சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிவர் புயலால் தமிழகத்தில் ஏற்பட்ட சேதம் என்ன..? முழு விவரத்தை வெளியிட்டது தமிழக அரசு..!

Google Oneindia Tamil News

சென்னை: நிவர் புயலால் தமிழகத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Recommended Video

    தமிழகம்: நிவர் புயல்.. நிவாரணம் ஒதுக்கீடு.. முதல்கட்டமாக ரூ. 74.24 தொகை ரிலீஸ்..!

    அதன்படி கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சேதம் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 6 மாவட்டங்களில் 2,000 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த தோட்டக்கலைத்துறை பயிர்கள் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    What is the damage caused by Nivar Cyclone in Tamil Nadu?

    இதுமட்டுமின்றி 562 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலைகள் சேதமடைந்துள்ளதாக நெடுஞ்சாலைத்துறை தரப்பில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 7,617 மின் கம்பங்கள் மற்றும் 221 மின் மாற்றிகள் முற்றிலும் சேதமடைந்திருப்பது தெரியவந்துள்ளது.

    இதைத்தவிர டெல்டா மாவட்டங்களில் புயலின் தாக்கத்தால் பெய்த கனமழையால் பல லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்திருக்கிறது. டெல்லியில் இருந்து தமிழகம் வந்த மத்திய குழு சென்னை தொடங்கி கடலூர் வரை நிவர் புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ளது.

    நிவர் புயல் சேதம் சீரமைப்பு.. ரூ.74.24 கோடி ஒதுக்கிய தமிழக அரசு நிவர் புயல் சேதம் சீரமைப்பு.. ரூ.74.24 கோடி ஒதுக்கிய தமிழக அரசு

    அந்த அறிக்கை மத்திய அரசுக்கு கிடைத்த பிறகு மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு நிதி ஒதுக்கக் கூடும் எனத் தெரிகிறது. இதனிடையே தென்மாவட்டங்களில் புரெவி புயலால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்புமாறு தமிழக அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    விரைவில் புரெவி புயலால் ஏற்பட்ட சேதம் விவரங்களையும் தமிழக அரசு தரப்பில் வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    What is the damage caused by Nivar Cyclone in Tamil Nadu?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X