சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உள்ளாட்சித் தேர்தல்.. அதிக இடங்களைக் கைப்பற்றி.. திமுகவுக்கு செக் வைக்க அதிமுக விரும்புகிறதா?

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

    சென்னை: உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று, திமுகவுக்கு செக் வைக்க அதிமுக விரும்புகிறதா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் 2021 அடுத்த சட்டமன்ற தேர்தலில் திமுக வென்றாலும், இப்போது ஆளும் கட்சியாக உள்ள அதிமுக உள்ளாட்சியில் அதிக இடங்களை கைப்பற்றுவதன் மூலம் திமுகவுக்கு செக் வைக்க விரும்புகிறதா என்ற கேள்வி எழுகிறது.

    இப்படி சொல்வதற்கும், தேர்தலை மூன்றரை வருடங்கள் கழித்து இப்போது நடத்துவதற்கும் அரசியல் ரீதியாக பல்வேறு காரணங்கள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது

    உள்ளாட்சி தேர்தல் கடந்த 2016ம் ஆண்டு நடந்திருக்க வேண்டியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் உள்ளாட்சி தேர்தல் கண்டிப்பாக ரத்தாகி இருக்காது. நிச்சயம் அடுத்த சில மாதங்களில் நடந்திருக்கும்.

    17 பேரை பலிவாங்கிய கருங்கல் சுற்றுச் சுவர்.. பொதுமக்கள் மறியல்.. ஆட்சியர், எம்எல்ஏ முற்றுகை17 பேரை பலிவாங்கிய கருங்கல் சுற்றுச் சுவர்.. பொதுமக்கள் மறியல்.. ஆட்சியர், எம்எல்ஏ முற்றுகை

    மறுவரையரை

    மறுவரையரை

    ஆனால் திமுக தொடர்ந்த வழக்கை சாதகமாக எடுத்துக்கொண்ட ஆளும் அதிமுக, வார்டு மறுவரையரை பணிகள் முடியும் வரை தேர்தல் நடத்த முடியாது என்று உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து வந்தது.

    அதிரடி உத்தரவு

    அதிரடி உத்தரவு

    உள்ளாட்சி தேர்தலை இந்த ஆண்டு இறுதிக்குள் கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தற்போது உள்ளாட்சி தேர்தலை தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அதிமுகவுக்கு சாதகம்

    அதிமுகவுக்கு சாதகம்

    இன்னும் ஒன்றரை வருடங்களில் அதிமுக ஆட்சி காலம் நிறைவு பெற உள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தலை ஆளும் அதிமுக அறிவித்திருப்பது திமுகவை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி இருக்கும். ஏனெனில் உள்ளாட்சி தேர்தல் இப்போது நடந்தால் அது ஆளும் கட்சியாக உள்ள அதிமுகவுக்கே சாதகமாக உருவாகிவிடுமோ என்ற கருத்து திமுகவினரிடையே இருக்கிறது.

    திமுகவுக்கு செக்

    திமுகவுக்கு செக்

    அதுமட்டுமின்றி அடுத்த சட்டமன்ற தேர்தலில் திமுக வென்று ஆட்சி அமைத்தாலும், இப்போது உள்ளாட்சியில் அதிக இடங்களை கைப்பற்றி நிர்வாக ரீதியாக திமுகவுக்கு செக் வைக்க அதிமுக விரும்புகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    அவசர வழக்கு

    அவசர வழக்கு

    இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள திமுக, மறுவார்டு மற்றும் புது மாவட்டங்களின் மறுவரையறை பணிகளை முடிக்காமல் தேர்தலை அறிவித்து இருப்பதாக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக உச்சநீதிமன்றத்தில் வரும் டிசம்பர் 5ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

    ராஜதந்திரங்கள்

    ராஜதந்திரங்கள்

    இது ஒருபக்கம் எனில் ஊரக பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பது திமுகவை இன்னமும் அதிக கோபத்திற்கு ஆழ்த்தி உள்ளது. ஏனெனில் ஒரு பக்கம் வழக்கு போட்டாலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் சந்திக்க தயாராகவே இருந்தது திமுக. ஆனால் அதிமுகவின் ராஜதந்திர திட்டமாக ஊரக பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதை திமுக இப்போது பார்க்கிறது.

    அதிமுக அதிரடி

    அதிமுக அதிரடி

    அமைச்சர்களையும் அதிமுக எல்எல்ஏக்களையும் களம் இறக்கி பொறுமையாக ஆழமாக பணிகளை செய்து ஊராட்சிகளை அள்ள அதிமுக விரும்புவதாக தெரிகிறது. இதனால் திமுக இதை எதிர்த்து வழக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    செம்ம பிளான் தான்

    செம்ம பிளான் தான்

    இதன்மூலம் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என்று வழக்கு போட்டுள்ள திமுகவை, உள்ளாட்சி தேர்தலை மொத்தமாக சேர்த்து நடத்த வேண்டும் என்று வழக்கு போட வைக்க அதிமுக விரும்புகிறதா என்ற கேள்வி எழுந்தள்ளது. ஒருபக்கம் அடுத்த தேர்தலில் திமுக ஒருவேளை வென்றாலும் உள்ளாட்சிகளை மொத்தமாக கைப்பற்றி திமுகவுக்கு செக் வைக்க அதிமுக விரும்புதாக கூறப்படுகிறது. மறுபக்கம் உள்ளாட்சி தேர்தலுக்காக வேண்டும் வேண்டாம் என்ற ரீதியில் மாற்றி மாற்றி திமுகவை வழக்கு போடும் நிலைக்கு தள்ளிவைத்துள்ளதா என்ற கேள்வியும் இப்போது உருவாகி உள்ளது.

    English summary
    what is the reason behind in local body election announced now, this is a check for dmk by aiadmk , because 2021 may assembly election reason behind
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X