சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

6 வருடமாக சென்னையில் உறங்கிக் கொண்டிருக்கும் பேரபாயம்.. 740 டன் அம்மோனியம் நைட்ரேட்.. பின்னணி என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: 6 ஆண்டுகளாக சென்னை துறைமுகத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் அமோனியம் நைட்ரேட்டால் பேராபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பின்னணியை பார்ப்போம்.

Recommended Video

    Chennai Port-ல் 6 ஆண்டுகளாக இருக்கும் Ammonium Nitrate | Oneindia Tamil

    லெபனான் துறைமுகத்தில் 6 ஆண்டுகளாக கண்டெய்னர்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியதில்100 பேர் பலியாகிவிட்டனர். மிக பெரும் விபத்தால் துறைமுகத்திற்கு வந்த உணவு தானியங்கள் எல்லாம் வீணாகி போயின.

    இந்த நிலையில் இதே போன்று கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் கரூர் நிறுவனத்திற்கு சொந்தமான அமோனியம் நைட்ரேட் துறைமுகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த பின்னணி குறித்து பார்ப்போம்.

    லெபனான் போல் சென்னை துறைமுகத்தில் 6 ஆண்டாக பாதுகாக்கப்பட்டு வரும் 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட்லெபனான் போல் சென்னை துறைமுகத்தில் 6 ஆண்டாக பாதுகாக்கப்பட்டு வரும் 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட்

    வெடிமருந்து

    வெடிமருந்து

    கடந்த 2012-ஆம் ஆண்டு அமோனியம் நைட்ரேட் இறக்குமதிக்கான விதிகளை கொண்டு வந்தது. அதன்படி மத்திய அரசின் வெடிமருந்து துறை தலைமை கட்டுப்பாட்டாளரிடம் உரிமம் பெற்றால்தான் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடியும். இந்த நிலையில் கரூரை சேர்ந்த அம்மன் கெமிக்கல்ஸ் நிறுவனம் அரவக்குறிச்சியில் ஆலை அமைத்து கடந்த 2008-ஆம் ஆண்டு அந்த ரசாயனத்தை இருப்பு வைத்து விற்பனை செய்கிறது.

    740 டன்

    740 டன்

    2012-ஆம் ஆண்டு அமோனியம் நைட்ரேட்டுக்கு தனியாக பாதுகாப்பு விதிகள் உருவாக்கப்பட்டதால் அதை இருப்பு வைத்து விற்க 2014-ஆம் ஆண்டு வெடிமருந்து துறையிடம் கரூர் நிறுவனம் அனுமதி பெற்றது. அந்த அனுமதி 2019-ஆம் ஆண்டு வரை செல்லும். இந்த நிலையில் சீனா, கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்த 740 டன் அமோனியம் நைட்ரேட்டை சென்னை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துவிட்டனர்.

    கரூர் நிறுவனம்

    கரூர் நிறுவனம்

    இந்த அமோனியம் நைட்ரேட்டைதீவிரவாதிகள் திருடிச் சென்று நாசவேலைகளுக்கு பயன்படுத்தி வருவதாக உளவுத் துறை தகவலை அடுத்து அந்த அமோனியம் நைட்ரேட் துறைமுகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் துறைமுகத்தில் உள்ள அமோனியம் நைட்ரேட் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் உள்ளதாக கூறி அவற்றை கரூர் நிறுவனத்திடம் அளிக்க மறுக்கப்பட்டது.

    ஹைகோர்ட் மறுப்பு

    ஹைகோர்ட் மறுப்பு

    இதுகுறித்து கரூர் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2016- இல் வழக்கு தொடரப்பட்டது. அப்போது மத்திய அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் கூறுகையில் அமோனியம் நைட்ரேட் குண்டுகள் தயாரிக்கவும் பயங்கரவாத சம்பவங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பயன்படுத்தும் போது அவை எங்கிருந்து கிடைக்கப் பெற்றன என்பது குறித்து கண்டுபிடிக்க முடியாமல் போகிறது என வாதிடப்பட்டது.

    சென்னை துறைமுகம்

    சென்னை துறைமுகம்

    இதையடுத்து நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த ரசாயனத்தை இறக்குமதி செய்வதற்கான உரிமத்தை வழங்க மறுத்த மத்திய அரசின் முடிவில் குறுக்கிட முடியாது என ஹைகோர்ட் தெரிவித்துவிட்டது. இந்த நிலையில் லெபனானில் 6 ஆண்டுகளாக துறைமுகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது. தற்போது சென்னை துறைமுகத்திலும் இந்த ரசாயனம் வைக்கப்பட்டிருப்பதால் விபத்து ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

    English summary
    What is the story behind Ammonium nitrate kept in Chennai port? Here are the details of Karur company.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X