சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உன் ’அந்த’ போட்டோஸ் எங்ககிட்ட இருக்கு! வெளிய விடவா? ஆப்பு வைக்கும் லோன் ஆப்கள்! தப்பிப்பது எப்படி?

Google Oneindia Tamil News

சென்னை : லோன் ஆப்களிடம் கடன் பெறுபவர்களை ஆபாசமாக பேசி மிரட்டல் விடுப்பதோடு தற்போது ஆபாச படங்களை வெளியிட்டு விடுவேன் என மோசமான புகைப்படங்களை பெண்களுக்கு அனுப்புவேன் என மிரட்டி வரும் சம்பவங்களும் அதிகரித்து வரும் நிலையில், இதில் இருந்து எப்படி மீள்வது என நிபுணர்கள் கொடுக்கும் விளக்கம் குறித்து பார்க்கலாம்.

சென்னையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், பெங்களூரூவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில், ஆன்லைன் ஆப்கள் 20 ஆயிரம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார். அதனை தொடர்ந்து கட்டியும் வந்திருக்கிறார்.

பரபரக்கும் மகாராஷ்டிர அரசியல் சதுரங்கம்.. ஏக்நாத் ஷிண்டே முன் இருக்கும் ”5 வாய்ப்புகள்” பரபரக்கும் மகாராஷ்டிர அரசியல் சதுரங்கம்.. ஏக்நாத் ஷிண்டே முன் இருக்கும் ”5 வாய்ப்புகள்”

அதில் ஒரு ஆப்பில் கடன் வாங்கிய நிலையில் பணத்தை திருப்பி செலுத்த காலதாமதமான நிலையில் தன்னை செல்போனில் அழைத்து அவதூறாக பேசுவதுடன், தனது செல்போனில் உள்ள எண்களுக்கு தனது மார்பிஃங் செய்யப்பட்ட புகைப்படத்தை அனுப்பியதைக் கண்டு அதிர்ந்துள்ளார்.

லோன் ஆப் விபரீதம்

லோன் ஆப் விபரீதம்

இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் அழைப்பு வந்த எண்களை ஆராய்ந்தனர். அப்போது அந்த அழைப்புகள் பெங்களூரில் இருந்து வந்து இருப்பதை அறிந்து அங்கு சென்றனர். வீட்டில் இருந்தபடி பணியாற்றும் ஸ்மார்ட் லோன் நிறுவன ஊழியர்கள் 4 பேரை கைது செய்தனர். இது ஒரு சம்பவம் தான், இதனை போல் ஆயிரக்கணக்கான சம்பவங்களைக் கூற முடியும். நாளுக்கு இவ்விவகாரம் பெரிதாகிக் கொண்டே தான் போகிறது. ஆனால் அதன் தீவிரம் யாருக்கும் புரிவதில்லை..

அதிகரிக்கும் தற்கொலை

அதிகரிக்கும் தற்கொலை

கடந்த சில நாட்களாகவே ஆன்லைன் சூதாட்டங்களைப் போலவே கடன் செயலிகளும் தற்கொலைக் கருவிகளாக மாறி வருகின்றன. அவற்றை இயக்குவது யார் என்பதே தெரியாது. சில ஆயிரக்கணக்கில் கடன் வழங்கும் கடன் செயலிகள், அந்தப் பணத்திற்கு பல்லாயிரக்கணக்கில் கொடூரமாக வட்டி வசூலிக்கின்றன. குறித்த காலத்தில் கடனை திரும்ப செலுத்தாவிட்டால், கடன் பெற்றவரையும், அவரது குடும்பத்து பெண்களின் படங்களையும் ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ்-அப் மூலம் செயலிகள் பரப்புகின்றன. இதனால் அவமானம் அடையும் கடன்தாரர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகிறது.

மக்களே எச்சரிக்கை

மக்களே எச்சரிக்கை

கடன் செயலிகள் மூலம் கடன் வாங்க வேண்டாம் என ரிசர்வ் வங்கியும் எச்சரிக்கிறது; காவல்துறையும் எச்சரிக்கிறது. ஆனால், அவற்றை தடை செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கின்றன. அதன் விளைவாக ஆன்லைன் கடன் செயலிகள் புற்றீசல் போல பெருகி விட்டன. ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளைப் போலவே, கடன் செயலி தற்கொலைகளும் பெருக அரசும், காவல்துறையும் அனுமதிக்கக்கூடாது. எனவே, ஆன்லைன் கடன் செயலிகளை முற்றிலுமாக தடை செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

என்ன செய்ய வேண்டும் நீங்கள்?

என்ன செய்ய வேண்டும் நீங்கள்?

ஒருவேளை நீங்கள் மிரட்டலுக்கு ஆளாகிவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம். முதலில் தயக்கமில்லாமல் காவல்துறையை அனுகுவதுதான் நல்லது. தங்களுக்கு அருகிலுள்ள காவல்நிலையத்திலோ, அல்லது சைபர் கிரைம் பிரிவுகளிலோ மிரட்டல் குறித்து புகார் அளிக்க வேண்டும். முன்னதாக ஆன்லைன் கடன் வழங்கும் செயலிகள் ரிசர்வ வங்கியிம் அனுமதி பெற்றுதா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் அந்த செயலி ஆபத்தானது. உடனடியாக கடன் வழங்கும் செயலிகளில் நிச்சயம் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். எனவே முடிந்தவரை இவற்றை தவிர்ப்பது நல்லது.

English summary
With the increasing number of incidents of borrowers being threatened by pornographers with loan apps and threatening to send bad photos to women as if they were currently posting pornographic images, we can look at the explanation given by experts on how to recover from this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X