• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மைக்கல் ஜாக்சன் கூப்பிட்டாக.. ஜாக்கிசான் கூப்பிட்டாக.. திமுகவின் முக்கிய தலைகளுக்கு பாஜக ஸ்கெட்ச்சா?

|

சென்னை: திமுகவில் இருக்கும் பல முக்கிய தலைகளை தங்கள் பக்கம் இழுக்க தமிழக பாஜக திட்டமிட்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் பேச்சு அடிபடுகிறது.

"உன் பேரு என்ன.. சங்கிலி.. இனிமே நீதான் எங்களுக்கு கங்குலி'' என்று வழியில் டயர் வண்டி ஓட்டும் நபர்களை எல்லாம் கிரிக்கெட் அணியில் வடிவேல் சேர்ப்பது போலத்தான் தற்போது பாஜக தமிழகத்தில் ஆள் பிடித்து வருகிறது. காயத்திரி ரகுராம் தொடங்கி நமீதா வரை கட்சியில் பதவி பலருக்கு அளித்தது போதாது என்று தற்போது திமுகவில் இருந்து வெயிட் தலைகளை கைப்பற்ற பாஜக முடிவு செய்துள்ளது.

கடந்த சில வாரங்கள் முன்தான் திமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமியை தமிழக பாஜக மாநில துணைத்தலைவராக நியமித்து எல்.முருகன் உத்தரவிட்டார். அப்போதே நிறைய திமுக தலைகள் பாஜகவிற்கு தாவ வாய்ப்புள்ளது என்று கருதப்பட்டது.

சட்டமன்றத் தேர்தல்... அதிமுக கூட்டணியில் பாஜக தொடரும்... எல்.முருகன் திட்டவட்டம்

முதல் நபர்

முதல் நபர்

இந்தநிலையில் ஆயிரம் விளக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க. செல்வம் டெல்லியில் பாஜக தேசிய தலைவரை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. திடீர் என்று செல்வம் இப்படி நட்டாவை சந்தித்தது, பாஜகவில் பட்டா போட்டு, திமுகவிற்கு டாட்டா காட்டத்தான் என்று செய்திகள் உலா வந்தது. ஆனால் நான் பாஜகவில் சேரவில்லை.. எங்கள் தொகுதியில் மின் தூக்கிகள் கட்ட கோரிக்கை வைத்தேன் என்று செல்வம் கூறி இருந்தார்.

செல்வம் சென்றார்

செல்வம் சென்றார்

தற்போது வரை செல்வம் அதிகாரபூர்வமாக பாஜக செல்லவில்லை. செல்வத்தை திமுகவும் தாற்காலிகமாகவே நீக்கி உள்ளது. இந்த நிலையில்தான் 2021 சட்டசபை தேர்தலுக்கு முன் திமுகவில் இருக்கும் முக்கிய புள்ளிகளை எல்லாம் "கண்ணா லட்டு தின்ன ஆசையா'' என்று கூறி பாஜக தங்கள் பக்கம் இழுப்பதாக செய்திகள் வலம் வருகிறது. பாஜக இழுக்க நினைக்கும் ஆட்களின் லிஸ்டை பார்த்தால் ஆடிபோய்விடுவீர்கள்!

ஸ்கெட்ச்

ஸ்கெட்ச்

பாஜக தற்போது திமுகவில் ஸ்கெட்ச் போட்டு இருக்கும் நபர் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் என்கிறார்கள். இவருக்கு எதிரான வருமான வரி சோதனை உள்ளிட்ட ஆயுதங்களை ஏவி விட்டு, கட்சி மாற வைக்கலாம் என்று பாஜக நினைப்பதாக கூறுகிறார்கள். அதோடு இவருக்கு எம்பி பதவி ஆசையும் அளிக்கப்பட்டு இருக்கிறதாம்.. வாங்குறதுக்கு வாங்க என்று பாஜக இவருக்கு தூது அனுப்பியதாக கூறுகிறார்கள்.

ஜெகத்ரட்சகன் மறுப்பு

ஜெகத்ரட்சகன் மறுப்பு

ஆனால் இதை ஜெகத்ரட்சகன் ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அதோடு இதை ஜெகத்ரட்சகன் தொலைக்காட்சியில் நேரடியாக மறுத்தும் இருக்கிறார் . நான் அதிருப்தியிலும் இல்லை. பாஜகவில் சேரும் எண்ணமும் எனக்கு இல்லை . பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை. சமூக வலைதளங்களில் தேவையின்றி வதந்தி பரவுகிறது . இதற்கு எல்லாம் என்னால் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்று ஜெகத்ரட்சகன் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

திமுகவில் ஜெகத்ரட்சகன் புயலே இன்னும் அடங்காத நிலையில் அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு பாஜக வலைவிரித்து இருப்பதாக கூறுகிறார்கள். அதிமுகவின் முன்னாள் அதிருப்தி எம்எல்ஏவான இவர் அமமுகவில் இருந்து திமுகவிற்கு சென்று எம்எல்ஏவும் ஆகிவிட்டார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் கீழ் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த இவருக்கு, பாஜக இ பாஸோடு ஃபிரி பஸ் டிக்கெட் போட்டுக் கொடுப்பதாக கூறி கட்சிக்குள் இழுக்க திட்டமிடுகிறது

பேசுகிறார்கள்

பேசுகிறார்கள்

வேறு ஒன்றும் இல்லை, போக்குவரத்து துறையில் 2013க்கு பின் இவர் செய்த ஊழல்களை வெளிக்கொண்டு வருவோம் என்று இவருக்கு பாஜக செக் வைத்ததாகவும் சமூக வலைத்தளங்களில் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் இதையும் திமுகவின் கரூர் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இவர் வந்தபின் கரூர் திமுகவையே ஸ்டாலின் இவருக்கு அப்படியே கொடுத்துவிட்டார். பாஜகவில் இப்படிபட்ட மரியாதை எல்லாம் கிடைக்காது ... கண்டிப்பாக செந்தில் பாலாஜி பாஜக தாவ வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.

அனிதாவும் திட்டம்

அனிதாவும் திட்டம்

மேலும் திமுகவின் திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் பாஜக தூதுவிட்டதாக செய்திகள் வந்தது. நாயினார் நாகேந்திரன் பாஜகவில் இருந்து திமுக வந்தால், அனிதா திமுகவில் இருந்து பாஜக செல்வார் என்றும் செய்திகள் வந்தது. ஆனால் அனிதாவோ செய்தி வந்ததும் முதல் ஆளாக அதை மறுத்து செய்தி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கால மைக்கல் ஜாக்சன் கூப்பிட்டாக.. ஜப்பான்ல ஜாக்கி சான் கூப்பிட்டாக என்பது போல திமுகவில் பலரை பாஜக கூப்பிடுவதாக பேச்சு அடிபடுகிறது .

அட போங்க

அட போங்க

இதெல்லாம் போக பொருளாளர் துரைமுருகனுக்கே அதிமுக, பாஜக கொக்கி போடுகிறது என்று செய்திகள் வந்தது. ஆனால் துரைமுருகனுக்கும், பாஜக முருகனுக்கும் பெயரை தவிர வேறு எதிலும் ஒற்றுமை இல்லை என்கிறது திமுக. நிலைமை இப்படி இருக்க இன்னொரு பக்கம் வேலூர் திமுகவில் இருக்கும் சில முக்கிய தலைகள், மதுரையில் அழகிரிக்கு ஆதரவாக திமுகவில் இப்போதும் இருக்கும் சில தலைவர்கள் என்று பலருக்கும் பாஜக வலைவிரிப்பதாக சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் நடந்து வருகிறது.

பார்க்கலாம்

பார்க்கலாம்

மொத்தத்தில் பாஜகவின் வட்டாரங்கள் தெரிவிக்கும் செய்திகள்படி பார்த்தால் திமுகவின் ஸ்டாலின் கனிமொழியை தவிர எல்லோருக்கும் பாஜகவில் இருந்து தூது சென்று இருக்கிறது என்றுதான் கருத வேண்டும். ஏற்கனவே இருக்கிற வானதி சீனிவாசன், எஸ். வி சேகர் போன்ற மூத்த தலைவர்களுக்கே கட்சியில் உயர் பதவியை அளிக்க முடியாமல் பாஜக கஷ்டப்பட்டு வருகிறது.. இப்படி இருக்க திமுகவில் இருந்து ஆட்களை இழுத்தால் கட்சி முழுக்க பெரும் தலைவர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள்.

தேர்தல் வரும்

தேர்தல் வரும்

சமூக வலைத்தளத்தில் ''இப்படி இருக்குமோ.. ஒருவேளை அப்படி இருக்குமோ'' என்கிற ரீதியில் நிறைய செய்திகள் வலம் வருகிறது. திமுக தரப்போ எங்கள் கோட்டை முன்பை விட இப்போதுதான் வலுவாக இருக்கிறது, யாரும் கட்சி மாற போவதில்லை என்று மார்தட்டி வருகிறது. 2021 சட்டசபை தேர்தலுக்குள் எத்தனை தலைகள் எங்கே இடம்மாற போகிறது, யார் எங்கே ஐக்கியமாக போகிறார்கள் என்பது போக போக தெரிந்துவிடும்!

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
What is the truth behind the BJP's plan to lure DMK leaders in Tamilnadu ?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X