சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"வந்தா ஜெயிக்கணும்.. வர்றது முக்கியமில்லை".. வருவாரா ரஜினி.. டரியல் ஆகுமா திராவிட கட்சிகள்?

ரஜினி ஜனவரியில் கட்சி ஆரம்பிக்க போகிறாரா?

Google Oneindia Tamil News

சென்னை: 'வந்தா ஜெயிக்கணும்' என்பதையே இந்த முறை ஆலோசனை கூட்டத்திலும் சொல்லி கொண்டே இருந்தாராம் ரஜினி.. இதையடுத்து, அரசியலுக்கு வருவதற்கான தயக்கம் கலந்த பயம் ரஜினியிடம் இருப்பதாக நடுநிலைவாதிகள் சொல்கின்றனர்!

நேற்றைய ரசிகர் மன்ற ஆலோசனை கூட்டத்தில் ரஜினி முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. பிறகு நேற்று சாயங்காலம் அறிவிப்பு வெளியாகும் என்று ரசிகர் மன்ற நிர்வாகிகள் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், இதுவரை ஒன்றையும் காணோம்.

அப்படியானால் ஆலோசனை கூட்டத்தில் என்னதான் நடந்தது? என்ன பேசினார்கள்? ரஜினியின் உண்மையான நிலைப்பாடு என்ன? என்பது குறித்து அரசியல் நோக்கர்கள் சிலரிடம் பேசினோம். அவர்கள் சொன்னதாவது:

நிர்வாகிகள்

நிர்வாகிகள்

"கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்று அவருக்கு ஆசை உள்ளது... ஆனால், எதற்காகவோ தயங்குகிறார்.. கட்சி ஆரம்பிக்கலாமா, ஆரம்பித்தால் எப்படி கொண்டு போக வேண்டும், என்பது குறித்து நிர்வாகிகளிடம் கேட்டிருக்கிறார்.. அதுவும் தனித்தனியாக விளக்கம் கேட்டு, அவர்களின் கருத்தை கூர்ந்து கவனித்துள்ளார்... அதற்கு நிர்வாகிகள் ஒருமித்தமாக, கண்டிப்பாக வந்தே ஆக வேண்டும்.. ஜனவரியில் கட்சி ஆரம்பித்தால்கூட போதும்.. அடுத்த 4 மாசத்தில் நம்மால் எதையும் செய்ய முடியும்.

 வீடியோ கான்பரன்ஸ்

வீடியோ கான்பரன்ஸ்

ஒருவேளை தொற்று காரணமாக யோசித்தால், நேரில்கூட பிரச்சாரத்திற்கு வர வேண்டாம்.. வீடியோ கான்பரன்ஸ் போதும்" என்று தெரிவித்துள்ளனர். ஆனால் வீடியோ கான்பரன்ஸ் முடிவை அவர் ஏற்கவில்லையாம்.. மக்களை சந்தித்தால் நேரியாகதான் சந்திக்க வேண்டும் என்பதுதான் அவர் முடிவாக இருக்கிறது போலும்.

 நான் பார்த்துக்கறேன்

நான் பார்த்துக்கறேன்

அதேசமயம், கூட்டணி பற்றிய பேச்சும் வந்திருக்கிறது.. அதையெல்லாம் நான் பார்த்துக்கறேன்.. முதல்ல மக்களை சந்தித்து நலத்திட்டங்களை செய்யுங்கள் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.. நான் அரசியலுக்கு வர மாட்டேன்னு நினைச்சுட்டு இருக்கீங்க போல.. நான் பார்த்துக்கிறேன்.. என் மேல எத்தனை ரசிகர்கள் நம்பிக்கை வெச்சிருக்காங்கன்னு எனக்கு தெரியும்.. அவங்க நம்பிக்கையை பொய்யாக்க மாட்டேன் என்றும் சொல்லி உள்ளதாக தெரிகிறது.

 திராவிட கட்சி

திராவிட கட்சி

அதனால், கட்சி ஆரம்பிப்பதில் தயக்கம் உள்ளதே தவிர, கட்சியே ஆரம்பிக்க மாட்டேன் என்று அவர் சொல்ல மாட்டார்.. அப்படியே கட்சி ஆரம்பித்தாலும், பாஜக, காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம் அல்லது பாமக, தேமுதிக, மநீம, அமமுகவுடன் சேர்ந்து கட்சியை ஆரம்பிக்கலாம்.. ஒருவேளை இவர்களுடன் சேர்ந்து ரஜினி களத்தில் குதித்தால், அது நிச்சயம் திராவிட கட்சிகளுக்கு மாற்றாகவே இருக்கும்! என்றனர்.

English summary
Whats Rajinikanths Actual Plan in Assembly Election?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X