• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஓஹோ.. எல்லாத்துக்கும் "இவர்"தான் காரணமா.. அடுத்த குறி யார்?.. திமுக அமைச்சரை நெருங்கும் மாஜிக்கள்?

Google Oneindia Tamil News

சென்னை: கடந்த ஒருவாரமாகவே அதிமுகவை கதிகலங்க வைத்த ரெயிடுக்கு பின்னணியில் யார் இருந்தார்கள், இதற்கு என்ன காரணங்கள் என்பது குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கசிந்து வருகின்றன.

திமுக ஆட்சிக்கு வந்ததுமே, அதிமுக மாஜிக்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் தொற்று பாதிப்பு அதிகமாக இருந்ததால், 2 மாத காலமாகவே அதில் முழுமையாக ஈடுபடுத்தி கொண்டு வந்தது.

அசாம் - மிசோரம் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்... திடீர் வன்முறையில் 6 போலீசார் பலி.. பரபர தகவல்வந்தது.

தற்போது தொற்று குறைந்து வரும் நிலையில், தன்னுடைய கவனத்தை வேறு பக்கம் திருப்பி வருகிறது.. அதற்கேற்றபடி உள்ளாட்சி தேர்தலும் விரைவில் வர உள்ளது.

 பலவீனம்

பலவீனம்

இப்படிப்பட்ட சூழலில், ஒருபக்கம் அதிமுகவை பலவீனப்படுத்தி கொண்டே, கொங்குவில் கால் பதிக்கும் வேலையை திமுக முன்னெடுத்து வருகிறது.. அதன் ஒருபகுதியாக, ஏராளமான மாஜிக்கள், முன்னாள்கள், மாற்று கட்சியை சேர்ந்த பிரபலங்கள் திமுக பக்கம் வந்து கொண்டுள்ளனர்.. இதுவரை திமுகவுக்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் கொங்கு மற்றும் மேற்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள்தான்..

 செந்தில்பாலாஜி

செந்தில்பாலாஜி

இவர்களை திமுகவுக்கு அழைத்து வந்ததில் பெரும்பங்கு அமைச்சர் செந்தில்பாலாஜிக்கே சேரும்.. ஒவ்வொரு பிரமுகர்கள் திமுகவில் ஸ்டாலின் முன்னிலையில் இணையும்போது, அங்கு செந்தில்பாலாஜியும் ஆஜராகி இருந்ததே இதற்கெல்லாம் சாட்சி.. இப்படிப்பட்ட சூழலில்தான் திடீரென எம்ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்தது.

 யார் அவர்?

யார் அவர்?

ஊழல் புரிந்த மாஜிக்களின் லிஸ்ட்டை திமுக கையிலெடுத்திருப்பதாகவும், அதில் முக்கியமாக 8 பேர் உள்ளதாகவும், அவர்களைதான் குறி வைத்து களமிறங்க போவதாகவும் செய்திகள் வந்தன.. அதிலும் எஸ்பி வேலுமணியா அல்லது ராஜேந்திரபாலாஜியா என்று வெளிப்படையாகவே சோஷியல் மீடியாவில் விவாதிக்கப்பட்டது.. ஆனால், இந்த 8 பேரில் சம்பந்தமே இல்லாமல் எம் ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்ததுதான், அதிமுகவுக்கே ஜெர்க் தந்த விஷயம்.

 வருமானம்

வருமானம்

மொத்தம் 26 இடங்களில் ரெய்டு நடந்து, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.. இதற்கு என்ன காரணம்? 8 பேரை விட்டுவிட்டு, இவரை ஏன் திமுக குறி வைத்தது என்ற சந்தேகங்களும் எழுந்தன.. அப்போதுதான், இதற்கும் செந்தில்பாலாஜியே பின்னணி காரணமாக இருக்கலாம் என்று கிசுகிசுக்கப்படுகிறது..

 செந்தில்பாலாஜி

செந்தில்பாலாஜி

ஏனெனில், கரூர் தொகுதியில் இவர்கள் 2 பேருமே பலம் மிக்க நபர்கள்.. செல்வாக்கு மிக்கவர்கள்.. அதிமுகவில் செந்தில்பாலாஜி இருந்தபோதிருந்தே இவர்களுக்குள் ஈகோ தலைதூக்கி வருகிறது.. அதனால், யாராவது ஒருத்தர் ஜெயிச்சிட்டு போங்க என்ற மனநிலைக்கு கரூர் அதிமுகவினர் வந்துவிடுவார்கள். இப்போது திமுக பக்கம் வந்தபிறகு இந்த ஈகோ அதிகரித்து வந்துள்ளது.. விஜயபாஸ்கரின் செல்வாக்கை குறைக்கவும், வளர்ச்சியை மட்டுப்படுத்தவும்தான் இந்த ரெய்டு நடவடிக்கை என்கிறார்கள்..

 அதிமுக

அதிமுக

அதுமட்டுமல்ல இதை வைத்து அதிமுகவுக்கு டேமேஜ் ஏற்படுத்தி, கொங்குவில் அதன் செல்வாக்கை சரியவைக்கும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது. இது எல்லாவற்றிற்கும் மேலாக, லஞ்ச ஒழிப்புத்துறையில் உள்ள முக்கிய அதிகாரிகள் செந்தில் பாலாஜியோடு நெருக்கமாக உள்ளவர்கள்தானாம்.. விஜயபாஸ்கரின் முறைகேடுகள் தொடர்பான விவரங்கள் செந்தில்பாலாஜிக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம் என்றும், அதனாலேயே இந்த ரெய்டு சுலபமாக நடந்து முடிந்துள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

திமுக

திமுக

இதுதான் அதிமுகவுக்கு மேலும் கதிகலங்க வைத்துள்ளது.. அந்த 8 பேரில் உள்ளவர்கள், திமுக பக்கம் இப்போதே தூது அனுப்ப தொடங்கி விட்டனராம்.. திமுக தரப்பில் உள்ள தங்களுக்கு சாதகமான விஐபிக்களை வைத்து இந்த சமாதான நடவடிக்கையில் இறங்கி வருகிறார்களாம்.. அவர்களில் பெரும்பாலானோர் கொங்குவை சார்ந்தவர்கள் என்பதால், இதற்கும் செந்தில்பாலாஜியைதான் நெருங்கி வருகிறார்களாம்.. இருந்தாலும் அடுத்த குறி யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது!

English summary
Whats the real reason for Raided in Ex Minister MR Vijayabaskars house
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X