சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சைலண்ட்".. கம்முனு இருக்கும் கருணாஸ்.. சசிகலாவை அப்படி நம்பினாரே.. சாமர்த்தியமா.. இல்லை சரண்டராவாரா

கருணாஸ் இனி யாருடன் கூட்டணி வைப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: சாமர்த்தியம் என்பதா? சைலண்ட் ஆக்‌ஷன் என்பதா? தெரியவில்லை.. கருணாஸின் நடவடிக்கைகள் சமீப காலமாக அப்படித்தான் இருந்து வருகின்றன..!

அன்று கூவத்தூர் சம்பவத்தில் அதிக அளவு பேசப்பட்டவர் கருணாஸ்.. சர்ச்சைகளுக்கு உள்ளானவர், சலசலப்பை ஏற்படுத்தியவர்.. சசிகலாவின் தீவிர ஆதரவாளராகவே கருதப்படுபவர்..

ஜெயிலுக்குள் சசிகலா இருந்தபோதுகூட, எடப்பாடியாருக்கு முழு ஆதரவாக கருணாஸ் செயல்படாமல் இருந்ததே, சசிகலா மீதான விசுவாசத்திற்கு ஒரு உதாரணமாகும்.

 'ஜெயாவையே காப்பாற்றியவர் சசிகலா'.. மனதில் உள்ளதை கொட்டிய திருமா.. திமுகவுக்கு மறைமுக எச்சரிக்கையா? 'ஜெயாவையே காப்பாற்றியவர் சசிகலா'.. மனதில் உள்ளதை கொட்டிய திருமா.. திமுகவுக்கு மறைமுக எச்சரிக்கையா?

 கருணாஸ்

கருணாஸ்

இந்த சமயத்தில்தான் சசிகலாவின் வருகைக்கான அறிகுறி தென்பட்டது.. அந்த சமயத்தில்தான் கருணாஸ் தன் சார்பாக அதிமுக அரசுக்கு 2 கோரிக்கைகளை வைத்தார்.. ஒன்று, வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால், முக்குலத்தோர் சமூகத்துக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். எங்களது சமூகமும், பிற சமூகங்களைப்போல பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும்... மதுரை ஏர்போர்ட்டிற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும்.. எங்கள் கட்சிக்கு 2 சீட் தர வேண்டும்.." என்றார்.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

கருணாஸ் இந்த கோரிக்கைகளை முன்வைத்து பல நாட்கள் ஆகிறது.. இது சம்பந்தமாக அதிமுக எந்தவித பதிலையும் இதுவரை தரவில்லை.. ஆனால், சில பேட்டிகளில் கருணாஸ் சொல்லும்போது, சசிகலா குறித்த கருத்தையும் மறக்காமல் பதிவு செய்திருந்தார். "எடப்பாடி பழனிசாமி சசிகலாவால் உருவாக்கப்பட்டவரா? எம்எல்ஏக்களால் உருவாக்கப்பட்டவரா" என்று செய்தியாளர்கள் கேட்டனர்.. அதற்கு கருணாஸ் நேரடியாக எந்த பதிலையும் சொல்லாமல், "அதை நான் சொல்லக்கூடிய நேரம் வரும்போது நிச்சயமாக சொல்வேன்..." என்று ஒரு சஸ்பென்ஸ் வைத்தார்.

 ஊடகங்கள்

ஊடகங்கள்

அதுமட்டுமல்ல, சசிகலா வெளியே வந்த சமயம், அதிமுக அமைச்சர்கள் எதிர்கருத்தை முன்வைத்த சமயம், கருணாஸ் தன் தரப்பு கருத்தையும் ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார். "கூவத்தூரில் என்ன நடந்தது என்று அங்கிருந்த எல்லாருக்கும் தெரியும். சசிகலா பற்றி இன்னைக்கு குறை சொல்பவர்கள்., அன்னைக்கு என்ன சொன்னாங்க என்று இன்னைக்கும் ஊடகங்களில் ஆதாரம் உள்ளது.

 ஜெயலலிதா

ஜெயலலிதா

முக்குலத்தோர் புலிப்படை அமைப்புக்கு அரசியல் அடையாளத்தை கொடுத்தவர் ஜெயலலிதா..
அதற்கு உறுதுணையாக இருந்தவர் சசிகலா. ஜெயலலிதா, சசிகலா உருவாக்கிய இந்த ஆட்சிக்கு சிறு இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். பதவியே இல்லாமல் மோடியை எதிர்த்தார் ச‌சிகலா... வெயிட் & சீ, (Wait And See)" என்றார்.

 ஆதரவு கருத்து

ஆதரவு கருத்து

இதனால் எந்நேரமும் கருணாஸ் சசிகலா பக்கம் தாவுவார் என்றும், அவரை முதல் நபராக சென்று சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.. ஜெ.பிறந்த நாள் அன்றுகூட, ஒருசில கட்சி தலைவர்கள் சசிகலாவை சந்தித்தபோது, எதிர்பார்க்கப்பட்டவர் கருணாஸ்.. ஆனால், சசிகலாவை சந்திக்க அவர் வரவே இல்லை.. சந்தித்து பேச நேரம் கேட்டிருப்பதாகவும், விரைவில் சந்திப்பேன் என்று மட்டும் கூறியிருந்தார்.

 வாய்ப்பு

வாய்ப்பு

இப்போது அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.. 2 சிக்கல்கள் கருணாசுக்கு வந்துள்ளது.. அமமுகவுடன் தைரியமாக கூட்டணி இனி வைக்க முடியாது.. அதிமுகவுடன் வேறு வழியில்லாமல் கூட்டணி வைக்க வேண்டி இருக்கும்.. அதேபோல, வன்னியர்களுக்கான ஒதுக்கீடு மட்டுமே அமலாகி உள்ளதால், கருணாஸின் கோரிக்கை இப்போதைக்கு எடுபடாது..

 2 சீட்

2 சீட்

மிச்சம் இருப்பது 2 சீட் கோரிக்கைதான்.. அது கிடைக்குமா என்பதும் தெரியவில்லை.. ஒருவேளை கருணாஸ் சசிகலாவை சந்தித்து பேசியிருந்தால், இந்நேரம் அதிமுக கூட்டணியை தக்க வைக்க முடியாமலும் போயிருந்திருக்கலாம்.. இது கருணாஸின் கச்சிதமான காய் நகர்த்தல் என்று சொல்வதா? சந்தர்ப்பவாத அரசியல் என்று சொல்வதா? என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!

English summary
What will Karunas do now with Sasikala's political decision
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X