சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழருவி சார், அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்.. கொஞ்சம் சொல்லுங்களேன்!

Google Oneindia Tamil News

Recommended Video

    ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து மே 23-ஆம் தேதிக்கு பிறகு அறிவிப்பார்- ரஜினி சகோதரர்- வீடியோ

    சென்னை: அதிமுக அரசு முடியும் போதுதான் ரஜினி அரசியலுக்கு வருவார் என தமிழருவி மணியன் கூறுவதை பார்க்கும் போது அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் என்பதை போல் உள்ளது.

    உலகமெங்கும் உள்ள ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்னவென்றால் அவரது அரசியல் பிரவேசம் எப்போது என்பதுதான். சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த கதையாக கடந்த 2017-இல் அரசியலுக்கு வருவதாக ரஜினிகாந்த் தனது ரசிகர்கள் மத்தியில் ஆவேச உரையாற்றினார்.

    இதையடுத்து அவர் எப்போது வருவார் எப்படி வருவார் என தெரியாமல் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தனது அரசியல் பிரவேசம் குறித்து ரஜினியே சும்மா இருந்த போதெல்லாம் அவரது சகோதரர் சத்தியநாராயணா எதையாவது பேசிவிட்டு செல்வதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்.

    இன்று மழை எப்படி இருக்கும்? வானிலை மையம் தகவல்! இன்று மழை எப்படி இருக்கும்? வானிலை மையம் தகவல்!

    சம்பந்தம்

    சம்பந்தம்

    இவரது பேச்சு ரசிகர்கள் மத்தியில் மட்டுமே மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் போதாக்குறைக்கு தமிழருவி மணியன் வேறு, அதிமுக அரசு முடியும் போதுதான் ரஜினி அரசியல் களத்துக்கு வருவார் என தெரிவித்துள்ளார். ரஜினி அரசியலுக்கு வருவதற்கும் அதிமுக அரசு வீட்டுக்கு செல்வதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்ற கேள்வி எழுகிறது.

    ரஜினி கட்சி

    ரஜினி கட்சி

    கமல்ஹாசன், சீமான், பாமகவிலிருந்து விலகிய ராஜேஸ்வரி பிரியா போன்றோர் தனித்து நின்ற நாடாளுமன்றத் தேர்தலையும் சட்டசபை இடைத்தேர்தலையும் சந்தித்தனர். அது போல் ரஜினியும் கட்சியை தொடங்கி தமிழகத்தில் தனக்கான இருப்பை தெரிந்து கொள்ளலாமே.

    மக்களோடு மக்களாக

    மக்களோடு மக்களாக

    அதைவிடுத்துவிட்டு அதிமுக அரசு முடியும் போதுதான் அரசியல் பிரவேசம் என்றால் எப்படி. அப்போ மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க மாட்டீர்கள், மக்களை சந்திக்க மாட்டீர்கள், மக்களோடு மக்களாக துணை நிற்க மாட்டீர்கள்.

    எந்த துறை

    எந்த துறை

    ஆனால் 2021-ஆம் ஆண்டு நீங்கள் கட்சித் தொடங்கியதும் மக்கள் அனைவரும் உங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என நினைத்தால் எப்படி. நாட்டில் பற்றி எரியும் எந்த ஒரு பிரச்சினைகளுக்கும் வாயை திறப்பதே இல்லை. அது தான் சார்ந்த துறையாக இருந்தாலும் சரி அரசியலாக இருந்தாலும் சரி.

    திமுக

    திமுக

    அதிமுகவுடனும் , திமுகவுடனும் உங்களை யார் கூட்டணி வைக்க சொன்னார்கள். தனித்து நின்று மக்களின் செல்வாக்கை இப்போதிலிருந்தே பெற்றால்தானே அது இன்னும் இரு ஆண்டுகள் கழித்து சட்டசபை தேர்தலுக்கு உதவியாக இருக்கும். இதெல்லாம் தமிழருவி மணியனுக்கு தெரியாதா என்ன.

    ஒரு அம்பு விடுவதற்கு!

    ஒரு அம்பு விடுவதற்கு!

    ரஜினி அரசியலுக்கு எப்போது வருகிறேன் என்பதை அவர் வாய்விட்டு கூறுகிறார்களோ இல்லையோ, அண்ணன் சத்தியநாராயணா, தமிழருவி மணியன் உள்ளிட்டோர் கூறி வருகின்றனர். எல்லாம் ரெடி, அம்பு விடுவது மட்டும்தான் பாக்கி என்றாரே, ஒரு அம்பு விடுவதற்கு இன்னும் இரு ஆண்டுகளா தேவை!

    English summary
    What is the relationship between Rajinikanth's political entry and ADMK's regime going to an end? Could Tamilaruvimanian explain?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X