சார்பில் இன்று ராஜ்ய சபா எம்பி வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்ற எதிர்ப்பு நிலபிவி வரும் நிலையில், கட்சிக்குள் சாதி ரீதியான மோதல்கள் நிலவுவதாக ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவிக்கிறார்கள். ராஜ்ய சபா என்பது நாடாளுமன்றத்தில் இருக்கும் மாநிலங்களவை ஆகும். ஜூலையில் தமிழ்நாட்டில்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X