சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வன்னியர், சீர் மரபினருக்கு உள் இடஒதுக்கீடு- தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு தற்போதைய நிலை என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வன்னியர், சீர் மரபினருக்கு 20% மொத்த இடஒதுக்கீட்டில் 17.5% உள் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் மொத்தம் 69% இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. இந்த 69% இடஒதுக்கீடானது பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் என்ற பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.

What is Tamilnadus 69% Reservation Policy?

பிற்படுத்தப்பட்டோருக்கு 30%; மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20%; தாழ்த்தப்பட்டோருக்கு 18%; பழங்குடியினருக்கு 1% என இடஒதுக்கீடு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மொத்தம் 139 ஜாதிகள் இடம் பெற்றுள்ளன.

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 7 முஸ்லிம்களின் பிரிவுகளை உள்ளடக்கி பிசி-முஸ்லிம்கள் என உட்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. பிசி- முஸ்லிம்களுக்கு 30% மொத்த இடஒதுக்கீட்டில் 3.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

மிக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மொத்தம் 109 ஜாதிகள் உள்ளன. மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 41 ஜாதிகள் தனியாகவும் உட்பிரிவான சீர்மரபினர் பட்டியலில் 68 ஜாதிகளும் உள்ளன. 41 ஜாதிகளில் ஒன்றான வன்னியர் தனி ஒதுக்கீடுக்காக எம்பிசி-வி என்ற புதிய உட்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எம்பிசி-வி உட்பிரிவில் வன்னியருக்கு மொத்தம் 20% ஒதுக்கீட்டில் 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 68 ஜாதிகளை உள்ளடக்கிய சீர்மரபினருக்கு 7% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எம்பிசி பட்டியலில் எஞ்சிய 40 ஜாதியினருக்கு 2.5% இடஒதுக்கீடு வழங்கப்படும்.

தாழ்த்தப்பட்டோருக்கான 18% இடஒதுக்கீட்டில் ஏற்கனவே அருந்ததியருக்கு 3% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 107 ஜாதிகளுக்கு 15%; இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. பழங்குடியினருக்கு 1% ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

English summary
Here is the Details of Tamilnadu's 69% Reservation Policy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X