சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரஜினிகாந்த் சொன்ன "புரட்சி" இதுதானாமே.. ஆனால் அவர் நினைத்தபடி உடையுமா??.. மில்லியன் டாலர் சந்தேகம்!!

திமுகவுக்கு நேரடியாக குறி வைக்கிறாரா ரஜினிகாந்த் என்ற சந்தேகம் எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: திமுக அதிமுகதான், ,திராவிடம்தான் எனது எதிரி என்று நேரடியாக டார்கெட் வைத்து அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார் ரஜினிகாந்த்! ரஜினியின் அரசியல் அதிரடிகளை உடைப்பது திமுகவின் தீவிரமான வேலையாக உள்ள அதே நேரத்தில், திமுகவின் வியூகங்களை தகர்ப்பதும் ரஜினிகாந்தின் முக்கிய நோக்கமாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் அரசியல் வருகை என்பது பலரால் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.. அதே சமயம் ரஜினிகாந்த் முன்னெடுத்து வைத்த அந்த 3 திட்டங்களும் நல்ல விவாதத்தை அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகின்றன.

அப்படி என்ன தப்பா சொல்லிட்டாரு ரஜினிகாந்த், சரியாதானே சொல்லி இருக்கிறார்? முயற்சி செய்து பார்க்காமலேயே 3 ஐடியாவையும் குறை சொன்னால் என்ன அர்த்தம் என்று கேட்கும் விமர்சகர்களும் உள்ளனர்.. இதனால் ஆரோக்கியமான கருத்துக்கள் உலவி வருவது ஏற்க கூடியதாகவே உள்ளது. பொதுவாக எந்த நிகழ்ச்சியில் பேசினாலும் அதற்காக தயார்படுத்தி கொண்டுதான் பேசுவதாக பலமுறை ரஜினியே சொல்லி உள்ளார்.. அப்படி இருக்கும் இவர்களை அட்டாக் செய்து பேசியதை யதேச்சையான ஒன்று என்று கூறி ஒதுக்கிவிட முடியாது.

யூகங்கள்

யூகங்கள்

நித்தம் பல தகவல்கள், யூகங்கள் ரஜினியின் அரசியலை வைத்து பின்னப்பட்டு வருகின்றன... அந்த வகையில் இன்னொரு விஷயமும் கசிந்துள்ளது... மா.செ. கூட்டத்தில் எல்லாவற்றையும் கலந்துதான் ஆலோசித்துள்ளார்.. குறிப்பாக கூட்டணி குறித்தும் அவர்களிடம் கருத்து கேட்டிருக்கிறார் ரஜினிகாந்த்.. ஆனால் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது மட்டும் இந்த கூட்டணி பற்றி எதுவுமே சொல்லவில்லை.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

டாக்டர் ராமதாஸின் பாமக, கமலின் மக்கள் நீதி மய்யம் போன்றவை ரஜினியிடம் பேசி வருகின்றன என்பது ஏற்கனவே தெரிந்ததுதான்.. ஆனால் ரஜினி எதிர்பார்ப்பது அது இல்லை.. ராமதாஸ், கமல் இருவரையும் ரஜினிகாந்த் லேசில் விட்டுவிட மாட்டார்.. அவரது முக்கிய குறி காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.எம்., வி.சிக. போன்ற கட்சிகள்தானாம். அதாவது திமுக கூட்டணியை மொத்தமாக தன் பக்கம் இழுப்பதுதான் அவரது ஐடியா.

நெருக்கம்

நெருக்கம்

பொதுவாக கம்யூனிஸ்ட் கட்சிகள் சினிமா நடிகர்களை ஆதரிப்பவர்கள் இல்லை.. கொள்கைக்கு முரணான சில விஷயங்களை கையாளர்பவர்கள் இல்லை.. ஆனால் கமலிடம் ஒரு நெருக்கம் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆரம்பத்தில் இருந்தே உள்ளது.. இடதுசாரி சிந்தனை என்பதால் வேண்டுமானால் பிணைப்பு இருக்கலாம் என்றே தெரிகிறது.. அதனால் கமலை போலவே ரஜினிகாந்தையும் ஏற்று கொள்வார்களா, கூட்டணி வைப்பார்களா என தெரியவில்லை. ஆனால் எம்பி தேர்தலின்போது செலவு கணக்கு காட்டிய விவகாரத்தில் திமுக மீது கொஞ்சம் அதிருப்தி அவர்களுக்கு இருக்கவே செய்கிறது என்கிறார்கள்!

கேஎஸ் அழகிரி

கேஎஸ் அழகிரி

அதேபோல காங்கிரஸ் கட்சியை சொல்லவே வேணாம்.. கொஞ்சம் நஞ்சம் அதிருப்தி, ஏமாற்றம் இல்லை.. இந்த 2 வருடமாகவே தங்களுக்கு முக்கியத்துவம் கூட்டணியில் இல்லை பலமுறை, பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டுள்ளது.. ஓரிரு முறை கேஎஸ் அழகிரியே இதை வாய்விட்டு சொல்லி அறிக்கையும் வெளியிட்டு.. பிறகு ஒருவழியாக அந்த விஷயம் முடிவுக்கு வந்தது.. ஆனால் ராஜ்ய சபா சீட் விவகாரத்தில் திரும்பவும் அப்செட் ஆகிவிட்டனர். அதனால் அதிருப்தி தரப்பை தன்பக்கம் இழுக்கும் முயற்சியில் ரஜினிகாந்த் தரப்பு இறங்கலாம் என்கிறார்கள். போதாக்குறைக்கு கூடவே கராத்தே தியாகராஜனும், திருநாவுக்கரசும் உள்ளதால் காங்கிரஸை பணிய வைக்க பலே முயற்சியும் மேற்கொள்ளப்படலாம் என்றே தெரிகிறது.

திருமாவளவன்

திருமாவளவன்

விசிகவை பொறுத்தவரை ஆரம்பத்தில் ரஜினியுடன் இணக்கமான போக்குதான் இருந்தது.. 234 தொகுதிகளிலும் போட்டி என்று சொன்னபோது ரஜினிகாந்த்தை வரவேற்று பேசியதில் திருமாவளவனும் ஒருவர்.. "கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை இட்டு நிரப்பும் ஆற்றல் ரஜினிக்கு உள்ளது" என்று சொன்ன திருமாவளவன்தான் கடந்த மாதம் எதிர்மறையான கருத்தை முன்வைத்தார்... "70 வயது வரை அரிதாரம் பூசி, எல்லாத்தையும் அனுபவித்து அதிகாரத்தில் அமர நினைப்பவர்கள் இருக்கும்போது, 30 ஆண்டுக்காலம் மக்களுக்காக உழைத்த விசிக ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது" என்றார். எனவே விசிகவை ரஜினிகாந்த் தரப்பு எப்படி இழுத்து கொள்ளும் என்பது எதிர்பார்ப்புக்குரியதுதான்!

வியூகம் - யூகம்?

வியூகம் - யூகம்?

இது எல்லாவற்றிற்கும் மேலாக முக அழகிரியை வைத்து அதாவது அழகிரி தலைமையில் திமுகவை உடைப்பதும் ரஜினிகாந்த் தரப்பின் ஐடியா என்கிறார்கள்.. ஆக, மநீம, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக & முக அழகிரி இவர்களுடன் இணைந்து ரஜினிகாந்த் எதிர்பார்க்கும் "புரட்சி' என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.. இதெல்லாம் யூகம் என்றே எடுத்து கொண்டாலும், தனித்தே போட்டியிடலாம், கூட்டணி வேண்டாம் என்று பிகே வகுத்து கொண்டிருக்கும் வியூகமும் இந்த நேரத்தில் உற்று கவனிக்கத்தக்கது!!

English summary
Rajinikanth is reportedly trying to create a crisis for DMK with the support of CPM and CPI, Congress parties
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X