சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமைதியாக இருந்தார்.. "அந்த" நாளுக்கு பின் மனமாற்றம்.. திடீரென முடிவு எடுத்த ரஜினி.. என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை என்று பலரும் நினைத்த நிலையில், அந்த கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி அரசியலுக்கு வர போகிறேன் என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

தமிழக அரசியல் காலடி எடுத்து வைக்க போகிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எப்போதும் அறிவிப்பிற்கு அறிவிப்பு வெளியிட்ட பழகிய ரஜினிகாந்த்.. இந்த முறையும் டிசம்பர் 31ம் தேதி அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவேன் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஒருவழியாக அரசியலுக்கு வரப்போகிறேன் என்பதை தெளிவாக ரஜினிகாந்த் கூறிவிட்டார்.. ஆனால் கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை இவரின் பேச்சு இப்படி இல்லை.. அரசியலுக்கு வருவதற்கான அறிகுறியே ரஜினியின் பேச்சில் தென்படவில்லை.

எம்ஜிஆர் ஆவது இருக்கட்டும்.. விஜயகாந்த் இடத்தையாவது பிடிப்பாரா ரஜினிகாந்த்.. செம எதிர்பார்ப்பு!எம்ஜிஆர் ஆவது இருக்கட்டும்.. விஜயகாந்த் இடத்தையாவது பிடிப்பாரா ரஜினிகாந்த்.. செம எதிர்பார்ப்பு!

மீட்டிங்

மீட்டிங்

ஆம், தமிழகத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வருவதற்கு முன்பு வரை ரஜினியின் அரசியல் வருகை உறுதியாகவில்லை. அரசியலுக்கு வருவாரா என்பது சந்தேகமாகவே இருந்தது. ஏன் அமித் ஷா வந்த போது கூட ரஜினி அவரை சந்திக்கவில்லை. ''அஸ் ஐயம் சஃப்பரிங் பர்ம் பீவர்'' என்று கூறி ரஜினி தனது வீட்டிலேயே ஓய்வு எடுத்துவிட்டார்.

அரசியல்

அரசியல்

அப்படி இருக்கும் ரஜினியின் அரசியல் பயணம் தொடங்கும் முன்பே "சைட் லாக்" போட்டு முடிவிற்கு வந்துவிட்டது என்றுதான் பலரும் நினைத்தனர். அதேபோல் கடந்த 30ம் தேதி ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்தும் அரசியல் குறித்து விருப்பம் இன்றி பேசினார். உடல்நிலை சரியில்லை, உடலை பார்த்துக்கோங்க என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர், அவர்கள் பேச்சை கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

எப்படி

எப்படி

4 நாட்களுக்கு முன் இப்படி பேசி இருந்த ரஜினி இப்போது திடீர் என்று இப்போது மனம் மாறி உள்ளார். உடல்நிலையை காரணமாக காட்டியவர் திடீர் என்று மனம்மாறி உள்ளார். இதற்கு பின் உண்மையான காரணம் என்ன?, ஏன் இப்படி அதிரடியாக அரசியலில் குதிக்கும் முடிவை ரஜினி எடுத்தார் என்றெல்லாம் தெரியவில்லை.

மீட்டிங்

மீட்டிங்

ஆனால் ரசிகர்கள் உடனான சந்திப்பிற்கு பின் ரஜினியின் திட்டம் மாறியுள்ளது.அந்த மீட்டிங்கில் ரசிகர்கள் கூறிய விஷயங்கள் ரஜினி மனதை மாற்றி இருக்கலாம். அல்லது அதற்கு பின் நடந்த சில குட்டி குட்டி ஆலோசனைகள், சில முக்கியஸ்தர்களுடன் நடந்த ஆலோசனைகளை ரஜினி மனதை மாற்றி இருக்கலாம். இடைப்பட்ட 4 நாட்களில் ஏதோ நடந்துள்ளது என்பது மட்டும் உறுதி.

 30ம் தேதி

30ம் தேதி

30ம் தேதி ரசிகர்களை சந்தித்த பின் ரஜினி மனம்மாறி உள்ளாரா அல்லது அமித் ஷா வருகைக்கு பின் மனம் மாறி உள்ளாரா என்று தெரியவில்லை. உடல்நிலையை காரணம் காட்டி வந்தவர்.. இப்போது உயிரே போனாலும் பரவாயில்லை விடக்கூடாது என்று முடிவு எடுத்து இருக்கிறார். இவருக்கு திடீர் தைரியம் கொடுத்த அந்த விஷ்யம் எது? யார்? என்பதுதான் கேள்வியாக உள்ளது.

English summary
What made Actor Rajinikanth announce his party all of a sudden?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X