சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மொத்தம் 1635 ஊழல் வழக்குகள்.. 1983 முதலே நிலுவையில் இருக்கும் கேஸ்கள்.! சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு முழுக்க நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகள் தொடர்பாகச் சென்னை ஐகோர்ட் நீதிபதி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சியைத் தாமதப்படுத்துவதில் ஊழலுக்கும் லஞ்சத்திற்கும் பெரிய பங்கு உள்ளது என்பதே பெரும்பாலான மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இதைத் தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இருப்பினும், ஊழல் வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவது அரிதிலும் அரிதாகவே உள்ளது. இந்தச் சூழலில் ஊழல் வழக்கு தொடர்பாக நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.

காசி தமிழ்நாடு இடையே தொப்புள்கொடி உறவு! ஆங்கிலேயர்கள் தான் அதை சிதைத்தார்கள்! ஆளுநர் ரவி பேச்சு! காசி தமிழ்நாடு இடையே தொப்புள்கொடி உறவு! ஆங்கிலேயர்கள் தான் அதை சிதைத்தார்கள்! ஆளுநர் ரவி பேச்சு!

 சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் கும்பகோணத்தில் பணிபுரிந்தவர் அண்ணாதுரை. கடந்த 2019ஆம் ஆண்டில் இவர் பணி ஓய்வு பெற்றுள்ள நிலையில், இதுவரை இவருக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே அவர் தனக்கு ஓய்வூதிய பலன்களை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

 1635 ஊழல் வழக்குகள்

1635 ஊழல் வழக்குகள்

இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் விசாரித்து வந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் ஊழல் வழக்குகள் தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அதாவது தமிழ்நாடு முழுக்க பல்வேறு நீதிமன்றங்களில் 1983ஆம் ஆண்டு முதல் கடந்த 2021 வரை 1635 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 விரைவில் விசாரிக்க வேண்டும்

விரைவில் விசாரிக்க வேண்டும்

இது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த அறிக்கையிலேயே கூறப்பட்டுள்ளதாகவும் அவர் மேற்கொள் காட்டினார். மேலும், ஊழல் தொடர்பான விசாரணைகளை நீதிமன்றங்கள் விரைந்து முடிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, தேவையில்லாமல் ஊழல் வழக்கைத் தள்ளி வைக்கக் கூடாது என்றும் இதை நீண்ட காலம் நிலுவையில் வைத்திருந்தால் ஊழல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவே முடியாமல் போகிவிடும் என்றும் தெரிவித்தார்.

 நீதிபதி உத்தரவு

நீதிபதி உத்தரவு

மேலும், இது ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கவும் வாய்ப்பை அமைப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் நிலுவையில் இருக்கும் 1635 ஊழல் வழக்குகளின் விசாரணையை விரைந்து முடிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் சிலருக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மனுதாரருக்கும் பலன்களை வழங்க உத்தரவிட்டார். குற்ற வழக்கு முடிவுக்கு வந்த பின் மீத பலன்களை வழங்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார்

English summary
Corruption cases needed to be compeleted very quickly says Madras high court: Corruption cases Madras high court new order.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X