• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சசிகலா வருகை.. எடப்பாடியாருக்கு காத்திருக்கும் "2 சிக்கல்கள்".. அனல் பறக்கும் அதிமுக.. திமுக உஷார்!

|

சென்னை: சசிகலா உடல்நிலை தேறி, அதிமுகவுக்குள் இணைவதாக இருந்தால், நிச்சயம் பல மாறுதல்கள் கட்சிக்குள் ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது.. அதேசமயம், எடப்பாடியாருக்கு 2 சிக்கல்கள் ஏற்படும் என்றும் சொல்லப்படுகிறது.

விரைவில் தேர்தல் நடக்க உள்ளதால், அதிமுக, திமுக கட்சிகள் மும்முரத்தில் உள்ளன.. மற்றொரு பக்கம் பாஜக பல சைலண்ட் வியூகங்களை கையில் எடுத்துள்ளது.. அதில் ஒன்றுதான் சசிகலாவின் வருகையும்.

திமுகவை இந்த முறை தேர்தலில் வெற்றி பெற வைத்துவிடக்கூடாது என்பதற்காகவே கடந்த ஒரு வருடமாகவே ஸ்கெட்ச் போட்டு வருகிறது.. ஏற்கனவே 2 ஆப்ஷன்களை கையில் வைத்திருந்தது.. ஒன்று ரஜினி, மற்றொன்று சசிகலா. இதில் ரஜினி ஜகா வாங்கிவிடவும், போட்டு வைத்த அத்தனை பிளான்களையும் சசிகலா பக்கம் திருப்பி விட்டுள்ளது பாஜக.

முதல்வர்

முதல்வர்

எடப்பாடியாரை முதல்வர் வேட்பாளராக ஏற்க மனமில்லாத அதேநேரத்தில், அதிமுகவுடன் அமமுகவை இணைப்பதன் மூலம் பெரும்பான்மையை பெற்றுவிடலாம் என்று பாஜக கணக்கு போட்டு வருகிறது.. இதற்காக அதிமுக தலைமையை சம்மதிக்க வைக்கும் முயற்சியிலும் இறங்கி வருகிறது.. இதனிடையே சசிகலா, அதிமுகவுடன் தாம் இணைவதாக இருந்தால் 7 கண்டிஷன்களை போட்டதாக சொல்லப்படுகிறது.. அந்த 7 கண்டிஷன்களையும் அதிமுக ஏற்குமா என்பது சந்தேகம்தான்.

பதவிகள்

பதவிகள்

அதில் முக்கியமானது, தான் விட்டு சென்றது போலவே இப்போதும் கட்சி இருக்க வேண்டும் என்பது, அதாவது, ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளே இருக்க கூடாது என்பது போல தெரிகிறது.. ஏற்கனவே, சசிகலா கட்சிக்குள் வருவதை ஏற்க எடப்பாடியார் விரும்பவில்லை.. அவரால் தன்னுடைய முக்கியத்துவம் போய்விடுமோ என்ற கலக்கம் இருந்து வருகிறது.. எனவே 7 கண்டிஷன்களை பற்றி அதிமுகவின் நிலைப்பாடு உறுதியாக தெரியவில்லை.

பாஜக

பாஜக

அதேசமயம், சசிகலாவின் வருகைக்கு எடப்பாடியார் ஓரளவு சம்மதம் சொல்லிவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.. ஒருவேளை சசிகலா கட்சிக்குள் வந்தால், எடப்பாடியாருக்கு சிக்கல்கள் சில எழவும் வாய்ப்பு உள்ளது.. முதலாவதாக, முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் பிரச்சனை எழக்கூடும்.. இந்த 3 மாசமும் பாஜக ஏன் இந்த விஷயத்தில் பிடிவாதம் காட்டி வருகிறது என்று தெரியவில்லை.. ஒருவேளை ரஜினி இருந்த இடத்தில் சசிகலாவை வைத்து பார்க்க போகிறதா என்றும் விளங்கவில்லை. அதனால், முதல்வர் வேட்பாளர் சிக்கல் எழ வாய்ப்புள்ளது.

சிக்கல்

சிக்கல்

ஒருவேளை, அமமுக தனியாக தேர்தலை சந்திப்பதாக வைத்து கொண்டாலும், அப்போதும் எடப்பாடியாருக்கு சிக்கல் எழும்.. காரணம், கொங்கு மண்டலத்தை மொத்தமாக வலுப்படுத்தி கையில் வைத்துள்ளார் எடப்பாடியார்.. இந்த மண்டலம்தான் அவருக்கு இம்முறையும் கைதூக்கி விடும் என்று மலைபோல நம்பி கொண்டிருக்கிறார்.. சசிகலா அரசியலுக்குள் நுழைந்தால் இந்த மண்டலத்தின் செல்வாக்கும் எடப்பாடியாருக்கு சரிந்துவிடும் என்று தெரிகிறது.

தென்மாவட்டம்

தென்மாவட்டம்

அதுமட்டுமல்ல, தென்மாவட்டங்களில் அமமுகவே தலைதூக்கும்.. மொத்த வாக்குகளும் அதாவது சமுதாய வாக்குகள் பெரும்பாலும் தினகரன், சசிகலாவுக்கு வந்து சேரும்.. இதனால் அதிமுகவின் வாக்கு வங்கி அடிவாங்கும்.. இது திமுகவுக்கும் ஒருவகையில் சிக்கல்தான்.. அங்கு அழகிரி திமுகவுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கினாலோ அல்லது பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டாலோ அந்த பாதிப்பும் திமுகவுக்குதான் போய் சேரும். இருந்தாலும், சசிகலாவின் அரசியல் வருகை எடப்பாடியாருக்கு பலவிதங்களில் சிக்கல்களை உண்டுபண்ணும் என்றே சலசலக்கப்பட்டு வருகிறது.

 
 
 
English summary
What will be the changes if Sasikala comes to AIADMK
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X