சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

படார்னு பாயை சுருட்டிக் கொண்டு கிளம்பிய ரஜினி.. சுருட்டி வாரிப் போட்ட பாஜக.. அப்ப பாமக கதி?!

ரஜினி அரசியல் நிலைப்பாடு இனி எப்படி இருக்கும்?

Google Oneindia Tamil News

சென்னை: எதிர்பார்த்த ஒன்றுதான்.. இருந்தாலும் அது ரஜினியின் ட்வீட் மூலம் நேற்று நிரூபணமாகிவிட்டது.. இனி கட்சியை தொடங்குவது சிரமம்தான் என்ற நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான நிறைய சந்தேகங்களும் எழுந்து வருகின்றன.

ரஜினி அரசியலுக்கு குட் பை சொன்னால் என்னாகும்? என்பது முதல் சந்தேகமாக உள்ளது.. ஒன்னும் பெரிசா மாற்றம் வந்துவிடாது, ஏன் என்றால் அவர்தான் அரசியலுக்குள்ளேயே இறங்கவில்லையே என்று மேலோட்டமாக சொல்லிவிடலாம்.. ஆனால் உள்ளார்ந்த அர்த்தம் நிறைய பொதிந்து உள்ளது.

குறிப்பாக, ரஜினியை வைத்து இந்து மத வாக்குகளை அள்ள நினைப்பவர்கள் ஏமாந்து போய்விடுவார்கள்.. ரஜினி என்றாலே காவி என்ற முத்திரையை கடைசிவரை பிரிக்கவே முடியவில்லை.

சிரமம்

சிரமம்

சில சமயங்களில் ரஜினியே அதை தெளிவுபடுத்தினாலும், அந்த பிம்பம் உடைவது சிரமமாகவே இருககும் பட்சத்தில், இந்து மத வாக்குகளை பிரித்து பார்க்க முடியவில்லை. எனவே ரஜினி அரசியலுக்கு குட் பை சொன்னால், பாஜக, ஆர்எஸ்எஸ் போன்றவைகளுக்குதான் சிரமம்.. அமித்ஷா முதல் அர்ஜூன் சம்பத்வரை ரஜினியை அழைத்து கொண்டே இருந்தும், அவர்களுக்கு இந்த விஷயத்தில் ஏமாற்றம்தான் கிடைக்கும்.

 நிச்சயம்

நிச்சயம்

அடுத்ததாக, ரஜினியை வைத்து யாராவது பலன் அடைய வாய்ப்பு இருக்குமா என்று பார்த்தால், நிச்சயம் பாமகவுக்கு வாய்ப்பு இருக்கும்.. டாக்டர் ராமதாஸ் சில மாதங்களுக்கு முன்புகூட ரஜினியுடன் கூட்டணியா என்று கேட்ட போது, மொத்தமாக மறுத்து பேசவில்லை.. அவர் வரட்டும் பார்க்கலாம் என்றாரே தவிர, நோ.. ரஜினியுடன் எக்காலமும் கூட்டணி கிடையாது என்று அழுத்தமாக சொல்லவில்லை.

பாமக

பாமக

இதற்கு காரணம், அன்புமணிக்கு துணை முதல்வர் பதவிக்காக முயற்சிக்கும்போது, அதை திமுக, அதிமுக தரப்பு தரவில்லையாயின், நிச்சயம் ரஜினி தரப்பு தரும் என்றே ஒரு மறைமுக நம்பிக்கை பாமகவுக்கு இருந்தது.. ரஜினியே முதல்வராக ஏற்றாலும், அன்புமணி துணை முதல்வர் என்றால் அதற்கு ஓகே சொல்லும் மனநிலையிலும் இருந்ததை மறுக்க முடியாது. அந்த வகையில் பலனடையாமல் போனது பாமகவுக்கு சற்று அப்செட் ஆக வாய்ப்பு இருந்திருக்கும்.

ஊழல்

ஊழல்

யாரும் எதிர்பாராவிதமாக வந்தால் என்னாகும் என்ற கேள்வி எழுகிறது.. அப்படி அவர் தீவிரமாக அரசியலுக்குள் நுழைந்துவிட்டால், நிச்சயம் கமலுக்கு ஆதரவு தருவார்.. கமல் ஆதரவு இல்லாமல் தன் அரசியல் பாதையை அவரால் நகர்த்த முடியாது... ஒருமித்த கருத்துடன் செயல்பட தயார் என்று இருதரப்புமே ஏற்கனவே பகிரங்கமாக சொல்லிய நிலையில், இவர்கள் இணைய வாய்ப்பு உள்ளது.. இதை தவிர ஊழல் இல்லா ஆட்சியே கமல் கருத்து என்பதுபோல, ரஜினியும் அதே கொள்கையை உடையவர் என்பதால் இது சாத்தியமாகும்.

வாய்ஸ்

வாய்ஸ்

அடுத்ததாக, ரஜினி வராவிட்டால் என்னாகும் என்ற கேள்வி எழுகிறது.. அப்படியானால் மாற்று வழியில் தன்னுடைய இருப்பை காட்ட கண்டிப்பாக முயல்வார்.. ஏன் என்றால் தமிழக மக்கள் மீது ரஜினிக்கு பாசம் இருக்கிறது.. ஆட்சி மாற்றம் வந்தே தீர வேண்டும் என்ற பிடிவாதமே அதற்கு சாட்சியாக இருந்திருக்கிறது.. அந்த வகையில் நிச்சயம் வரப்போகும் தேர்தலில் தன்னுடைய வாய்ஸை தருவார்.. ஆனால் அது யாருக்கு என்பதில்தான் லட்சக்கணக்கான சஸ்பென்ஸ்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன!

English summary
What will be Rajini's political decision in the future
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X