சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சைலண்ட் மோடில் அதிமுக.. ஜெ.பாணியில் எடப்பாடியார்.. ரஜினி பற்றி கப்சிப்.. நிர்வாகிகளுக்கு உத்தரவு?

ரஜினியின் பேச்சுக்கு அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்று தெரியவில்லை

Google Oneindia Tamil News

Recommended Video

    ரஜினி வெளியிட்ட அவுட்லுக் ஆதாரத்தில் இருப்பது என்ன?

    சென்னை: பேசி பேசியே ஒரு நபரை பெரிதாக்குவதைவிட, அதை கண்டுகொள்ளாமல் விடுவதே சாலச்சிறந்தது என்பதுதான் ஜெயலலிதா பாணி.. அதைதான் இப்போது எடப்பாடியார் தரப்பு கையில் எடுத்துள்ளது.. ரஜினி சம்பந்தமாக யாரும் எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்ற ரகசிய உத்தரவும் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    துக்ளக் விழாவில் ரஜினி பேசியதில் இருந்தே விவகாரம் வெடித்து கிளம்பி வருகிறது.. இதற்கு வலுப்பும் பெருகி வருகிறது.. காரணம், திராவிடர் கழகம் சம்பந்தப்பட்ட விஷயம் என்று யாரும் இதை பார்க்கவில்லை.

    தந்தை பெரியார் என்பதால்தான் கூடுதல் கவனம் இதில் செலுத்தப்பட்டு, கண்டனங்களும், கருத்துக்களும், விவாதங்களும் உருவாக தொடங்கியது. அந்த வகையில், திகவினர் தவிர, திமுக, நாம் தமிழர், உள்ளிட்ட பலரும் எதிர்த்து குரல் எழுப்பி வருகின்றனர்.

    சட்டசபை தேர்தலிலும் திமுகவுடனான கூட்டணி தொடரும்: காங். செயலாளர் சஞ்சய்தத்சட்டசபை தேர்தலிலும் திமுகவுடனான கூட்டணி தொடரும்: காங். செயலாளர் சஞ்சய்தத்

    கருணாநிதி

    கருணாநிதி

    திமுக தலைவர் முக ஸ்டாலின் ரஜினிக்கு அவரது பாணியிலேயே மிகச் சுருக்கமான பேட்டியின்மூலம் நேற்று பதிலடி தந்து விட்டார். "95 ஆண்டு காலம் தமிழினத்திற்காக போராடியவர் பெரியார். அப்படிப்பட்டவரைப் பற்றிப் பேசும்போது சிந்தித்து,யோசித்துப் பேச வேண்டும். அதை நடிகர் ரஜினிகாந்த் உணர வேண்டும் என்று அழகாக பதிலடி கொடுத்து விட்டார் ஸ்டாலின். அதை விட முக்கியமாக, ரஜினியை வெறும் நடிகர்தான், அரசியல்வாதி அல்ல" என்றும் ஸ்டாலின் பொளேர் என்று விளாசி விட்டு போய் விட்டார்.

    ஓபன் டாக்

    ஓபன் டாக்

    கிட்டத்தட்ட திமுகவை போலத்தான் அதிமுகவும் இந்த விவகாரத்தை அணுக போவதாக கூறுகிறார்கள். ஸ்டாலின் ஓபனாக சொல்லிவிட்டார், ஆனால் அதிமுக சொல்லவில்லை.. அவ்வளவுதான் வித்தியாசம்.. ரஜினி விஷயத்தை பெரிதாக்க அதிமுக தரப்பு விரும்பவில்லையாம்.. தேவையில்லாமல் ரஜினிக்கு ஃப்ரீ பப்ளிசிட்டி தர வேண்டாம் என்றும், இது சம்பந்தமாக எந்த கருத்தும் தெரிவிக்க வேண்டாம் என்றும் ரகசிய உத்தரவு கட்சி மேலிடம் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

    நிர்வாகிகள்

    நிர்வாகிகள்

    எதையாவது கருத்து சொல்ல போய், ரஜினியை நாமளே பெரிய ஆளாக்க வேண்டாம் என்பதால், அமைதி காக்கவும் கட்சி நிர்வாகிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனராம். மறைந்த ஜெயலலிதாவும் இப்படித்தான் இருப்பார்.. கலைஞர் கருணாநிதி தவிர வேறு யாரையுமே அவர் கண்டுகொள்ள மாட்டார்.. யாருக்கும் பதிலடி தர மாட்டார்.. சட்டப்பேரவையில்கூட கருணாநிதியைதான் கேள்வி கேட்பார்.. எத்தனை பேர் விமர்சித்தாலும், அதை காதிலேயே போட்டுக் கொள்ளாமல், அதை கண்டுகொள்ளாமலும் இருப்பார் ஜெயலலிதா.. அவரது ஒரே டார்கெட் கலைஞர் மட்டுமே!

    வைகைச்செல்வன்

    வைகைச்செல்வன்

    அதைதான் இப்போது திமுக, அதிமுகவினர் ரஜினி விஷயத்தில் கையில் எடுத்துள்ளனர்.. ஆனால், "தந்தை பெரியார் குறித்த கருத்து, ஏற்புடைய கருத்து இல்லை என்பதே அதிமுகவின் கருத்தும்" என்று அதிமுகவின் செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வனே பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

    ஜெயக்குமார்

    ஜெயக்குமார்

    அதேபோல ஒரு தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, 'பெரியாரை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ரஜினிகாந்த் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. திராவிட கழகம் மறுத்திருந்தும் மீண்டும் ஏன் பேசுகிறார்? பெரியாரின் புகழுக்கு இழுக்கு ஏற்படும் வகையில் நடந்தால் கட்டாயம் அதிமுக கண்டன குரல் எழுப்பும். எதையும் முழுமையாக அறிந்துகொண்டு பேசவேண்டும். போற போக்கில் பேசக்கூடாது. பெரியாரை ஏன் ரஜினி வம்புக்கு இழுக்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

    ஜெ.பாணி

    ஜெ.பாணி

    அதிமுகவின் முக்கிய தலைவர்களான வைகைச்செல்வன், ஜெயக்குமார் போன்றவர்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்திருந்தாலும், இப்படி ஒரு கட்டுப்பாடு கட்சி நிர்வாகிகளுக்கு மேலிடம் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுவது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை!!!

    English summary
    sources say that, the AIADMK executives have been asked not to comment on the Rajini issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X