சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அண்ணாத்த படத்தில் "பேய்" இருக்கா இல்லையா.. நம்பலாமா நம்பக்கூடாதா?

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்ட போதிலும் அண்ணாத்த படத்தில் பஞ்ச் வசனங்கள் இருக்குமா இருக்காதா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ரஜினி படங்கள் என்றாலே ஸ்டைலுக்கு அப்பாற்பட்டு ஓபனிங் சாங், பஞ்ச் வசனங்கள் நிச்சயம் இருக்கும். இது அனைவரும் அறிந்ததே. ரஜினியை கடந்த 25 ஆண்டுகளாக ரசிகர்கள் அரசியலுக்கு வருமாறு அழைத்து வருகிறார்கள்.

ஆனால் அவர் பிடி கொடுக்கவில்லை. இதை உணர்த்தும் வகையில் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை என பாடியிருப்பார்.

ஆண்டவன்

ஆண்டவன்

பாட்ஷா படத்தில் நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி, நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் ,ஆனா கைவிட மாட்டான், நான் எப்ப வருவேன், எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்.., ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் முடிக்கிறான், நான் சொல்றதையும் செய்வேன் சொல்லாததையும் செய்வேன் உள்ளிட்ட வசனங்கள் மிகவும் பிரபலம்.

எப்டி வருவேன்

எப்டி வருவேன்

நான் எப்ப வருவேன் எப்டி வருவேன் எனும் வசனம் அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்களுக்கு அறிவுறுத்துவது போன்று பார்க்கப்பட்டது. இப்படியாக ரஜினி பஞ்ச் வசனங்களுக்கென திரைக்கு சென்று படம் பார்ப்போர் அதிகம். அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்திருந்தார். ஜனவரியில் கட்சி தொடங்குவதாகவும் அறிவித்திருந்தார்.

உடல் நிலை பாதிப்பு

உடல் நிலை பாதிப்பு

ஒரு வேளை அவர் ஜனவரியில் கட்சி தொடங்கி தனித்து போட்டியிட்டிருந்தால் என் வழி தனி வழி என்ற பஞ்ச் தமிழகம் முழுவதும் அதிர்ந்திருக்கும். அது போல் பேரை கேட்டதும் சும்மா அதிருதுல்ல என்ற டயலாக்கும் கனகச்சிதமாக சூழலுக்கு ஏற்ப பொருந்திருக்கும். ஆனால் உடல் நிலை பாதிப்பால் அவரால் அரசியலுக்கு வர இயலாது என கூறிவிட்டார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

இதனால் இனி அவர் படங்களில் நடிப்பார் என்றே கருதப்படுகிறது. அப்படி மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் அண்ணாத்த. இந்த படம் வரும் நவம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள். ரஜினி அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் முதல்வர் ஆனாலும் ஆகாவிட்டாலும் என ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பது இந்த படத்தை.

பஞ்ச்

பஞ்ச்

இதிலாவது அவரை பார்க்கலாம் என்பதுதான். அரசியலுக்கு வரவில்லை எனும் போது இந்த படத்தில் பஞ்ச் வசனங்கள் இருக்குமா, அப்படியிருந்தால் எந்த மாதிரியான வசனங்கள் வைக்கப்படும். அரசியலுடன் ஒன்றி இருக்கும் பஞ்ச் வசனங்களுக்கே தியேட்டரில் அப்ளாஸ் அள்ளும், இந்த படத்தில் அது போன்ற பஞ்ச் வைத்தால் நீங்க தான் அரசியலுக்கு வரலையே எதுக்கு இந்த பஞ்ச் என டிரோல் செய்வர். இதனால் இந்த படத்தின் டயலாக்குகளும் பஞ்ச்சும் எப்படி இருக்கும் என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். மொத்தத்தில் இது அண்ணாத்த தீபாவளியாகவே இருக்கும்.

English summary
What will be the Punch Dialogue in Annaatthe movie which was released in November 4.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X