சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேறொன்னுமில்லை.. பாஜகவின் வெற்றிகளுக்கு எல்லாம் "இது"தான் காரணம்.. திணறும் காங்கிரஸ்.. சுதாரிக்குமா?

பாஜகவின் தொடர் வெற்றிகளுக்கு என்ன காரணங்களாக இருக்கின்றன

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவின் இன்றைய வெற்றிக்கு என்ன காரணமாக உள்ளது என்பதை அனைத்து கட்சியினருமே ஆராய்ந்து வருவதும், அதற்கேற்றபடி தங்களை சரி செய்து கொள்வதும் தவிர்க்க முடியாததாகி வருகிறது!
பாஜக தரப்பு இப்போது ஏக குஷியில் உள்ளது.. பீகார் தேர்தல் உட்பட 59 தொகுதிகளுக்கு நடந்த சட்டசபை இடைத்தேர்தல்களில் பெற்ற மாஸ் வெற்றியே இதற்கு காரணம்.

கடந்த 2014 தேர்தலுக்கும் இப்போது நடந்து முடிந்த தேர்தலுக்கும் பாஜகவிடம் காணப்படும் வித்தியாசங்கள் ஏராளனம்.. இன்று உபி, குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா, உத்தரகண்ட், அசாம், திரிபுரா, கோவா என்று அதன் எல்லைகள் விரிவடைந்து கொண்டே செல்கிறது. மேலும் சில மாநிலங்களில் கூட்டணி அரசியல் இருந்தாலும், பாஜகவின் கையே அங்கு ஓங்கி வருகிறது.

திடீர்னு என்னாச்சு.. முதல்வராவதில் நிதிஷுக்கு விருப்பமில்லையா.. பாஜக தலைவர்கள் சொல்வது என்ன..?திடீர்னு என்னாச்சு.. முதல்வராவதில் நிதிஷுக்கு விருப்பமில்லையா.. பாஜக தலைவர்கள் சொல்வது என்ன..?

 தென்மாநிலம்

தென்மாநிலம்

இப்போதைக்கு அந்த கட்சிக்கு இருக்கும் ஒரே பிரச்சனை, தன் மாநிலங்களில் தென் மாநிலங்களில் தங்கள் கட்சியை வேரூன்றுவதுதான்.. ஆனால், கர்நாடகா போலவே மற்ற தென் மாநிலங்களில் சாதக சூழல் இல்லாதது அக்கட்சிக்கு கொஞ்சம் ஷாக்தான்... இருந்தாலும், 2-ம் கட்ட லெவலுக்காக பாஜகவை உயர்த்தி பிடிக்கும் முயற்சியில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.. இதைதவிர, உபியை குறி வைத்து இப்போதே காய் நகர்த்தப்படுகிறது.. 2022ல் உபியில் மறுபடியும் பாஜக ஆட்சிதான் என்பதையும் சூளுரைத்தும் வருகிறது.

 பாஜக பலம்

பாஜக பலம்

இந்த விஸ்வரூப வெற்றிக்கு என்ன காரணம்? பாஜகவின் பலத்துக்கு என்ன காரணம்? 2 விஷயம்தான்.. ஒன்று, ஒரே தலைமையை நம்பி பாஜக இருப்பது இல்லை.. இதுவரை அதாவது 1998-ல் இருந்து இப்போது வரை அந்த கட்சியின் தேசிய தலைவர்களாக 9 பேர் இருந்திருக்கிறார்கள்.. ஆனால் இதுவே காங்கிரசில் இந்த 20 வருஷத்தில் சோனியாவும், ராகுலும்தான் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். இப்போது தலைவரே இல்லாத கட்சியாக உள்ளது அதைவிட பெரிய மைனஸ்!

 வாரிசு அரசியல்

வாரிசு அரசியல்

அதுமட்டுமல்ல, எவ்வளவுதான் பிற இடித்துரைத்தாலும், வாரிசு அரசியல் என்ற போக்கில் இருந்து காங்கிரஸ் தன்னிலையை மாற்றிக் கொள்ளவில்லை.. இந்த விஷயத்தில் பாஜக தெளிவாகவே இருந்து வருவதும் மற்றொரு காரணம்.... பாஜகவில் 2-ம்கட்ட தலைவர்கள் அணி வகுத்து நிற்பது அந்த கட்சிக்கு இன்னொரு பிளஸ்.. அதனால்தான், 59 சட்டசபையின் இடைத் தேர்தல்களிலும் பெரும்பாலான இடங்களை பாஜகவால் கைப்பற்ற முடிந்திருக்கிறது.

 எதிர்க்கட்சி

எதிர்க்கட்சி

ஆனால், சரியான எதிர்க்கட்சி பாஜகவுக்கு இல்லைஎன்பதையும் இந்தவெற்றி எடுத்துக்காட்டுகிறது.. 2014-ல் பாஜகவுக்கு மேலோங்கியே காங்கிரஸ் திகழ்ந்தது.. ஆனால், இன்று அக்கட்சியை விமர்சிக்க முடியாத அளவுக்கு, அக்கட்சிக்கு டஃப் கொடுக்க முடியாத அளவுக்கு செல்வாக்கை இழந்து வருவதே பாஜகவின் இன்னொரு பலமாக இருக்கிறது.

தலைவர்கள்

தலைவர்கள்

எந்தத் திட்டமிடலும், சீர்திருத்தமும் இல்லாமல் உள்ளூர் கட்சிகளின் செல்வாக்கை மட்டும் நம்பி இதுவரை காங்கிரஸ் தலைவர்கள் வாழ்ந்து வருகின்றனர்... காங்கிரஸ் அகில இந்திய அளவில் சுதாரித்த ஆக்கப்பூர்வமான கட்சியாக மாறினால் மட்டுமே அதற்கு எதிர்காலம் உண்டு. இல்லாவிட்டால் கால ஓட்டத்தில் கரைந்து காணாமல் போய் விடும். இந்தியாவின் மிகப் பெரும் ஆளுமையாக பாஜக நிரந்தரமாகி விடும். அதுக்கு சாட்சாத் காங்கிரஸ்தான் மூலகாரணமாகிவிடும்!

English summary
What is the reason for the BJP's success
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X