சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அன்னிக்கு அடிச்சது "3 அடி".. வெளியே வந்ததும் "ஒரே அடி".. அதிர வைக்க போகும் சசிகலா!

சசிகலா வருகையால் அதிமுகவில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று தெரியவில்லை

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா வெளியே வந்ததும் என்ன நடக்கும் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. ஆனால் ஏகப்பட்ட சம்பவங்கள் நடக்கும் போலத்தான் தெரிகிறது. அதனால்தான் அவரை வெளியே கொண்டு வருகிறார்களோ என்றும் தோன்றுகிறது.

அன்று ஜெயலலிதா நினைவிடத்தில் 3 அடி அடித்து விட்டு மனசு முழுக்க கோபம், கொந்தளிப்புடன் சிறைக்குப் போன சசிகலாவைப் பார்த்த பலருக்கும் இன்று வெளியே வரும் போது அத்தனை வைராக்கியமும் அதி பயங்கரமாக மாறிப் போயிருக்கும் என்றுதான் ஊகிக்கிறார்கள்.

Recommended Video

    விரைவில் சாதாரண வார்டுக்கு மாறும் சசிகலா.. மருத்துவமனை வெளியிட்ட ஹேப்பி நியூஸ்..!

    உண்மைதான்.. இதனால்தான் சசிகலாவின் வருகையை பலரும் பயத்தோடும், அச்சத்தோடும், பரபரப்போடும் எதிர்நோக்கியுள்ளனர். காரணம், சசிகலா ஜெயிலுக்குப் போவதற்கு முன்பும், போன பின்பும் நடந்த துரோகச் செயல்கள் அத்தனை இருக்கிறது. அத்தனையையும் இது நாள் வரை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த சசிகலா வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுக்கப் போகிறார்.

    "சின்னம்மா" வர போகிறார்.. "அந்த 6 பேர்".. செம குஷியாமே.. எடப்பாடியாருக்கு எகிறும் டென்ஷன்!

     மரண அடி

    மரண அடி

    அன்று சமாதியில் 3 அடி அடித்து விட்டுப் போன சசிகலா வெளியே வந்ததும் ஒரே அடியை கொடுக்க போகிறார்.. அதுவும் பலமான மரண அடியாக இருக்கும் என்பதுதான் அமமுகவினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனால்தான் அதிமுகவில் பலரும் இப்போதே சசிகலா பக்கம் தாவத் தயாராகி வருகின்றனர். சசிகலா வெளியே வந்ததும்தான் இருக்கிறது கச்சேரி என்று சொல்கிறார்கள்.

    முதல்வர்

    முதல்வர்

    சசிகலா மனதில் இப்போது முழுக்க முழுக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் நிறைந்திருக்கிறாராம். காரணம், அந்த அளவுக்கு அவர் எடப்பாடியாரை நம்பினார். ஆனால் சசிகலாவுக்கு அதிமுகவில் இடம் இல்லை என்று அவர் திட்டவட்டமாக சொல்லி விடவும், அதை சசிகலா எதிர்பார்க்கவில்லையாம். அதிர்ச்சியாகி விட்டாராம். தனது மனதில் இருந்த மற்ற எதிரிகளை தூக்கிப் போட்டு விட்டாராம் சசிகலா. முழுக்க முழுக்க முதல்வர் எடப்பாடியாருக்கு பாடம் கற்றுக் கொடுக்கப் போகிறார் சசிகலா என்றுதான் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.

     வரவேற்பு

    வரவேற்பு

    மொத்த ஏற்பாடுகளும் இப்பவே தயாராகி விட்டதாம். பலத்த வரவேற்பு ஒரு பக்கம் இருந்தாலும், சசிகலாவுக்கு வரவேற்பு கொடுக்கும் நாளிலேயே அதிமுகவை அதிர வைக்கும் பல்வேறு ஏற்பாடுகளும் கூட செய்து முடித்து விட்டார்களாம். அதாவது பல அமைச்சர்கள், பல எம்எல்ஏக்கள் என அதிமுகவின் பல முக்கிய தலைகள், சசிகலா பக்கம் அன்றைய தினம் அணிவகுக்கும் என்று சொல்கிறார்கள்.

     செம கோபம்

    செம கோபம்

    சசிகலா செம கோபத்தில் இருப்பதாலும், முன்பை விட பக்குவமாகி விட்டதாலும், அவர் அடிக்கப் போகும் அடி மிக பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமமுக உடைந்தபோது 18 பேர் தினகரன் பக்கம் ஆதரவாக வந்தனர். இந்த முறை அதை விட 2 மடங்கு வெளியே வருவார்கள் என்று சொல்கிறார்கள். ஒரு வேளை பெருமளவில் சசிகலா பக்கம் அதிமுகவிலிருந்து எம்எல்ஏக்கள் திரண்டால், தமிழகத்தில் ஆட்சிக்கும் பேராபத்து ஏற்படும்.

     ஜனாதிபதி

    ஜனாதிபதி

    ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது குழப்பம் பெரிதானாலோ உடனடியாக ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வரவும் டெல்லி யோசித்து வருவதாக இன்னொரு தகவல் உலா வருகிறது. அப்படி நடந்தால் சட்டசபைத் தேர்தலை தமிழ்நாடு, ஆளுநர் ஆட்சியின் கீழ் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். அது பாஜகவுக்கு பலன் தரும்.. கூடவே சசிகலாவுக்கும் எளிதாக அமையும்.. சிக்கலை சந்திக்க போவது என்னவோ அதிமுகவும்.. கூடவே திமுகவும்தான்.

     தலையெழுத்து

    தலையெழுத்து

    அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எல்லாவற்றையும் பார்க்கும் தலையெழுத்து மக்களுக்குத்தான்.. கூவத்தூரையே பார்த்தாச்சு.. இதையும் சேர்த்து பார்த்து வைப்போம்...!

    English summary
    What will happen in AIADMK due to Sasikalas Political re entry
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X