சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"டோட்டலா மாறுதே".. யூடர்ன் போடும் திருமாவளவன்?.. "அவர்" திமுகவுக்கு வர்றாராமே.. அப்ப பாஜக? என்னாச்சு

திருமாவளவன் திமுகவில் இருந்து விலகி தனி அரசியல் செய்ய போகிறாரா என்ற டவுட் கிளம்பி உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: திருமாவளவன் இந்த முறை யாருடன் கூட்டணி அமைக்க போகிறார்? அவரது அரசியல் பாணி மாறுகிறதா? என்பது குறித்த விவாதங்கள் வெடித்து கிளம்பி உள்ளன.

சமீபகாலமாகவே திருமாவளவனின் அரசியல் உற்றுகவனிக்கப்பட்டு வருகிறது.. திமுக கூட்டணியில் இருந்தாலும், அவருக்கு சில தர்மசங்கடங்கள் இருந்துகொண்டுதான் உள்ளது.. அதேபோல, விசிகவினரால், திமுகவுக்கும் தர்மசங்கடங்கள் அடிக்கடி நிகழ்வதும் உண்டு.

ஆனால், இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக திருமாவளவன் களவாடினாலும், கூட்டணி விஷயத்தில் தடம்மாறி செல்ல போகிறாரா என்ற சந்தேகமும் கிளம்பி உள்ளது. இதற்கு சில உதாரணங்களும் சொல்லப்பட்டு வருகின்றன..

பிஆர்எஸ் மேடையிலேயே ஓப்பனாக பேசிய திருமாவளவன்.. 'காங்கிரஸ் இல்லாத அணி அமைந்தால்..’ ஆடிப்போன கேசிஆர்! பிஆர்எஸ் மேடையிலேயே ஓப்பனாக பேசிய திருமாவளவன்.. 'காங்கிரஸ் இல்லாத அணி அமைந்தால்..’ ஆடிப்போன கேசிஆர்!

 மைக் + மேடை

மைக் + மேடை

சில மாதங்களுக்கு முன்பு, தருமபுரி மாவட்டம், மொராப்பூரில் நாம் தமிழர் கூட்ட மேடையில் ஏறி திமுகவினர் மைக்கை பிடுங்கி வீசியசம்பவம், பரபரப்பாக பேசப்பட்டது.. சீமானுக்கு ஆதரவு, திமுகவுக்கு ஆதரவு என இரு தரப்பிலும் இந்த விஷயம் கொந்தளிக்கும்போது, கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும், கருத்துக்கு கருத்து தான் சரி. வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது அரசு உரியமுறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் சீமானுக்கு ஆதரவாக பேசியிருந்தார்.. அதற்கு சீமானும் நன்றி சொன்னார்.. அப்போதே ஒரு சலசலப்பு திமுக தரப்பில் ஏற்பட்டது..

 திருமாவளவன்

திருமாவளவன்

போதாக்குறைக்கு சமீபத்தில், திருமாவளவனின் மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்துக்கும் சீமான் ஆதரவுக்கரம் நீட்டியிருந்ததை மறுக்க முடியாது. அதேபோல ஒரே மாவட்டத்தில் எதிரெதிராக அரசியல் செய்து கொண்டிருக்கும், தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகனும் ஆதரவு தெரிவித்து, வடமாவட்ட மக்களையே திக்குமுக்காடி வைத்து வருகிறார். இந்த மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு கேட்டு இடதுசாரி கட்சிகளை நாடியபோதும், திமுக கூட்டணி கட்சிகளை தன்பக்கம் இழுத்து திருமாவளவன் அரசியல் செய்கிறாரா? என்று அடுத்த சந்தேகமும் கிளப்பிவிடப்பட்டது..

 கோப கண்கள்

கோப கண்கள்

அதுமட்டுமல்ல, தமிழக பாஜகவின் மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி, திமுக கூட்டணி கட்சிகளை தன்பக்கம் இழுத்து, அந்த கூட்டணியின் மையமாக மாற வேண்டும் என்று திருமாவளவன் நினைக்கிறார், இதனால், திருமாவளவன் மீது ஸ்டாலின் கோபத்தில் இருப்பதாக, பாஜகவின் நாராயணன் திருப்பதி போன்றோரும் கொளுத்தி போட்டிருந்தனர். இப்போது இன்னொரு சந்தேகம் கிளம்பி உள்ளது.. பாஜக மற்றும் காங்கிரசுக்கு எதிராக, மாநில கட்சிகளை தேசிய அளவில் ஒருங்கிணைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பாரத் ராஷ்டிரிய சமிதி என்ற புதிய கட்சியை துவக்கி இருக்கிறார்..

 திருமாவளவன்

திருமாவளவன்

தெலுங்கானாவில் நடந்த அதன் துவக்க விழாவில், திமுக சார்பில் ஒருத்தருமே பங்கேற்கவில்லை. ஆனால் திருமாவளவன் பங்கேற்றுள்ளார்... அந்த நிகழ்வின்போது, பிற மாநில தலைவர்களிடம் திருமாவளவனை, சந்திரசேகர ராவ் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்... இதனால் திருமாவளவன், சந்திரசேகர ராவ் தலைமையில் உருவாகும் அணியில் இடம்பெற விரும்புகிறார் என்பதையும், காங்கிரஸ் அணியில் நீடிக்க விரும்பவில்லை என்பதையும் வெளிப்படுத்தி விட்டதாகவே ஆளும் திமுக இதை பார்க்கிறதாம்.

 செம்ம ரூட்

செம்ம ரூட்

இதற்கு காரணம், வரும் தேர்தலில் திமுகவுடன் பாமக கூட்டணி வைக்க போவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.. பாமக கூட்டணியில் இடம்பெற நேர்ந்தால், நிச்சயம் விசிக அங்கு தொடர முடியாது.. அதனால், புது ரூட் ஒன்றை விசிக கையில் எடுப்பதாக தெரிகிறது, மேலும், தேசிய அளவில் கவனம் ஈர்ப்பு போன்ற காரணங்களால், தனித்து பயணிக்கவும் விரும்புவதாக சொல்கிறார்கள்.. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. ஏற்கனவே, அதிமுகவுக்கும், அக்கட்சி தொண்டர்களுக்கும் திருமாவளவன் அக்கறையுடன் ட்வீட்களை பதிவிட்டு அட்வைஸ் செய்து வருகிறார்..

கவனம்

கவனம்

பாஜகவிடம் கவனமாக இருக்கும்படியும் அதிமுகவை அடிக்கடி எச்சரித்து வருகிறார்.. இதெல்லாம் ஏற்கனவே டவுட்டை கிளப்பி கொண்டிருந்த நிலையில், திருமாவின் தெலுங்கானா விசிட் அதற்கு மேல் டவுட்டை கிளப்பி விட்டுள்ளது.. சிலர் இப்படி சந்தேகங்களை கிளப்பி விட்டுக் கொண்டிருந்தால், மேலும் சிலர் விசிக - திமுக கூட்டணி உடையாது என்கிறார்கள்.. காரணம், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, சனாதனமா? சனநாயகமா? என்கிற கோட்பாட்டை முன்வைத்துதான் மாநாடு, பொதுக்கூட்டங்களை நடத்தி திமுக கூட்டணியை பலப்படுத்தினார் திருமாவளவன்.. மேலும் தானே முன்னின்று, ஓடிஓடிச்சென்று ஒவ்வொரு கட்சியாக பேசி ஆதரவையும் திரட்டினார்.. இந்த கூட்டணியை மேலும் வலுப்படுத்துவதற்காகத்தான், திமுக அரசின் தர்மசங்கடத்தை புரிந்து கொண்டு, ஆர்எஸ்எஸ் பேரணிக்காக தடுப்பு முயற்சிகளை மேற்கொண்டார்..

 திராவிட மாடல்

திராவிட மாடல்

பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து மதவாதிகளின் பேச்சுக்கள், போன்றவற்றுக்கு, சரியான பதிலடிகளை தந்து வருவது திருமாவளவன் என்பதால், அவரது முயற்சி ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களுக்கு எதிராக இருப்பவர்களுக்கு பெரும் நிம்மதியை தந்து வருகிறது.. ஆளும் தரப்பில் திமுக உள்ளதால், எதையும் வெளிப்படையாக செய்ய முடியாத சூழலில், திருமாவளவன், கைகொடுத்து உதவி வருவதும் பாராட்டை பெற்று வருகிறது.

 நெருங்கும் டைம்

நெருங்கும் டைம்

அதனால்தான், விசிகவை தடை செய்ய வேண்டும் என்று எச்.ராஜா உள்ளிட்டோர் கொந்தளிக்கிறார்கள்.. திமுகவுக்கு உற்ற நண்பனாக உடனிருந்து, சனாதன எதிர்ப்பு பாதையில் சரியாகவே சென்றுகொண்டிருக்கிறார் திருமாவளவன்.. இந்த கூட்டணி என்றுமே உடையாது" என்கிறார்கள்.. ஆக, தேர்தலுக்கு இன்னும் டைம் இருப்பதாலும், அரசியலில் எதுவேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடும் என்ற நியதி உள்ளதாலும், எந்த முடிவுக்கு உடனடியாக வர முடியாத சூழல் உள்ளது.. திமுக கூட்டணியில் இடம்பெற போவது பாமகவா? விசிகவா? பொறுத்திருந்து பார்ப்போம்..!!

English summary
What is Thirumavalavan's new strategy and Will PMK form an alliance with DMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X