சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அப்படி ஒரு நிலை வந்தால்... டிடிவி தினகரனால் அதிமுக திமுகவுக்கு நிச்சயம் தர்மசங்கடம்தான்

Google Oneindia Tamil News

Recommended Video

    Thanthi TV Exit polls : செம போட்டி கேரண்டி.. தந்தி டிவி எக்ஸிட் போல்

    சென்னை: சட்டமன்ற இடைத்தேர்தலில் 5 அல்லது 6 தொகுதிளை டிடிவி தினகரனின் அமமுக வெல்லும் பட்சத்தில் அவர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியினை கலைக்கவே விரும்புவார் என்கிறார்கள். ஆனால் ஆட்சியை கலைத்தால் அது திமுகவுக்கே சாதகம் என்ற சூழலில் கைவசம் வேறு திட்டங்களை தினகரன் வைத்திருப்பார் என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள்.

    மத்தியில் ஆளும் ஆட்சியாளர்களுக்கும் ஆள ஆசைப்படும் முன்னாள் ஆட்சியாளர்களுக்கும் மே 23ம்தேதி நாளை மக்கள் தீர்ப்பளிக்க போகிறார்கள்.

    அத்தோடு தமிழகத்தில் நடந்த 22 தொகுதி இடைத்தேர்தல் மூலம் யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதுகுறித்தும் மக்களின் தீர்ப்பு நாளை வரப்போகிறது திட்டங்களை தினகரன் வைத்திருப்பார் என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள்.

    எக்சிட் போல்.. தமிழகத்தில் அதிமுகவின் சரிவுக்கு காரணம் என்ன?.. ஜெயலலிதா இறப்பு மட்டுமில்லைங்க! எக்சிட் போல்.. தமிழகத்தில் அதிமுகவின் சரிவுக்கு காரணம் என்ன?.. ஜெயலலிதா இறப்பு மட்டுமில்லைங்க!

    டிடிவி தினரகன் முடிவு

    டிடிவி தினரகன் முடிவு

    22 தொகுதி இடைத்தேர்தலில் திமுகவே அதிக இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. ஒருவேளை டிடிவி தினகரனின் அமமுக 5 அல்லது 6 தொகுதிகளில் வென்றால் திமுகவுடன் இணைந்து எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியைத்தான் கலைப்பார்கள் என்கிறார்கள்.

    மாஸ்டர் பிளான்

    மாஸ்டர் பிளான்

    ஆனால் அப்படி கலைப்பதால் டிடிவி தினகரனுக்கு என்ன லாபம் என்றும்? அது திமுகவுக்கே சாதகம் என்றும் சொல்கிறார்கள். அப்படியென்றால் டிடிவி தினகரன் வேறு ஏதேனும் திட்டம் கைவசம் வைத்திருக்கலாம் என அவரது ஆதரவாளர்கள் நம்புகிறார்கள்.

    தைரியமாக முடிவு

    தைரியமாக முடிவு

    நாளை வரப்போகும் மக்களின் தீர்ப்பின் படி அமமுகவால் 22 தொகுதிகளில் வெல்ல முடியாமல் போனாலும் வாக்கு சதவீதம் அதிமுகவுக்கு நிகராக மிகப்பெரிய அளவில் இருந்தால் தைரியமாக திமுகவுடன் இணைந்து, வெற்றி பெறும் அமமுக எம்எல்ஏக்களுடன் இணைந்து தினகரன் ஆட்சியை கலைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    அதிமுகவுக்கு சாதகம்

    அதிமுகவுக்கு சாதகம்

    அதேநேரம் திமுக 13க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று, ஸ்டாலின் ஆட்சியமைக்க தினகரன் தயவு தேவை என்கிற நிலை வந்தால், அதிமுகவுக்கு சாதமாகவே முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாம். அப்போது அதிமுகவிடம் நிச்சயம் தினகரன் தனது கோரிக்கைகளை முன்வைப்பார் என்கிறார்கள். ஏனெனில் தன்னை அதிமுக விலக்கினாலும் ஒரு காலத்திலும் திமுகவுடன் கைகோர்க்க மாட்டார் தினகரன் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். இதனால் வாக்கு சதவீதமும் வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கையுமே அடுத்த ஆட்சியை தீர்மானிக்க போகிறது. எனினும் ஆட்சியை தீர்மானிக்கும் கிங்மேக்கர் நிலைக்கு டிடிவி தினகரனின் அமமுக மாறினால் நிச்சயம் அது திமுக மற்றும் அதிமுகவுக்கு தர்ம சங்கடம் தான்.

    English summary
    tamilnadu by elections 2019 : what plan make TTV Dhinakaran's ammk after tn by election result
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X