சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சைலண்ட் மோடில் டிடிவி தினகரன்... உள்ளாட்சித் தேர்தல் நிலைப்பாடு என்ன?

Google Oneindia Tamil News

Recommended Video

    what is the stance for dinakaran in local body election?

    சென்னை: உள்ளாட்சித் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் கச்சைக் கட்டிக்கொண்டு தீவிரமாக முன்னேற்பாடுகளை செய்து வரும் நிலையில் அமமுக மட்டும் சைலண்ட் மோடில் இருக்கிறது.

    இதற்கு காரணமாக கூறப்படுவது பொதுச்சின்னம் பெறும் விவகாரம் தான் எனக் கூறப்படுகிறது.

    ஏற்கனவே இரண்டு தொகுதி இடைத்தேர்தலை அமமுக புறக்கணித்துவிட்ட நிலையில், இப்போதும் தினகரன் அமைதி காப்பது அந்தக் கட்சிக்காரர்களை புலம்ப வைத்துள்ளது.

    தமிழக அரசு தொடர்ந்த 29 அவதூறு வழக்குகள்.. ரத்து செய்யக்கோரிய மனுவை வாபஸ் பெற்றார் விஜயகாந்த்தமிழக அரசு தொடர்ந்த 29 அவதூறு வழக்குகள்.. ரத்து செய்யக்கோரிய மனுவை வாபஸ் பெற்றார் விஜயகாந்த்

    சைலண்ட் மோடு

    சைலண்ட் மோடு

    உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரத்தில் வெளியாக உள்ள நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு பற்றி அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த போது, உள்ளாட்சித் தேர்தலில் அமமுக போட்டியிடும் என தினகரன் கூறியதோடு சரி, அதற்கு பிறகு அது தொடர்பாக எதுவும் பேசவில்லை.

    ஏன் யோசனை

    ஏன் யோசனை

    திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விண்ணப்ப படிவங்கள் பெறுவது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டு, வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால், அமமுக பொதுச்செயலாளர் விண்ணப்பபடிவம் உள்ளிட்ட எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் மவுனம் காப்பது அக்கட்சியின் தொண்டர்களை புலம்ப வைத்துள்ளதோடு சோர்வையும் அளித்துள்ளது.

    தகுதி இழப்பு

    தகுதி இழப்பு

    6 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு மட்டும் பொதுச்சின்னம் வழங்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தேர்தல் ஆணையம் வெளியிட்ட சின்னங்கள் தொடர்பான அறிவிப்பை வைத்து பார்த்தால் அமமுக பொதுச்சின்னம் பெறும் தகுதியை கூட பெறவில்லை.

    மாவட்ட நிர்வாகிகள்

    மாவட்ட நிர்வாகிகள்

    இதனிடையே டிடிவி தினகரன் அறிவிப்பதற்கு முன்பே, மாவட்ட நிர்வாகிகள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்களை சந்தித்து பேசி ஒரு பட்டியல் தயார் செய்து வைத்துள்ளார்களாம். தலைமையில் இருந்து அறிவிப்பு வெளியானவுடன் அதனை சென்னைக்கு அனுப்ப தயாராக இருக்கிறார்கள்.

    English summary
    what is the stance for dinakaran in local body election?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X