சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நளினி, முருகனை வாட்ஸ் அப்பில் உறவினர்களிடம் பேச அனுமதிப்பதில் என்ன பிரச்சனை.. ஹைகோர்ட்

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: நளினி மற்றும் முருகன் வாட்ஸ் அப் மூலம் உறவினர்களிடம் பேச அனுமதிப்பதில் என்ன பிரச்சனை உள்ளது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா ஆட்கொணர்வு
வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில் இருவரும் இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடம் தினமும் 10 நிமிடம் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

what is the problem in allowing Nalini and Murugan to speak to relatives through WhatsApp: high court

மேலும் முருகன். லண்டனில் உள்ள தங்கையுடனும் பேச அனுமதிக்க வேண்டும்..ஏற்கனவே காலமான தனது தந்தையின் உடலை வீடியோ கால் மூலம் பார்க்க முருகனுக்கு தமிழக அரசு அனுமதி மறுக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியிருந்தார்..

திருச்சி டூ அமெரிக்கா.. கம்மி விலையில் கொரோனா வென்டிலேட்டர்கள்.. குமுதா தம்பதி ஹேப்பி அண்ணாச்சி!திருச்சி டூ அமெரிக்கா.. கம்மி விலையில் கொரோனா வென்டிலேட்டர்கள்.. குமுதா தம்பதி ஹேப்பி அண்ணாச்சி!

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ்,பி.டி.ஆஷா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒரு வார கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் அதற்கு பதில் அளித்த நீதிபதிகள் வாட்ஸ்அப் காலில் பேசுவதற்கு அனுமதிப்பதில் என்ன பிரச்சினை உள்ளது என்று கேள்வி எழுப்பினர்...நாளை மறுதினம் பதிலளியுங்கள் நாளை மறுதினமே உத்தரவை பிறப்பிக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

English summary
Madras High Court has asked the Tamil Nadu government what is the problem in allowing Nalini and Murugan to speak to relatives through WhatsApp.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X