சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் இல்லை.. திமுகவுக்கு ஆப்பு? கூட்டணி கட்சிகளுக்கும் சேர்த்தே ஆப்பு?

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

    சென்னை: ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்? திமுகவுக்கு ஆப்பு வைக்க இப்படி ஒரு அறிவிப்பா? அல்லது முக்கிய பதவிகளைக் கேட்டு அடம் பிடித்து வரும் கூட்டணி கட்சிகளுக்கு ஆப்பு வைக்க இப்படி ஒரு அறிவிப்பா? அல்லது மொத்த தமிழகத்தையும் கைப்பற்ற அதிமுகவின் மாஸ்டர் பிளான்களில் இதுவும் ஒன்றா என தெரியவில்லை!

    3 வருஷமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.. இதை தனக்கு சாதகமாக அதிமுக பயன்படுத்தி கொண்டாலும், தோற்றுவிடுவோம் என்று பயந்துதான் உள்ளாட்சி தேர்தலை அதிமுக நடத்தவில்லை என்று சொல்லி அதன்மூலம் ஆதாயம் தேடி கொண்டது திமுக!

    இப்படி தேர்தல் நடத்தாமலேயே இருந்ததால், இதுதொடர்பான வழக்குகளும் கோர்ட்டில் நடந்து வருகின்றன. ஆனால், இதில் எந்த வழக்குக்குமே இன்னும் தீர்வு வராத நிலையில், இப்போது திடீரென உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேர்தல் அறிவிப்புக்கு சுப்ரீம் கோர்ட் வழக்கு ஒரு பக்கம் என்றாலும் கூட, உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் இல்லாவிட்டால் மத்திய நிதி கிடைக்காது என்பதும் இன்னொரு காரணம்.

    நடந்தால் நடக்கட்டும்.. இல்லைன்னா மோதி பார்க்கலாம்.. வழக்கிற்கு இடையில் தேர்தலுக்கு தயாராகும் திமுக!நடந்தால் நடக்கட்டும்.. இல்லைன்னா மோதி பார்க்கலாம்.. வழக்கிற்கு இடையில் தேர்தலுக்கு தயாராகும் திமுக!

    பேரூராட்சி

    பேரூராட்சி

    தற்போது ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி நகர்ப்புறஅமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு கவுன்சிலருக்கான தேர்தல் அறிவிக்கப்படவில்லை. எனினும் தேர்தல் ஆணையத்தின் சிறப்பான செயலை நாம் வரவேற்கவே செய்ய வேண்டும்.

    கலக்கம்

    கலக்கம்

    ஆனால், கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் என்றால், பிறவற்றுக்கு ஏன் நடத்தவில்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளது.. மொத்தமாக தேர்தலை நடத்தினால் பலன் கிடைக்காது என்று அதிமுக நினைக்கிறதா, அல்லது திமுகவுக்கு சாதகமாக போய்விடும் என்று கலக்கம் அடைந்துள்ளதா என தெரியவில்லை.

    முதல்வர்

    முதல்வர்

    ஆனால் மிக மிக பொறுமையாகவும், ஆழமாகவும் இந்த உள்ளாட்சி தேர்தலை அதிமுக சந்திக்க தயாராகி விட்டது என்று மட்டும் புரிகிறது. முதலில் இந்த விஷயத்தில் முதல்வரின் தைரியத்தை நாம் பாராட்டவே செய்யலாம். எப்படியும் இதில் வெற்றி பெறுபவர்கள் தான் வரபோகும் சட்டமன்ற தேர்தலிலும் ஜெயிப்பார்கள்.. அதனால், தன் வெற்றியை அங்குலம் அங்குலமாக பிரித்து அடைய அதிமுக போட்ட முதல் பிளான்தான் இது.

    பொங்கல் போனஸ்

    பொங்கல் போனஸ்

    பொதுவாக, உள்ளாட்சி தேர்தல் என்றாலே எம்ஜிஆர் காலத்தில் இருந்து திமுகவுக்குதான் அதிக மவுசு.. இப்போது, இந்த புது அறிவிப்பினால், திமுக வெற்றியை அவ்வளவு சீக்கிரம் அடைய முடியுமா என்பது சந்தேகமும் எழுந்துள்ளது. அதேபோல, ஆளும் தரப்பு பொங்கல் போனஸ் + தேனி பார்முலாவை இறக்கி வெற்றிக்கு அடிகோலுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

    அன்புமணி

    அன்புமணி

    மற்றொரு புறம் கூட்டணி கட்சியினர் இதை எந்த அளவுக்கு வரவேற்பார்கள், ஆதரிப்பார்கள் என்று தெரியவில்லை. அன்புமணி அன்று பேசும்போது, "தமிழகத்தில் விரைவில் பாமக ஆட்சி உறுதியாக அமையும். இதை யார், எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும். என்னிடம் ஒரு மந்திரம் இருக்கிறது. அந்த மந்திரத்தை பற்றி இப்போது சொல்ல மாட்டேன். நேரம் வரும்போது சொல்வேன்" என்றார்.

    வெடித்து கிளம்புமா?

    வெடித்து கிளம்புமா?

    அதேபோல, பிரேமலதா போன 24ம் தேதி மதுரையில் பேசும்போது, ஆவின் பால் குறித்து கடுமையாக பேசினார். மறைமுக தேர்தல் என்ற அறிவிப்புக்கே தேமுதிகவும், பாமகவும், மறைமுகமாக தங்கள் கருத்துக்களை தெரிவித்த நிலையில், இன்றையை உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பினை இவர்கள் எப்படி எடுத்து கொள்வார்கள்.. இவர்களின் நிலைப்பாடு என்ன.. அவர்களின் நிலைப்பாடு குறித்து அதிமுகவின் பதிலடி என்ன.. இணக்கம் என்ன.. உடன்பாடு என்ன.. என்றெல்லாம் இனம்புரியாத குழப்பமாகவே உள்ளது. கூட்டணியில் ஒத்துழைப்பு கிடைக்குமா? அல்லது வெடித்து கிளம்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English summary
    what is the reason behind in separate election for Panchayath and It is not known whether the AIADMK will provide enough seats for the coalition parties
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X