சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2 நபர்கள்.. பல கதைகள்.. எஸ்.ராவிற்கு விருதை பெற்றுக்கொடுத்த சஞ்சாரத்தின் சிறப்பு என்ன தெரியுமா?

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் சாகித்ய அகாடமி விருது பெற்றதை தொடர்ந்து சஞ்சாரம் நாவல் 4 வருடத்திற்கு பின் மீண்டும் வரவேற்பை பெற்றுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சஞ்சாரம் நாவலுக்கு சாகித்ய அகாடமி பெறுகிறார் எஸ்.ரா!

    சென்னை: எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் சாகித்ய அகாடமி விருது பெற்றதை தொடர்ந்து சஞ்சாரம் நாவல் 4 வருடத்திற்கு பின் மீண்டும் வரவேற்பை பெற்றுள்ளது.

    எழுத்தாளர் நாவலாசிரியர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய சஞ்சாரம் நாவல் பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருக்கிறது. 2014ல் எழுதப்பட்ட இந்த நாவலுக்கு, தற்போதுதான் மிகப்பெரிய அங்கீகாரமாக சாகித்ய அகாடமி விருது கிடைத்து உள்ளது.

    தமிழகத்தில் அழிந்து வரும் கலையான நாதஸ்வர கலையை குறித்துதான் இந்த நாவல் விவரிக்கிறது. ஒரு கதை அதற்கு சில கிளை கதைகள் என்று இந்த நாவலே நாதஸ்வர கலைஞர்கள் குறித்த ஒரு வரலாற்று ஆவணம்தான்.

    கதையும் வரலாறு

    கதையும் வரலாறு

    இந்த நாவலையே அவர் கீராவிற்குதான் சமர்ப்பித்து இருக்கிறார். கரிசல் மண் எழுத்தாளரான கீராவிற்கு இன்னொரு கரிசல் மண்ணின் கதையை கொண்ட புத்தகத்தை சமர்பித்ததே பலருக்கு சந்தோசத்தை கொடுத்திருக்கும். கரிசல் மண்ணில் வாழ்ந்து வந்த நாதஸ் கலைஞர்களின் கதையையும், அதன் வழியே சில வரலாறுகளையும் எஸ்.ரா குறிப்பிட்டு இருக்கிறார்.

    தேடி தேடி எழுதினார்

    தேடி தேடி எழுதினார்

    இயல்பிலேயே பயணியான எஸ்.ரா இதற்காக கரிசல் மண்ணில் நேரடியாக சென்று நிறைய விவரங்களை சேகரித்துள்ளார். இந்த நாவலை எழுத அந்தக் கலைஞர்களை நேரில் சந்தித்துப் பேசி, இசை தொடர்பான நிறைய விவரங்களை சேகரித்து இருக்கிறார். அதன்பின்பே இந்த நாவலுக்கான கரு உருவானது குறிப்பிடத்தக்கது.

    பெயரிலேயே சுவாரசியம்

    பெயரிலேயே சுவாரசியம்

    இந்த நாவலின் பெயரிலேயே சுவாரசியம் இருக்கிறது என்பதுதான் குறிப்பிடத்தக்கது. சஞ்சாரம் என்பதை ஆங்கிலத்தில் மாடுலேஷன் (Modulation) என்று கூறலாம். இசையை மாற்றி மாற்றி ஏற்றி இறக்கி வாசிப்பதுதான் சஞ்சாரம். நாதஸ்வர கலைஞர்களின் வாழ்க்கையும் அப்படி ஏறி இறங்கி மாறிக்கொண்டுதான் இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் இந்த நாவல் எழுதப்பட்டு இருக்கிறது.

    கதையின் தீம் என்ன

    கதையின் தீம் என்ன

    ஆனால் இந்த நாவலின் ஒரு துப்பறியும் நாவலுக்கான தீம் உள்ளது. கொஞ்சமும் போர் அடிக்காத கதைகளம். பக்கிரி, ரத்தினம் என்ற கலைஞர்களின் வாழ்க்கைதான் கதை. அந்த இரு நாதஸ்வர கலைஞர்களையும் அவர்கள் வசிக்கும் பகுதியை சேர்ந்த மக்கள் அவமதிப்பார்கள். இதற்கு அந்த இருவரும் ஆற்றும் எதிர்வினை அந்த ஊரில் சில உயிரிகளை பழிவாங்கிவிடும். இதன் காரணமாக ஊர் மக்களும் , போலீசாரும் அவர்களை தேடுவார்கள். அங்கிருந்து தப்பித்து செல்லும் கலைஞர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதே மீதி கதை.

    உள்ளே சில கதை

    உள்ளே சில கதை

    இவர்கள் ஊர் ஊராக சுற்றித் திரியும் போதே, நிறைய கிளை கதைகளும், செவி வழி வரலாறுகளும், ஆச்சர்யப்பட வைக்கும் உண்மைகளும் வெளியாகிறது. நாதஸ்வர கலைஞர்கள் படையெடுப்புகளை எப்படி தடுத்தனர் என்பது தொடங்கி பல முக்கியமான ஆவணங்கள் இதில் இடம்பெற்று இருக்கிறது. இந்த கதைக்கான தீம் 10 வருடத்திற்கும் மேலாக அவரது மனதில் இருந்ததாக எஸ்.ரா கூறியுள்ளார்.

    நன்று

    நன்று

    சில இடங்களில் கிளை கதைகள் முக்கிய கதைக்கு தொடர்பு இல்லாமல் இருப்பது மக்களை குழப்பம் அடைய வைக்கிறது. அதே சமயம் பலருக்கும் தெரியாத நாதஸ்வர கலைஞர்களின் வாழ்க்கையில் எஸ்.ரா விளக்கு அடித்து இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். தங்கள் கலை அழியும் வருத்தத்தில் இருக்கும் அவர்களுக்கு இது பெரிய உத்வேகத்தை அளிக்கும்.

    எல்லோரும் வாழ்த்து

    எல்லோரும் வாழ்த்து

    எஸ். ராமகிருஷ்ணன் பெரும்பாலும் யாருடனும் மோதல் இல்லாத எழுத்தாளர் என்று இணைய உலகில் விவரிக்கப்படுபவர். அதனால்தான் என்னவோ சாரு நிவேதிதா தொடங்கி எல்லா எழுத்தாளர்களும் நேற்றில் இருந்து இவருக்கு வாழ்த்து மழையாக பொழிந்து வருகிறார்கள். தமிழ் இலக்கிய உலகில் முதல்முறை இப்படி ஒரு நிகழ்வு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    There are lot of things are so special about S.Ramakirshnan's Sancharam, which gives me a Sahitya Akademi Award.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X