சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சக்கரத்தை" விடுங்க.. தமிழ்நாட்டில் வானிலை எப்படி இருக்கும்? வெதர்மேன் கொடுத்த முக்கிய வார்னிங்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் அடுத்த 3 நாட்களுக்கும் வானிலை எப்படி இருக்கும் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார்.

சென்னை வானிலை மையத்தின் கணிப்புப்படி, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மழை பெய்யும். இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இல்லையென்றால் 2 நாட்கள் தள்ளிப்போய் 7ம் தேதி தாழ்வு பகுதி உருவாகவும் வாய்ப்பு உள்ளது.

காற்றழுத்த பகுதிக்கு முன்னதாக கிழக்கு காற்று காரணமாக தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தென் மாவட்டங்களில் இதனால் சில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன.

அடுத்த 3 மணிநேரம்.. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு.. வானிலை அப்டேட் அடுத்த 3 மணிநேரம்.. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு.. வானிலை அப்டேட்

வானிலை

வானிலை

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்றும் அடுத்த 3 நாட்களுக்கும் வானிலை எப்படி இருக்கும் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார். அதில், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்து வருகிறது. இன்று தென் மாவட்டங்களில், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, மற்றும் அதை சுற்றி உள்ள மாவட்டங்கள் மழைக்கான ஹாட் ஸ்பாட்களாக இருக்கும். சென்னை மற்றும் வடக்கு தமிழ்நாட்டில் 3ம் தேதி மாலையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வரை மழைக்கு சாதகமான சூழ்நிலை இருக்கும். சக்கரம் பற்றிய அப்டேட் - இந்த காற்றழுத்த தாழ்வு உருவாவதற்கான சக்கரம் பார்க்க சுவாரசியமாக இருக்கிறது.

சக்கரம்

சக்கரம்

சக்கரம் என்ன ஆனாலும் சரி.. கண்டிப்பாக தமிழ்நாட்டிற்கு 2வது மற்றும் 3வது வாரங்களில் இந்த மாதம் மழை பெய்யும். Madden-Julian Oscillation காரணமாக மழை பெய்யும். Madden-Julian Oscillation மீது நம்பிக்கை வையுங்கள். இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கிழக்கு காற்று தமிழ்நாட்டிற்கு மழையை கொண்டு வர போகிறது. உள்மாவட்டங்களில் மதியத்தில் இருந்து இரவு நேரங்களில் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் இரவில் இருந்து காலை வரை மழை பெய்யும். கோவை-திருப்பூர்-ஈரோடு மேற்கு தமிழக பகுதிகளிலும் அடுத்த 3 நாட்களில் மழை பெய்யும்.

தூத்துக்குடி

தூத்துக்குடி

நேற்று முதல் டிசம்பர் 2ம் தேதி காலை வரை - டெல்டா முதல் தூத்துக்குடி மாவட்டம் வரை சிறப்பாக மழை பெய்ய ஏதுவான நிலை உள்ளது. இங்குதான் மழை பெய்யும் என்று குறிப்பாக மாவட்டங்களை குறிப்பிட முடியாது. மழை பரவலாக பெய்யும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தை பொறுத்தவரை திடீரென மழை 3-4 நாட்களுக்கு பெய்யும் வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக சனிக்கிழமை இரவு, திங்கள் கிழமை காலை மழை பெய்வதற்கான சூழ்நிலைகள் உள்ளன.

சென்னை

சென்னை

பனி பெய்தால் மழை பெய்யாது என்ற எண்ணத்தை தூக்கி போடுங்க. அடுத்த 3 நாட்கள் மழையை நன்றாக என்ஜாய் செய்யுங்கள். சக்கரம் பற்றி பொறுமையாக டிராக் செய்யலாம். உங்களுடன் அடுத்த 3 நாட்களுக்கு குடைகளை வைத்துக்கொள்ளுங்கள். திடீரென குட்டி மழை பெய்ய வாய்ப்பு உள்ளது, என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது அப்டேட்டில் குறிப்பிட்டு உள்ளார்.

English summary
What will be the weather like in Tamil Nadu coming days? Weatherman update
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X