சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கடையை மட்டும் தொறந்து வச்சிட்டு வியாபாரமே செய்யாட்டி எப்படி மிஸ்டர் சந்திரமௌலி.. இதான் உங்கள் டக்கா?

Google Oneindia Tamil News

Recommended Video

    நாடாளும் மக்கள் கட்சியை கலைத்தார் நடிகர் கார்த்திக்.

    சென்னை: கட்சியை தொடங்கினோமா, ஆட்சியை பிடித்தோமா அட இல்லாட்டி ஒரு கவுன்சிலர் பதவியையாவது பெற்றோமா என்று இருக்க வேண்டும். அந்த அளவுக்கு வேகத்தை காட்டினால் மட்டும் இன்றைய தெருவுக்கு ஒரு கட்சி என்ற போட்டியில் வெற்றி காண முடியும்.

    இது முழுக்க முழுக்க புதிதாக கட்சி தொடங்கியவர்களுக்கு பொருந்தும். அவர்களுள் ஒருவர் நடிகர் கார்த்திக். இவர் பழைய அரசியல்வாதி என்றாலும் அவரது செயல்பாடுகள் எல்லாம் புதியவர் போல்தான் இருக்கும். 2009-ஆம் ஆண்டு முதல் அரசியலில் இருக்கும் போதிலும் தேர்தலின் போது மட்டுமே வெளியே வந்து தனது இருப்பை காட்டுவார். அத்தோடு சரி. தேர்தலில் கூட போட்டியிடுவாரா என்பது சந்தேகம்தான்.

    2009-ஆம் ஆண்டு ஃபார்வார்டு பிளாக் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார். பின்னர் அதே ஆண்டு அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற ஒன்றை உருவாக்கினார். கடந்த 2011-ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்தார்.

    ஒரு தொகுதி

    ஒரு தொகுதி

    ஆனால் தமக்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்தை வைத்துக் கொண்டு 25 முதல் 40 தொகுதிகளில் தனித்து போட்டியிட முடியும் என கார்த்திக் கருதினார். இதையடுத்து அவருக்கு ஜெயலலிதா ஒரு தொகுதியையும் ஒதுக்கவில்லை.

    தீவிர அரசியல்

    தீவிர அரசியல்

    இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியை கலைத்து விட்டு மனித உரிமை காக்கும் கட்சியை தொடங்கியுள்ளார். இனி மேல் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளேன் என்றும் கூட்டணி குறித்து தேர்தலின் போது அறிவிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

    கட்சியை தொடங்கியிருக்கலாம்

    கட்சியை தொடங்கியிருக்கலாம்

    ஆனால் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. இதுவரை இவர் எந்த ஒரு மூவ்வையும் எடுத்தாற்போல் தெரியவில்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல் ஒரு இடைத்தேர்தலில் தனது பலத்தை நிரூபிப்பதை விட்டு விட்டு 234 தொகுதிகளுக்கும் தேர்தல் வந்தால்தான் போட்டி என்றால் அதற்கு 2021-ஆம் ஆண்டே கட்சியை ஆரம்பித்திருக்கலாமே.

    சீட்டை கூட பெற முடியவில்லை

    சீட்டை கூட பெற முடியவில்லை

    கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி தனது வாக்கு சதவீதத்தை அதிகரித்துக் கொள்ள கார்த்திக் போன்ற புதியவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவருடைய நிலைப்பாடாவது என்னவென்று பாக்கலாம் என்றால் அதுவும் புரியாத புதிராகவே உள்ளது. ஆளானப்பட்ட ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்த போதே இவர் இஷ்டத்துக்கு செயல்பட்டு கடைசியில் ஒரு சீட்டை கூட பெற முடியவில்லை.

    கருத தோன்றுகிறது

    கருத தோன்றுகிறது

    சரி தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் யாரையாவது ஆதரிக்கவாவது செய்ய வேண்டும். அதுகுறித்தும் எந்த தகவலும் இல்லை. இதுவரை மக்களுக்கு உருப்படியாக எதையும் செய்யாத கார்த்திக், இந்த தேர்தலில் போட்டியிடாவிட்டாலோ, யாருக்காவது ஆதரவு கொடுக்காவிட்டாலோ அவர் கட்சி தொடங்கியதே வேஸ்ட் என்றுதான் கருத தோன்றுகிறது.

    English summary
    What is the stand of Actor Karthik in Thiruvarur byelection? Whether he has decided to contest election or gives support to any party?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X