சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு போட்டோ.. 12 நிமிட பேச்சு.. வைகோவால் கடும் கோபத்தில் காங்கிரஸ்.. மோதலுக்கு இதுதான் காரணம்!

மதிமுக எம்பி வைகோ மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு இடையில் ஏற்பட்டு இருக்கும் மோதலுக்கு என்ன காரணம் என்று விவரம் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வைகோ மீது கடும் கோபத்தில் காங்கிரஸ்.. காரணம் இதுதான் !

    சென்னை: மதிமுக எம்பி வைகோ மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு இடையில் ஏற்பட்டு இருக்கும் மோதலுக்கு என்ன காரணம் என்று விவரம் வெளியாகி உள்ளது.

    காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம் குறித்த விவாதத்தில் மதிமுக எம்பி வைகோ பேசியது பெரிய சர்ச்சையாகி உள்ளது. இதற்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

    வைகோ தனது பேச்சில் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்து இருந்தார். இதனால் வைகோவை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இருவரும் விமர்சனம் செய்துள்ளனர்.

    என்ன

    என்ன

    வைகோ மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே இப்போது நடக்கும் மோதலுக்கு ராஜ்யசபாவில் வைகோ பேசியதுதான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. காஷ்மீர் பிரச்சனை குறித்து ராஜ்யசபாவில் பேசிய வைகோ, காஷ்மீரில் காங்கிரஸ் கட்சிதான் பச்சை துரோகம் செய்தது. இந்த பிரச்சனைக்கு முதல் காரணமே காங்கிரஸ்தான்.

    துரோகம்

    துரோகம்

    காங்கிரஸ் காஷ்மீர் மக்களுக்கு துரோகம் செய்தது. அந்த மக்களை நம்ப வைத்து ஏமாற்றியது. அதை தற்போது பாஜக தொடர்ந்து கொண்டு இருக்கிறது, என்று காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கடுமையாக பேசினார். இதுதான் காங்கிரஸ் கட்சிக்கு வைகோ மீது கோபம் ஏற்பட காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

    சண்டை

    சண்டை

    அதே நாளில் வைகோ செய்த இன்னொரு காரியமும் காங்கிரஸ் கட்சிக்கு கோபத்தை தந்தது. அங்கு காங்கிரஸ் கட்சியை அவையில் திட்டிய வைகோ, மதியமே பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார். அதிலும் பிரதமர் மோடியுடன் அவர் பூங்கொத்து கொடுத்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

    போட்டோ

    போட்டோ

    காலையில் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்துவிட்டு, மதியம் இப்படி மோடியுடன் அவர் புகைப்படம் எடுத்தது காங்கிரஸ் தலைவர்களை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இதனால் டெல்லி காங்கிரஸ் தலைமை, தமிழக காங்கிரஸ் தலைமையிடம் தனது கோபத்தை வெளிக்காட்டி உள்ளது.

    பலர்

    பலர்

    இதன்பின்தான் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வைகோவிற்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி இருக்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள் , பொறுப்பாளர்கள் எல்லாம் தேர்தல் நேரத்தில் கூட, வைகோவுடன் பேசவில்லை, திமுக கூட்டணியில் இரண்டு கட்சியினரும் இருந்தாலும், இருவருக்கும் இடையில் நெருக்கம் இல்லாமல் இருந்தது.

    இன்னொரு காரணம்

    இன்னொரு காரணம்

    அது பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை வைகோ பார்த்து உரையாடிய பின் இன்னும் அதிகம் ஆனது. தற்போது வைகோ காங்கிரஸ் இடையே மொத்தமாக விரிசல் அதிகம் ஆகியுள்ளது. மோடியுடன் வைகோ புகைப்படமும், அவர் ராஜ்யசபாவில் 12 நிமிடம் பேசியதும்தான் இந்த மோதலுக்கு காரணம் ஆகும்.

    English summary
    What is the reason behind MDMK Vaiko and Congress fight?.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X