சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வைத்திலிங்கமும் இல்லை.. ரவீந்திரநாத்தும் இல்லை.. அதிமுகவை சேர்க்காமல் கைவிட்ட பாஜக!

மத்திய அமைச்சர் பதவி தொடர்பாக அதிமுகவுக்குள் ஒருவித அமைதி நிலவி வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Modi cabinet ministry | வைத்திலிங்கம், ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சரவையில் பதவி இல்லை

    சென்னை: மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுகிறது. இருப்பினும் அதன் முழு மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தாமல் அமைதியாக காணப்படுகிறது கட்சி வட்டாரம்.

    தேர்தல் முடிந்ததில் இருந்தே அதிமுக கொஞ்சம் அடக்கியே வாசிக்க ஆரம்பித்தது. முழுமையான வெற்றியை அது பெறாமல் போனதே அதற்குக் காரணம். மறுபக்கம் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி, வாரணாசி என பிசியாக இருந்து வந்தார்.

    இடைத்தேர்தலுக்கு இங்கே ஆளாளுக்கு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தால், துணை முதல்வரை தமிழ்நாட்டிலேயே காணோம். மகனை அழைத்து கொண்டு வாரணாசி சென்றார். அங்கு பாஜக தலைவர்களை சந்தித்து சில பல விஷயங்களை விவாதித்தார். அப்போதே அதிமுகவில் முனுமுனுப்பு கிளம்பியது.

    பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் பட்டியல்... முழு விவரம்

    முணுமுணுப்புகள்

    முணுமுணுப்புகள்

    மே 23-க்கு பிறகு பெரிய அளவிலான பேச்சுகள், பேட்டிகள் என எதுவுமே இல்லை. வழக்கமாக ஏதாவது பேசி சர்ச்சைகளை அள்ளி வீசும் அமைச்சர்கள்கூட கப்சிப் ஆனார்கள். மத்திய அமைச்சர் பதவியை மகனுக்கு வாங்கி தந்தே தீருவது என டெல்லியில் ஓபிஎஸ் தரப்பு டேரா போடவும்தான் கட்சிக்குள் சலசலப்புகள், முணுமுணுப்புகள் எழ ஆரம்பித்தன.

    வைத்திலிங்கம்

    வைத்திலிங்கம்

    இப்போ வந்தவருக்கு மத்திய அமைச்சர் பதவியா என்ற கேள்வி எழுந்ததுடன், ரவீந்திரநாத்துக்கு பதிலாக வைத்திலிங்கத்தை மத்திய அமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. ஓபிஎஸ் மகனுக்கு பதில், வைத்திலிங்கம் வந்தால் ஒருவிதத்தில் லாபம் என்று ஒரு கட்டத்தில் முதல்வரும் இதற்கு ஒப்புக் கொண்டார். பாஜக தலைமையிடமும் பேசினார். ஆனால் ஒன்றும் வேலைக்காகவில்லை.

    நிலவும் நிசப்தம்

    நிலவும் நிசப்தம்

    ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி உறுதியாகி விட்டதைத் தொடர்ந்து அதிமுக தரப்பு அமைதி காக்கிறது. இதுதொடர்பாக கருத்தறிய அணுகினால் யாரும் பேச மறுக்கிறார்கள். கருத்து சொல்லவில்லை, பேட்டி அளிக்கவில்லை, ட்வீட் போடவில்லை! எல்லா பக்கமும் நிசப்தம் நிலவுகிறது.

    வெடித்து கிளம்புமா?

    வெடித்து கிளம்புமா?

    காலம் காலமாக மூத்த தலைவர்கள், கட்சிக்காக பாடுபட்டவர்கள், நிர்வாகிகள் உட்பட பல சீனியர்கள் இருந்தும், இப்போது வந்த ரவீந்திரநாத் குமாருக்கு பொறுப்பு என்பதை எந்த அளவுக்கு மனசார வரவேற்பார்களோ என்ற கேள்வியும் எழுந்தது. எனினும் வாயை திறக்காமல் ரொம்பவும் அமைதி காத்து வருகிறது.

    மறுப்பு

    மறுப்பு

    இந்தநிலையில், ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சரவையில் எந்த பதவியும் கடைசிவரை தரவில்லை. அதிமுக வைத்திலிங்கத்துக்காக முயற்சித்தும், ஓபிஎஸ் மகனுக்காக முயற்சித்தும் எந்த பதவியும் வழங்கப்படாதது ஏமாற்றமே. இதனை கூட்டணியில் உள்ள அதிமுக எந்த அளவுக்கு எதிர்கொள்ள போகிறது, பாஜகவிடம் என்ன மாதிரியான அணுகுமுறையை கையாள போகிறது என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியும்.

    English summary
    Ravindranath Kumar is going to become Union Minister. There is some kind of Silent within the AIADMK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X