• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஆவின் பால் விலை குறைப்பு.. புதிய விலை பட்டியல் வெளியீடு.. முழு விவரம்

|

சென்னை: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் ஆவின் பாலின் விலை ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்ற ஆணையில் கையெழுத்திட்டார். அதன்படி லிட்டருக்கு மூன்று ரூபாய் விலை குறைப்பு மே 16ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி ஆவின் பால் விலை குறைக்கப்பட்டு புதிய விலைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், " இந்த அரசாணைக்கு ஏற்ப பொதுமக்கள் ஆவின் பார்லர்கள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் நேரடியாக 16.05.2021 முதல் ஆவின் பால் லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் குறைத்து பெற்றுக்கொள்ளலாம். கீழ்கண்ட விலை பட்டியல் 16.05.2021 முதல் அமலுக்கு வருகின்றது.

எப்போது விற்பனை

எப்போது விற்பனை

சென்னையில் பிரதி மாதம் 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை பால் அட்டை 27 வட்டார அலுவலகங்கள் மற்றும் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆவின் குறைப்பு

ஆவின் குறைப்பு

அதற்கு உண்டான பால் அட்டைதாரருக்கு 16 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை வழங்கப்படும். எனவே நுகர்வோர்களுக்கு இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ள பால் அட்டைகளுக்கு உண்டான வித்தியாச தொகை அடுத்த மாதம் பால் அட்டை விற்பனை செய்யும் போது ஈடு செய்யப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன விலை

என்ன விலை

இந்நிலையில் ஆவின்பால் விலைபட்டியல் பால் அட்டைதாரர்களுக்கு சமன்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டரின் விலை ரூ. 40லிருந்து ரூ. 37ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் சமன்படுத்தப்பட்ட பால் அரைலிட்டர் 18.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. நிலைப்படுத்தப்பட்ட பால் அரை லிட்டர் ரூ.22.50ல் இருந்து 21 ஆக குறைக்கப்பட்டுள்ளது. நிறை கொழுப்பு பால் அரைலிட்டர் 24.50ல் இருந்து 23 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இரு முறை சமன்படுத்தப்பட்ட பால் ரூ.19.50ல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஆவின் பால் விலை

ஆவின் பால் விலை

இதேபோல் சில்லரை விற்பனையில் சமன்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டரின் விலை ரூ. 43லிருந்து ரூ. 40ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் சமன்படுத்தப்பட்ட பால் அரைலிட்டர் 21.50 ல் இருந்து 20 ஆக குறைக்கப்பட்டுள்ளது. நிலைப்படுத்தப்பட்ட பால் அரை லிட்டர் ரூ.23.50ல் இருந்து 22 ஆக குறைக்கப்பட்டுள்ளது. நிறை கொழுப்பு பால் அரைலிட்டர் 25.50ல் இருந்து 24 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இரு முறை சமன்படுத்தப்பட்ட பால் ரூ.20ல் இருந்து 18.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. டீமேட் ஒரு லிட்டர் பால் விலை ரூ.60ல் இருந்து 57 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

English summary
The price of a liter of balanced milk in Avin milk price list is Rs. 40 to Rs. Reduced to 37. Similarly a liter of balanced milk has been reduced to 18.50. Half a liter of stabilized milk has been reduced from Rs 22.50 to Rs 21. Mass fat milk has been reduced from 24.50 per liter to 23 per liter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X