சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

5 மணி நேர கூட்டத்திலேயே இப்படி ஆயிருச்சே.. இப்படியே போனா.. திமுகவுக்குதானே லாபம்.. சலசலக்கும் கோட்டை

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் இன்னமும் சிக்கல் எழுந்துள்ளது சலசலக்கும் கோட்டை

Google Oneindia Tamil News

சென்னை: "விட்டுட்டார் ஓபிஎஸ்.. நின்னுட்டார் இபிஎஸ்" என்கிறார்கள் அதிமுகவினர்.. யார் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புள்ளது? இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு இவ்வாறு ரத்தத்தின் ரத்தங்களில் சிலர் சொல்ல தொடங்கி உள்ளனர்.

ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே பனிப்போர் விலகி, நேரடியாகவே மோதல் போக்கு எழுந்துள்ளது.. யார் முதல்வர் வேட்பாளர் என்பது குறித்து இருவேறு கருத்துக்கள் கட்சிக்குள் எழுந்தபடியே உள்ளன.

உண்மையிலேயே என்னதான் நடக்கிறது? இந்த பிரச்சனை என்னாகும்? என்று சில கட்சியின் நிர்வாகிகள், தீவிர தொண்டர்களிடம் கருத்தை கேட்டோம்... அவர்கள் சொன்ன யூகங்கள் இதுதான்:

துணை முதல்வர் பதவியில் இருந்து ஓபிஎஸ் ராஜினாமாவா? காரில் தேசிய கொடி அகற்றமாம்!!துணை முதல்வர் பதவியில் இருந்து ஓபிஎஸ் ராஜினாமாவா? காரில் தேசிய கொடி அகற்றமாம்!!

 ஓபிஎஸ்

ஓபிஎஸ்

"ஆரம்பத்துல இருந்தே எடப்பாடியார் ஸ்திரத்தன்மையோடு இருந்து வருகிறார்.. சிறப்பாக பணியாற்றுகிறார் என்பதைவிட, கம்பீரமாக பபணியாற்றுகிறார் என்றுதான் சொல்லணும்.. பதவி இருந்தபோது, ஓபிஎஸ்ஸிடம் பணிவு மட்டும் இருந்தது.. ஆனால் துணிவு இல்லை.. இப்போது ஈபிஎஸ்ஸிடம் ரெண்டுமே இருக்கு. ஓபிஎஸ் என்ன செய்தார்? யாருக்கும் தெரியாமல் போய் டிடிவி தினகரனை சந்தித்தபோதே நம்பிக்கையை இழந்துட்டார்.. எப்போவெல்லாம் எடப்பாடியார் முதல்வர் வேட்பாளர் என்று பெயர் எழுகிறதோ அப்போதெல்லாம் அதை ஏற்கவே இல்லை.

 செல்வாக்கு

செல்வாக்கு

அதுமட்டுமல்ல, எடப்பாடியார் ஆட்சியில் கொங்கு மண்டலம் நல்ல முறையில் கவனிக்கப்பட்டு வருகிறது... திமுக செல்வாக்கு குறைந்து அதிமுக பலம் பெருகி வருகிறது.. அதனால்கூட, அந்த மண்டலத்தை சேர்ந்த தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர் போன்ற அமைச்சர்கள் எடப்பாடியாருக்கு ஆதரவு தந்திருக்கலாம்" என்கிறார்கள் எடப்பாடியார் ஆதரவாளர்கள்.

கூத்தாடி

கூத்தாடி

ஆனால், நடுநிலையாளர்களோ, "வெறும் 5 மணி நேரம் கூட்டத்திலேயே இவர்களின் ஒற்றுமை என்னன்னு ஊர் பார்த்துடுச்சு.. ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது மாதிரி இவர்களின் சண்டையால் லாபம் அடைய போறது என்னவோ திமுகவாகதான் இருக்கும் போல தெரியுது.. ஒற்றுமையும், இணக்கமான போக்கும் தேர்தல் வரக்கூடிய சமயத்திலும் இல்லைன்னா எப்படி? ஏன் இந்த முடிவை தள்ளி வெச்சிருக்காங்க? அடுத்து நடக்ககூடிய மீட்டிங்கிற்குள் அதாவது இந்த இடைபட்ட காலத்திற்குள் ரகசிய சந்திப்பு, அணி திரட்டல் உள்ளிட்ட பல விஷயங்களை இவர்களுக்குள் செய்து முடித்துவிடலாம்.

தள்ளுபடி

தள்ளுபடி

மத்திய பாஜக தனக்கு முழு சப்போர்ட்டில் இருக்கும் தைரியத்தில் இந்த 3 வருஷத்தை ஓபிஎஸ் விட்டுட்டார்.. இதற்குள் எடப்பாடியார் ஸ்டிராங் ஆயிட்டார்.. இருந்த ஊழல் வழக்குகளும் ஒவ்வொன்றாக தள்ளுபடி ஆகி கொண்டும், வலுவிழந்து கொண்டும் இருக்கிறது.. என்ன சொன்னாலும் சரி, ஓபிஎஸ்ஸை பாஜக விட்டுவிடாது.. எடப்பாடியாரைவிட, ஓபிஎஸ் மீது அக்கட்சிக்கு மரியாதையும், பிடிப்பும் அதிகம்.. இவர்களுக்குள் என்னதான் கட்டி உருண்டாலும் மக்கள் முடிவுதான் இறுதியானது.

விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்

அதேசமயம், இந்த கொரோனா நேரத்தில் எடப்பாடியாருக்கு நல்ல ஆதரவு பெருகி இருக்கு.. அவருடன் விஜயபாஸ்கருக்கும் ஆதரவு சேர்ந்திருக்கு.. ஓபிஎஸ் விட்டுட்டார்.. அவ்வளவுதான்.. ஆட்சியை தக்கவைத்து கொள்ள உழைப்பும் புத்திசாலித்தனமும் தான் அவசியம்.. தப்பித்தவறி சசிகலாவின் பல தவறுகளில் ஒரு நல்லது நடந்தது என்றால், அது எடப்பாடியாரை முதல்வர் ஆக்கியதுதான்.

இரட்டை இலை

இரட்டை இலை

ஆனால், இரட்டை இலை சின்னம் விவகாரம் ஒன்னு இன்னும் பேலன்ஸ் இருக்கு.. அதுல இவர்கள் சேர்ந்துதான் கையெழுத்து போடணும்.. இது எப்படி சாத்தியமாகும் என்று தெரியவில்லை.. அதுக்காகவாவது இவர்கள் ஒன்று சேர்வார்களா? இல்லையென்றால் சசிகலாவிடமே தஞ்சம் அடைவார்களா என்று தெரியவில்லை" என்கிறார்கள். மேலும் சிலர் இதை பற்றி சொல்லும்போது, "ரெண்டு பேரும் வேணாம்.. பொதுவானவர்கள் வேட்பாளர்களா அறிவிச்சால் என்ன? ஆட்சி செய்தவர்களே மறுபடியும் ஆட்சி செய்யணும்னு சட்டம் இருக்கா?

சகாயம்

சகாயம்

ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை அறிவித்தால் என்ன? மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜ் ஐபிஎஸ்-ஐ முதல்வர் வேட்பாளரா அறிவிச்சால் என்ன? ஜெயலலிதாவால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர்தான் நடராஜ்.. திமுகவை விரல் விட்டு ஆட்ட இவர்தான் சரியான நபர்.. இல்லேன்னா வேறு யாராவது உயர்துறை போலீஸ் அதிகாரிகளை நியமனம் செய்தால்தான், திமுகவை சமாளிக்க முடியும்.. திமுகவின் எல்லா ஜாதகமும் அவர்கள் பாக்கெட்டில்தான் இருக்கும்.. அவர்களை சரிகட்ட ஓய்வு பெற்ற இதுபோன்ற அதிகாரிகளாலேயே முடியும்" என்கின்றனர்.

English summary
What will happen in AIADMK camp?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X