• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

டக்குனு சிரித்த சசிகலா.. பின்னணியில் "இவரா".. அடுத்தடுத்து வரும் ஆடியோக்கள்.. என்ன மேட்டர்?

Google Oneindia Tamil News

சென்னை: தொடர்ந்து சசிகலா ஆடியோக்கள் வெளியாவதன் ரகசியம் என்ன? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? அதிமுகவினரின் மன ஓட்டத்தை அறிந்து கொள்ளும் முயற்சியா உண்மையிலேயே அவர் வரப் போகிறாரா அல்லது வரப் போவதாக பீதி கிளப்பும் திட்டமா? என்பது குறித்தெல்லாம் சந்தேகங்கள் கிளம்பி வருகின்றன.

  அவங்களை காணோமே.. தனியாக EPS நடத்திய Meeting.. சீக்கிரமே டிவிஸ்ட்?

  தேர்தல் ரிசல்ட் வரை அமைதியாக இருந்த சசிகலா, 4 நாட்களாகவே பிஸியாகி வருகிறார்.. ஜெயிலில் இருந்து வந்தாலும், அதிமுக தரப்பில் எந்த நிர்வாகியும், சசிகலாவை அவ்வளவாக கண்டுகொள்ளாத பட்சத்தில், சசிகலாவின் அரசியலும் அசால்ட்டாக எடுத்து கொள்ளப்பட்டது.. அதற்கு காரணம், எடப்பாடி பழனிசாமியின் பிம்பம் என்ற பேச்சும் இருந்தது.

  ஆனால், இப்போது விஷயம் சீரியஸாகி வருகிறது.. ஸ்டிரைட்டாகவே எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கும் விஷயமாகவே இது பார்க்கப்பட்டு வருகிறது..

  ஜூன் 13-தினகரன் வீட்டு திருமணம் ஒத்திவைப்பு- சசிகலா- ஓபிஎஸ் சந்திப்பு இல்லை- ஈபிஎஸ் கோஷ்டி ஹேப்பி! ஜூன் 13-தினகரன் வீட்டு திருமணம் ஒத்திவைப்பு- சசிகலா- ஓபிஎஸ் சந்திப்பு இல்லை- ஈபிஎஸ் கோஷ்டி ஹேப்பி!

  சசிகலா

  சசிகலா

  அதிமுகவில் இபிஎஸ் - ஓபிஎஸ் இவர்களின் பிரச்சனையையும், இந்த 4 வருடத்தில் நடந்ததைபோல அதிகார பிரச்சனையாக மட்டும் கருதிவிட முடியவில்லை.. சசிகலா ஆடியோ ரிலீசுக்கு பிறகு, இவர்கள் இருவரிடையேயேயும் விரிசல் அகலமாகி கொண்டிருக்கிறது. இவர்களின் விரிசலைதான் சசிகலா தனக்கு சாதகமாக பயன்படுத்தி காய் நகர்த்த தொடங்கி உள்ளாரோ என்ற அனுமானமும் கிளம்பி உள்ளது.

  சசிகலா

  சசிகலா

  முதல் ஆடியோ வெளியானபோது, சசிகலா யாரிடம் பேசுகிறார்? ஒருவேளை அவர்கள் தன்னுடைய ஆதரவாளர்களாக இருக்கும் என்றே யூகிக்கப்பட்டது.. அதற்கு பிறகு, அடுத்தடுத்த ஆடியோக்களும் வெளியானது.. மொத்தம் 6 ஆடியோக்கள்.. அவைகளில் எல்லாமே அதிமுகவை பற்றின பேச்சும், அம்மாவை பற்றின பேச்சும்தான் ஒலிப்பதை கேட்க முடிகிறது.. அதிமுகவை சரிசெய்வோம், கட்சி சரியாகிவிடும், நான் பார்த்துக்கறேன் தைரியமா இருங்க.. என்ற பேச்செல்லாம், அவரது அரசியல் வருகையை உறுதிபடுத்தி விட்டது.

  நிர்வாகம்

  நிர்வாகம்

  நேற்றைய தினம், அதிமுக நிர்வாகிகளிடம் சசிகலா பேசவில்லை என்று எடப்பாடி பழனிசாமி சொன்னதுதான் தாமதம், அடுத்த 7வது ஆடியா ரிலீஸ் ஆனது.. அதில் பேசியவர் நேரடியாகவே எடப்பாடி பழனிசாமியை சரமாரியாக திட்டுகிறார்.. சசிகலா சிரிக்கிறார்.. இந்த சிரிப்புதான், எடப்பாடி பழனிசாமி & கோ-வுக்கு கிலியை தந்து வருகிறது. "அதிமுக" என்ற வார்த்தையை ஓபனாக பயன்படுத்தியே தொண்டர்களிடம் சசிகலா பேசியது, எடப்பாடி பழனிசாமிக்கான பதிலடியாகவே பார்க்கப்படுகிறது.. அதாவது, சசிகலா பேசுவது, அவரது ஆதரவாளர்களிடம் இல்லை, அதிமுகவின் தீவிர தொண்டர்களிடம் என்பது நிரூபணமாகி உள்ளது.

  ஆடியோ

  ஆடியோ

  இதுவும் எடப்பாடி பழனிசாமிக்கு கலக்கத்தை தந்து வருகிறது.. காலையில்தான், "சசிகலாவின் ஆடியோ எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது" என்று எடப்பாடி சொன்னார்.. ஆனால், சாயங்காலமே அவரது பேச்சுக்கு விடை தந்துவிட்டார் சசிகலா.. இப்படி தொடர்ந்து சசிகலா ஆடியோக்கள் வெளியாவதன் ரகசியம் என்ன? அதிமுகவினரின் மன ஓட்டத்தை அறிந்து கொள்ளும் முயற்சியா? இது என்ற சந்தேகம் வருகிறது. நிர்வாகிகள், ஆதரவாளர்கள் சசிகலாவுக்கு இருந்தாலும், இரட்டை இலையின் உண்மை விசுவாசிகள் சசிகலாவை இன்னமும் ஏற்க தயாராகத்தான் உள்ளனரா என்ற கேள்வியும் எழுகிறது.

  பின்னணி

  பின்னணி

  இந்த ஆடியோக்களை வெளியிடுவதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்று தெரியவில்லை.. அதேசமயம் யதேச்சையாக ஆடியோ லீக் ஆகிவிட்டது என்றும் சொல்லிவிட முடியாது.. இது திட்டமிட்டே லீக் செய்யப்பட்டு வருகிறது.. டெல்லி மேலிடத்தின் தொடர்பு இதில் இருக்குமா? அல்லது ஆடியோ வெளியீட்டின் பின்னணியில் தினகரன் இருக்கிறாரா? என்ற அடுத்தடுத்த சந்தேகங்களும் வரிசைக்கட்டி நிற்கின்றன.. 7 வது ஆடியோ வெளியீடு, எடப்பாடியின் குமுறல், ஓபிஎஸ்-ன் அமைதி, சசிகலாவின் சிரிப்பு,.. இதெல்லாம் ஏதோ ஒன்றிற்கான குறீயீட்டை சுட்டிக்காட்டுவது போலவே நமக்கு தெரிகிறது.. பார்ப்போம்..!

  English summary
  What is the politics behind the Sasikala audio release
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X