சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராகுல்.. மாயாவதி.. மமதா இல்லை.. ஸ்டாலின்தான் அந்த சக்தி.. தாமரைக்கு எதிரே தனித்து நிற்கும் சூரியன்

தேசிய அரசியலில் திமுக தலைவர் ஸ்டாலின் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

சென்னை: தேசிய அரசியலில் திமுக தலைவர் ஸ்டாலின் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து இருக்கிறார். ஆம், யாரும் நினைக்காத ஸ்டாலினின் பார்முலா தேசிய அளவில் அவரை முக்கியத்துவம் பெற வைத்து உள்ளது.

லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 37 இடங்களில் திமுக வெற்றிபெறும் நிலையில் இருக்கிறது. ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் அதிமுக முன்னிலை வகிக்கிறது.

திமுக தனியாக 20 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. உதய சூரியன் சின்னம் தமிழகத்தில் 23 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

கேட்கவே கஷ்டமா இருக்கு.. மறக்க முடியாத மன்சூர் அலிகான்.. திண்டுக்கல்லை விட்டு கிளம்பினார்!கேட்கவே கஷ்டமா இருக்கு.. மறக்க முடியாத மன்சூர் அலிகான்.. திண்டுக்கல்லை விட்டு கிளம்பினார்!

ஜெயலலிதா எப்படி

ஜெயலலிதா எப்படி

தமிழகத்தில் சென்ற தேர்தலில் அதிமுக 37 இடங்களில் வென்றது. ஆனால் தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெற்ற வெற்றியையும், ஸ்டாலின் பெற்ற வெற்றியையும் ஒன்றாக பார்க்க முடியாது. ஜெயலலிதா பல வருடமாக வளர்த்த கட்சியை வைத்துக் கொண்டு, ஆளும் கட்சியாக இருந்து கொண்டு 38 இடங்களை வென்றார். ஆனால் ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்று சில மாதத்தில், 8 வருடமாக ஆட்சி பொறுப்பில் இல்லாமல் இந்த வெற்றியை ருசித்து இருக்கிறார்.

ஸ்டாலின் எப்படி

ஸ்டாலின் எப்படி

இதன் மூலம் தேசிய அரசியலில் ஸ்டாலின் இன்றி அமையாத சக்தியாக உருவெடுத்துள்ளார். ஸ்டாலின் வெளிப்படையாக ராகுலை பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்துவிட்டு தேர்தலை சந்தித்தார். சரியாக சொல்லி அடித்து, தேர்தலில் நின்ற ஸ்டாலின், தான் சொன்னது போலவே வெற்றியை ருசித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தானும் கவிழ்ந்து.. நம்பி ஏறியவர்களையும் கவிழ்த்து விட்டு.. அதிமுகவின் அதி பரிதாப நிலை!தானும் கவிழ்ந்து.. நம்பி ஏறியவர்களையும் கவிழ்த்து விட்டு.. அதிமுகவின் அதி பரிதாப நிலை!

மமதா பானர்ஜி எப்படி

மமதா பானர்ஜி எப்படி

இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த தேர்தலில் மமதா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ், சந்திரபாபு நாயுடு, சந்திர சேகர ராவ் , கம்யூனிஸ்ட், ராகுல் காந்தி என்று எல்லோரும் சொதப்பி இருக்கிறார்கள். எல்லோரும் எதிர்பார்த்ததை விட மிக மோசமான வாக்குகளை பெற்றுள்ளனர்.

ஸ்டாலின்தான்

ஸ்டாலின்தான்

ஆனால் ஸ்டாலின் ஒற்றை நபராக காங்கிரஸ் கட்சிக்கு ஈடாக இடங்களை பெற்றுள்ளார். பாஜகவிற்கு எதிராக தற்போது தனித்து நிற்கும் பெரிய மாநில கட்சியாக திமுக மாறி உள்ளது. பாஜகவின் அரசியல் திட்டங்களில் இந்த தேர்தலில் வீழாத ஒரே கட்சி திமுகதான் என்று சொல்ல வேண்டும்.

வருத்தப்படப் போறீங்க தமிழக மக்களே.. தமிழிசை பரபரப்பு பேச்சு!வருத்தப்படப் போறீங்க தமிழக மக்களே.. தமிழிசை பரபரப்பு பேச்சு!

திமுகதான் இனி எல்லாம்

திமுகதான் இனி எல்லாம்

திமுக சார்பாக இந்த முறை லோக்சபாவிற்கு 20 எம்பிக்கள் செல்கிறார்கள். இவர்கள்தான் இனி எதிர்க்கட்சிகளின் குரலாக லோக்சபாவில் ஒலிக்க போகிறது. வெறும் எதிர்க்கட்சிகளின் குரலாக மட்டுமில்லாமல் மாநில சுயாட்சியின் குரலாகவும் திமுக ஒலிக்கும் என்று எதிர்பார்க்கலாம்!

English summary
Lok Sabha Elections Results 2019: What M K Stalin has done in this election is the best sticky note any party can have!.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X