சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரதமர் பேசும்போது Y2K பத்தி சொன்னாரே கவனித்தீரா.. அது என்னன்னு தெரியுமா.. கிட்ட வாங்க சொல்றோம்!

Google Oneindia Tamil News

சென்னை: ஒய் 2கே பிரச்சினையை இந்திய வல்லுநர்கள்தான் சரி செய்தனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ள நிலையில் அந்த பிரச்சினை என்றால் என்ன என நினைவுக்கூருவோம்.

ஒய் 2 கே என்றால் இயர் 2000 பிரச்சினை என்பது அர்த்தம். இதில் ஒய் என்பது ஆங்கில சொல்லான இயரை குறிக்கும். 1999 ஆம் ஆண்டு முடிந்து 2000ஆவது ஆண்டு தொடங்கியிருந்த போது இந்த பிரச்சினை ஏற்பட்டது. அதாவது கணினி சார்ந்த அல்லது சாராத தகவல் சேமிப்பில் இந்த பிரச்சினை எதிரொலித்தது.

மோடி அறிவித்த ரூ.2 லட்சம் கோடி பேக்கேஜ்.. மக்கள் ஒவ்வொருவருக்கும் பலன் கிடைக்குமா? இதை செய்யனும்மோடி அறிவித்த ரூ.2 லட்சம் கோடி பேக்கேஜ்.. மக்கள் ஒவ்வொருவருக்கும் பலன் கிடைக்குமா? இதை செய்யனும்

டிஜிட்டல் முறை

டிஜிட்டல் முறை

பொதுவாக 2000ஆவது ஆண்டுக்கு முன்பு வரை நாம் ஒரு வருடத்தின் கடைசி இரு எண்களை மட்டுமே குறிப்பிட்டு பழகினோம். உதாரணமாக 1.1.1980 என்ற தேதியை சுருக்கமாக 1/1/80 என்போம். இது போல் 1998 என்றால் 98 என கணினிகளிலும் எழுதும் போது பயன்படுத்தி வந்தோம். இதற்கு காரணம் தனி கணினிகளிலும் மெயின்பிரேம் கணினிகளில் இந்த ஒய் 2 கே பிரச்சினை அதிகரித்தது. இந்த கணினிகளில் சேமிப்பு திறன் என்பது விலை அதிகமாகும். கணினியின் சேமிப்பை குறைத்துக் கொள்ள MMDDYY என பயன்படுத்தினோம்.

விவாதம்

விவாதம்

இந்த நிலையில் 2000ஆவது ஆண்டின் போது கடைசி இரு இலக்கங்களான 00 என குறிப்பிட்டால் அது **99 அல்லது **00 என எடுத்துக் கொண்டது. இது கணினி சார்ந்த செயலாக்கங்களை கடுமையாக பாதித்தது. சில புரோகிராமர்கள் இதை கிரிகோரியன் காலண்டராக தவறாக புரிந்து கொண்டன. இந்த காலண்டரின் விதிகளின் படி ஒரு ஆண்டை 100 ஆல் வகுத்து மீதி வராவிட்டால் அவை லீப் இயர் இல்லை என இருந்தது. இதனால் 2000ஆவது ஆண்டு லீப் இயராக இருக்காது என்றும் எடுத்துக் கொண்டன.

ஒய் 2 கே

ஒய் 2 கே

ஆனால் உண்மையில் கிரிகோரியன் காலண்டரில் சொல்லப்பட்டது என்னவெனில் ஒரு ஆண்டை 400 ஆல் வகுத்து மீதி வராவிட்டால் அவை லீப் இயர் ஆகும். அதன்படி 2000 லீப் இயராக அறிவிக்கப்பட்டது. இந்த பிரச்சினையை சரி செய்ய நேரமும் பணமும் அதிகமாக விரயமானது. தனி கணினிகளிலும் மெயின்பிரேம் கணினிகளில் இந்த ஒய் 2 கே பிரச்சினை அதிகரித்தது.

சாப்ட்வேர் நிபுணர்கள்

சாப்ட்வேர் நிபுணர்கள்

இந்த பிரச்சினை வெளியில் வந்தது 1999 ஆவது ஆண்டின் முடிவில்தான் என்றாலும் 1990ஆவது ஆண்டிலிருந்தே வெளிநாட்டு சாப்ட்வேர் நிபுணர்கள் விவாதம் நடத்தி ஆய்வு செய்து வந்தனர். 2000 ஆவது ஆண்டு பிரச்சினையால் பங்கு சந்தை, ஐடி துறைகளில் பெரும் வீழ்ச்சியை உலக நாடுகள் சந்தித்தன. இதையடுத்து இந்த பிரச்சினையை எதிர்கொள்ள புதிய தொழில்நுட்பத்தை சாப்ட்வேர் வல்லுநர்கள் உருவாக்கி பிரச்சினையை சரி செய்தனர்.

English summary
What is Y2K Problem? Here are the details of the term.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X