• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"உடலுறவு" சர்ச்சை பேச்சு.. 15 வருஷத்துக்கு முன்பு அழ வைத்த திருமா.. இன்று திருப்பி தருகிறாரா குஷ்பு

|

சென்னை: கல்யாணத்துக்கு முன்னாடியே பெண்கள் செக்ஸ் வைத்து கொள்ளலாம் என்று குஷ்பு பேசிய சமாச்சாரம் ஞாபகம் இருக்கா? இப்போது 15 வருஷம் காத்திருந்து.. திருமாவளவனை பழிவாங்கியதாகவே குஷ்புவின் நடவடிக்கைகள் 2 நாட்களாக அமைந்து வருவதாக கருதப்படுகிறது.

ஒரு சின்ன பிளாஷ்பேக்:

கடந்த 2005-ம் ஆண்டு இந்தியா டுடே வார இதழ் செக்ஸ் தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தி கட்டுரையையும் வெளியிட்டது.. அதில் சொல்லப்பட்டிருந்த சாராம்சம் "கல்யாணத்துக்கு முன்னாடியே பெண்கள் செக்ஸ் வைத்து கொள்கிறார்கள்" என்பதுதான்.

What is the actual reason why Kushboo got involved in the struggle against Thirumavalavan

இதுகுறித்து அப்போதைய நம்பர் ஒன் நடிகையாக இருந்த குஷ்புவிடம் கருத்து கேட்கப்பட்டபோது, "தமிழ் பெண்களுக்கு கற்பு என்கிற ஒன்று தற்போது இல்லை, அப்படிப்பட்ட செக்ஸ் வைத்து கொள்ளும் பெண்கள் சற்று எச்சரிக்கையுடன் இருந்து கொள்ள வேண்டும்" என்று சற்று ஓபனாகவே பேசியிருந்தார்.

வழக்கமாக பெண்கள் ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயம் என்றால் பாமக தரப்புதான் அறிவுறுரைகளை சொல்லும்.. ஆனால், குஷ்பு விஷயத்தில் எதிர்பாராமல் விசிக நுழைந்துவிட்டது.. குஷ்பு பேசிய பேச்சுக்கு கடுமையான கண்டனத்தை திருமாவளவன் தெரிவித்து, ஒரு போராட்டத்தையும் அறிவித்தார்.

தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சியாக உருவெடுத்து கொண்டிருந்த விசிகவுக்கு இந்த போராட்டம் ஒரு திருப்புமுனையே தந்து என்றே சொல்லாம்.. அதுவரை பப்ளிமாஸ் குஷ்பு, செல்லக்குட்டி குஷ்பு, என்று பட்டப்பெயர்களை வழங்கி கூப்பிட்டுக் கொண்டிருந்த தமிழக மக்கள், குஷ்புவின் பேச்சால் அதிர்ந்து போய் இருந்தனர்.

அந்த நேரத்தில் திருமா நடத்திய போராட்டம் பெரும் வரவேற்பை பெற்று தந்துவிட்டது.. குஷ்புவுக்கு எதிரான கண்டனங்கள் மேலும் அதிகமாயின.. குஷ்பு வீடு தாக்கவும் முயற்சி நடந்தது.. குஷ்பு மன்னிப்பு கேட்காவிட்டால் தமிழகத்தில் அவரை இருக்க விட மாட்டோம் என்ற மிரட்டலும் சிறுத்தைகள் மூலம் எழுந்தது.. இதற்கு பிறகுதான் குஷ்பு சிங்கப்பூருக்கு பறந்து சென்றார்.

மூதாட்டி வீட்டில் சிறுநீர் கழித்த சுப்பையா-எய்ம்ஸ் குறித்த குஷ்பு கருத்துக்கு காத்திருக்கும் மக்கள்

ஆனால், அங்கே உள்ள தமிழர்களும் குஷ்புக்கு எதிராக திரும்பினர்.. அதனால் மறுபடியும் சென்னைக்கு வந்துவிட்டார்... கதறி அழுது மீடியாவில் மன்னிப்பு கேட்டார்.. இருந்தாலும் குஷ்புவுக்கு இருந்த மொத்த நல்ல பெயரும் தமிழகத்தில் காற்றோடு காற்றாக போய்விட்டது. குஷ்புவின் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் இது.. மறக்க முடியாத காயம் இது.. ஆற முடியாத வடுவாக அப்படியே தங்கிவிட்டது.

இப்போது திருமாவளவன், இந்து பெண்களுக்கு எதிரான கருத்தை உதிர்க்கவும், அதைதான் குஷ்பு கையில் எடுத்தார்.. பாஜகவில் இணைந்துவிட்ட குஷ்புவுக்கு, எந்த பதவியும், பொறுப்பும் இதுவரை தரப்படாத நிலையில், தன்னை நிலைநிறுத்தி கொள்ள, தன் இருப்பிடத்தை உறுதிப்படுத்தி கொள்ள, திருமா விவகாரத்தை பெரிதாக்கினார்.

உண்மையிலேயே இந்த விஷயத்தை கொளுத்தி போட்டது பாஜகவின் கல்யாணராமன்தான்.. ஆனால், அதை ஊதி பெரிதாக்கியது குஷ்பு தான்.. குஷ்பு நினைத்திருந்தால், தமிழகத்தில் வேறு எங்கு வேண்டுமானாலும் திருமாவளவனுக்கு எதிரான போராட்டத்தை நடத்தியிருக்க முடியும். ஆனால், திருமாவை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே சிதம்பரத்தை டார்கெட் செய்தார்.. எதையெல்லாம் நினைத்து குஷ்பு இந்த ஸ்கெட்ச் போட்டாரோ, அது அத்தனையும் எடப்படியார் மூலம் தகர்க்கப்பட்டுவிட்டது.. இது குஷ்புவே எதிர்பாராத ட்விஸ்ட்!

உண்மையிலேயே குஷ்பு திருமாவின் தொகுதியில் போராட்டம் நடத்தியிருந்தால், அது பாஜகவின் மவுசு அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றிருக்கும்.. திருமாவுக்கும் ஒரு ஜெர்க் வந்திருக்கும்.. ஆனால், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி முதல்வர் இந்த போராட்டத்தை தடுத்து நிறுத்தி மாபெரும் கலவரத்தை தடுத்து நிறுத்தி உள்ளார்.. நேற்று ஒரே நாளில் குஷ்புவின் கைது செய்திதான் சோஷியல் மீடியா முழுக்க ஆக்கிரமித்திருந்தது.

பாஜகவின் ஐடி விங்கே இதை விளம்பரமாக்கினர்.. ஆர்ப்பாட்டமே நடத்தியவர்களைவிட, ஆர்ப்பாட்டமே நடத்தாத குஷ்புவின் நடவடிக்கைகளைதான் மீடியாவும் அதிகம் கவர் செய்தது.. இருந்தாலும், சொந்த பகையை தீர்த்து கொள்ள குஷ்பு இதை செய்தாரா? அல்லது பாஜகவுக்கு நல்ல பெயர் வாங்கி தர செய்தாரா? என்று தெரியவில்லை.

ஆனால், இதன்மூலம் 2 விஷயங்கள் நடந்துள்ளன.. ஒன்று, திருமாவளவனுக்கு எதிராக இந்து பெண்கள் அணி திரண்டுள்ளனர், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சோஷியல் மீடியாவில் தனித்து வீடியோ வெளியிடும் அளவுக்கு அதிருப்திகள் பெருகி உள்ளன. தேர்தல் நெருங்கும் சமயத்தில், திருமா தரப்புக்கு நேற்று ஒரே நாளில் டென்ஷன் எகிறிவிட்டது.. மற்றொன்று திருமாவளவனை தேவையில்லாமல் சீண்டி, தலித்துகளின் அதிருப்தி வாக்குகளை பாஜக நிறையவே சம்பாதித்துவிட்டதாக கருதப்படுகிறது.. மொத்தத்தில் 15 வருஷம் கழித்து காத்திருந்து திருமாவை பழி வாங்கி உள்ளார் குஷ்பு!

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
What is the actual reason why Kushboo got involved in the struggle against Thirumavalavan
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X