சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாவோ ஓட்டிய கார்.. சென்னை வீதியில் பறந்த ஜின்பிங்கின் 'ரெட் பிளாக்' ஹாங்கி.. நெருங்க முடியாது

Google Oneindia Tamil News

Recommended Video

    china president Xi Jinping car specifications| சீன அதிபரகாரில் இருக்கும் சிறப்பம்சங்கள் என்ன ? -வீடியோ

    சென்னை: சென்னையில் வீதியில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் ஹாங்கி எல் 5 ரக கார் இன்று சென்றது. கிண்டியில் வசிக்கும் மக்கள் பலர் இந்த காரை பார்த்து வியந்தனர்.

    உலகம் முழுக்க பிரதமர்கள், அதிபர்கள் ஓட்டும் வாகனங்கள் அதிகம் பிரபலம். அமெரிக்க அதிபரின் கருப்பு நிற கார் உலகில் அதிக பாதுகாப்பு வசதிகளை கொண்டது. சிறிய ரக ஏவுகணை தாக்குதலை கூட அந்த கார்கள் தாங்க கூடியது.

    அதேபோல்தான் ரஷ்ய அதிபர் புடின் வைத்திருக்கும் சொகுசு காரும், மிக நுணுக்கமான கம்யூட்டர் டெக்கிகள் மூலம் உருவாக்கப்பட்டது. அதேபோல் போரை எதிர்பார்த்து, அதில் இருந்து தப்பிக்கும் வகையில் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் காரும் உருவாக்கப்பட்டுள்ளது.

    சென்னை கார்

    சென்னை கார்

    இந்த நிலையில் தற்போது சென்னையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தன்னுடைய காரில் வலம் வந்துள்ளார். கிண்டி விமான நிலையத்தில் இருந்து தன்னுடைய ஹோட்டலுக்கு அவர் காரிலேயே சென்று இருக்கிறார். சீனாவின் மிகப்பெரிய கார் நிறுவனமான FAW Group Corp நிறுவனத்தின் ஹாங்கி எல் 5 காரில்தான் அவர் சென்றார்.

    சீனா அரசு

    சீனா அரசு

    சீனாவின் அதிகாரபூர்வமற்ற அரசு வாகனமாக இது பார்க்கப்படுகிறது. சீனாவின் மாவோ தொடங்கி எல்லா அதிபர்களும் இந்த காரைதான் பயன்படுத்தி இருக்கிறார்கள். அரசின் உயர் அதிகாரிகள் இதைத்தான் பயன்படுத்துவார்கள். 1960களில் இருந்து சீன அதிபர்கள் ஹாங்கி வகை கார்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

    சீனாவின் அரசு கார்

    சீனாவின் அரசு கார்

    இதை மாவோ கார், ரெட் பிளாக் கார் என்றும் கூட அழைத்து வருகிறார்கள். இதன் பாதுகாப்பு மற்றும் வசதிகள் காரணமாக, அரசு சார்பாக இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கடந்த வருடம் வரை ''ஹாங்கி என்'' வகை கார்களை பயன்படுத்தி வந்த ஜின்பிங் தற்போது ஹாங்கி எல் 5 கார்களை பயன்படுத்தி வருகிறார்.

    ஹாங்கி எப்படி

    ஹாங்கி எப்படி

    இந்த ஹாங்கி எல் 5 கார் 18 அடி நீளம் கொண்ட கருப்பு கார் ஆகும். இது முன்பக்கம் நீளமாக இருக்கும். இது 402 குதிரை திறன் கொண்ட டர்போசார்ஜ் வி8 எஞ்சின் கொண்டது. இதன் மூலம் சிங்கிள் டேங்க் அடித்துவிட்டு 500 மைல்கல் செல்ல முடியும்.

    என்ன வசதி

    என்ன வசதி

    இது எந்த அளவிற்கு சொகுசாக இருக்குமோ அதே அளவிற்கு இது பாதுகாப்பு வசதிகளையும் கொண்டது. ஆம் இது சிறிய ரக ஏவுகணை தாக்குதல், வெடிகுண்டு தாக்குதல் , துப்பாக்கி சுடுதல் என்று அனைத்தையும் சமாளிக்க கூடியது. இதன் பாதுகாப்பு உபகரணங்களை கடந்த ஜூலை மாதம்தான் சீனா அப்டேட் செய்தது.

    உலகம் முழுக்க

    உலகம் முழுக்க

    அதேபோல் இதில் உலகில் எந்த பிரதமரும், அதிபரும் பயன்படுத்தாத அதிநவீன ஜிபிஎஸ் வசதி இருக்கிறது. இந்த காரை எந்த ஹேக்கரும் ஹேக் செய்ய முடியாத வகையில் உருவாக்கி இருக்கிறார்கள். முழுக்க முழுக்க சீனாவில் உருவாக்கப்பட்ட ஏஐ தொழில்நுட்பம் மூலம் இதை வடிவமைத்துள்ளனர்.

    சென்னை கொண்டு வந்தார்

    சென்னை கொண்டு வந்தார்

    இந்த காரைதான் தற்போது சென்னை கொண்டு வந்து ஓட்டி சென்று இருக்கிறார் ஜின்பிங். சென்னையில் வலம் வந்த முதல் ஹாங்கி எல் 5 கார் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Chennai Summit: What is the specialty of Xi Jinping's Hongqi L5 car?.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X