சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ஐஏ மசோதாவை ஆதரித்தும் வென்ற திமுக.. பாஜகவை ஒதுக்கியும் தோற்ற அதிமுக.. மக்களை புரிஞ்சுக்க முடியலை

அதிமுக, திமுகவுக்குள் ஓட்டு வித்தியாசம் வருவதற்கு காரணங்கள் என்ன?

Google Oneindia Tamil News

Recommended Video

    Vellore Election Result : வேலூர் கோட்டையை கைப்பற்றியது திமுக. அதிமுகவிற்கு தோல்வி - வீடியோ

    சென்னை: என்னதான் நடந்தது வேலூரில்.. மக்கள் எதை எடுத்து கொண்டார்கள், எதை கவனித்துள்ளார்கள், எதை ஆதரித்துள்ளார்கள், எதை எதிர்த்துள்ளார்கள் என்பது தொடர்கதையாகவே உள்ளது.

    போன 5-ம் தேதி வேலூரில் தேர்தல் நடந்து, இன்றைக்கு வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. காலைல ஓட்டு எண்ண ஆரம்பிச்சதில் இருந்தே திமுக, அதிமுக என மாறி மாறி முன்னிலைக்கு வந்து வந்து போயின.

    ஒரு சுற்றில் அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம் முன்னிலை வகித்தார் என்றால், அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கையில் கதிர் ஆனந்த் முன்னிலை வகித்தார். இதனால் எந்த ஒரு மனநிலைமைக்கும் இப்போது வரை நம்மால் வர முடியவில்லை.

    மசோதா

    மசோதா

    அதிமுக, திமுக என்ற இரு கட்சிகளை பொறுத்தவரை 2 விஷயங்கள் நமக்கு இடிக்கிறது. திமுக எடுத்து கொண்டால் என்ஐஏ விவகாரத்தை சொல்லலாம். அதாவது தேசியப் புலனாய்வு முகமை அமைப்புக்குக் கூடுதல் அதிகாரங்களை வழங்கும் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் அமித்ஷா தாக்கல் செய்தார். பொதுவாக பாஜக எதை கொண்டு வந்தாலும், அந்த சட்டதிருத்தத்துக்கு திமுக எதிர்ப்பு காட்டும் என்றாலும், இந்தவிஷயத்தில் அப்படியே ஜகா வாங்கி ஆதரவும் தெரிவித்தது.

    என்ஐஏ

    என்ஐஏ

    சிறுபான்மையினருக்கு எதிரான திமுகவின் நிலைப்பாடாக இது பார்க்கப்பட்டது.. நிறைய விமர்சனங்களும் எழ ஆரம்பித்தன. ஆனால் வைகோ மட்டும், இதில் தனக்கு தனிப்பட்ட உடன்பாடு இல்லை என்று சொல்லி விட்டார். இதனால் வேலூர் தேர்தலில் இந்த என்ஐஏ விவகாரம் பிரதிபலிக்கும் என்றும், அதன் தாக்கம் திமுகவுக்கு ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

    ஆச்சரியம்

    ஆச்சரியம்

    ஆனால் இது அத்தனையும் தவிடுபொடியாக்கிவிட்டது. வேலூரில் இந்த விஷயத்தை பெரிய அளவுக்கு எடுத்து கொள்ளவில்லை என்பதும், வாக்கு எண்ணிக்கையில் படிப்படியாக முன்னேறி ஜெயிக்க கூடிய அளவுக்கு வந்துவிட்டதும் ஆச்சரியமாக உள்ளது.

    பிரச்சாரம்

    பிரச்சாரம்

    அதேபோல அதிமுகவை எடுத்து கொண்டால், இஸ்லாமிய ஓட்டுக்களை அள்ளிவிட வேண்டும் என்று படு உஷாராக ஆரம்பத்தில் இருந்தே காய் நகர்த்தியது. ஒரு பாஜக கொடி கூட சுற்றுவட்டாரத்தில் பறக்க விடாமல் பிரச்சாரம் செய்தது, முன்னதாகவே முகம்மதுஜானை எம்பியாக்கி, அவரையும் பிரச்சார வேனில் முஸ்லீம்கள் உள்ள பகுதிகளுக்கு அழைத்து சென்று ஓட்டு கேட்டது. ஒரு பாஜக தரப்பினரும் பிரச்சாரத்துக்கு வரவிடாமல் கவனமாக இருந்தது.

    புரியவில்லை

    புரியவில்லை

    பாஜகவை ஒதுக்கி இவ்வளவு செய்தும், அதிமுகவால் பெரிய அளவில் சோபிக்க முடியாமல் போனதும் ஆச்சரியமாக உள்ளது. ஆக.. என்ஐஏ திருத்தத்திற்கு ஆதரவு கொடுத்தும் திமுக வெற்றி பெற்று இருக்கிறது. பாஜகவை ஒதுக்கி வைத்தும், அதிமுக மண்ணை கவ்வி உள்ளது. இது எதை நமக்கு காட்டுகிறது என்பதைதான் நம்மால் சட்டென புரிந்து கொள்ளவே முடியவில்லை.

    English summary
    vellore lok sabha election. vote result live update: What makes DMK get more votes than AIADMK?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X