சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"முருகன்".. மேலிடம் போட்ட ஒரே ஆர்டர்.. "இதெல்லாம் அநியாயங்க.. ஒத்துக்காதீங்க".. கொந்தளித்த சீனியர்

டெல்லிக்கு அதிமுக மேலிடம் ஏன் சென்றது என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: ஓபிஎஸ்ஸும், எடப்பாடி பழனிசாமியும் எதற்காக டெல்லி சென்றார்கள் என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை.. பலவித யூகங்களுடன், மற்றொரு தகவலும் தற்போது கசிந்து வருகிறது.

யாரிடமும் சொல்லாமல், கட்சியில் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் திடுதிப்பென்று அதிமுக தலைமை டெல்லி சென்றது.

அசாம் - மிசோரம் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்... திடீர் வன்முறையில் 6 போலீசார் பலி.. பரபர தகவல்அசாம் - மிசோரம் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்... திடீர் வன்முறையில் 6 போலீசார் பலி.. பரபர தகவல்

இதற்கு எத்தனையோ காரணங்கள் சொல்லப்பட்டன.. சசிகலா ஆடியோ விவகாரம், ஒற்றை தலைமை பிரச்சனை, திமுகவின் ஊழல் நடவடிக்கை டார்கெட், உள்ளாட்சி தேர்தல், போன்ற பல பிரச்சனைகளில் அதிமுக சிக்கி கொண்டுள்ளது.

டெல்லி

டெல்லி

அதனால், இதில் எந்த விஷயத்துக்காக இவர்கள் இருவரும் டெல்லி சென்றார்கள் என்பது இப்போது வரை தெரியவில்லை.. எனினும் யூகங்களும், அனுமானங்களும், சந்தேகங்களும் பரபரத்து கொண்டே உள்ளன.. அந்த வகையில் இன்னொரு தகவல் தற்போது கசிந்து வருகிறது.

 முருகன்

முருகன்

தமிழகத்தில் காலியாக இருக்கும் 3 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடக்கவிருக்கிறது.. அதில் அதிமுக சார்பில் கிடைக்கவிருக்கும் 1 சீட்டை மத்திய அமைச்சராக உள்ள முருகனுக்காக விட்டுக்கொடுக்க வேண்டும் என்று அதிமுகவிடம் பேசுவதற்காகத்தான் இபிஎஸ் - ஓபிஸ் இருவரையும் ஒரு சேர பிரதமர் அழைத்தார் என்கிறது பாஜக தரப்பு.

மோடி

மோடி


மோடி-அமித்ஷா சந்திப்புக்கு பிறகு தமிழ்நாடு இல்லம் திரும்பிய எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் சென்னையில் இருந்து தங்களுடன் வந்த அதிமுகவினருடன் விவாதித்துள்ளனர்... பாஜக எதிர்பார்க்கும் விஷயத்தை எடப்பாடியும் அவர்களிடம் விவரித்துள்ளதாக தெரிகிறது.. இதைக் கேட்டு அதிமுகவினர் அதிர்ச்சியடைந்து விட்டார்களாம். கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரான கேபி முனுசாமி, எடப்பாடி பழனிசாமியையும் தொடர்புகொண்டு நடந்ததை எல்லாம் விவரித்துள்ளார் எடப்பாடி...

 முனுசாமி

முனுசாமி

அதைக் கேட்ட முனுசாமி, "இதெல்லாம் அநியாயம்.. ஒத்துக்காதீங்க... கட்சிக்காரர்கள் யாருமே இதை ஏத்துக்க மாட்டாங்க.. பாஜகவுக்கு சீட்டை ஒதுக்கினால் அதிமுக உடையும்... இனி இந்த கட்சி பாஜகவின் ஊதுகுழல்னு சொல்லி தொண்டர்களெல்லாம் திமுகவுக்கு தாவிவிடுவாங்க. அதனால, கூட்டணி-உறவு முறிந்து போனாலும் சரி, பாஜகவின் ராஜ்யசபா சீட் விருப்பத்துக்கு மட்டும் ஓகே சொல்லிடாதீர்கள்" என்று கடுமை காட்டியுள்ளார்..

சசிகலா

சசிகலா

அதற்கு எடப்பாடி பழனிசாமியும், "எங்களுக்கும் விருப்பம் கிடையாது... ஒருவேளை பாஜகவின் கோரிக்கையை ஏற்கலைன்னா... கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை நாம் ரத்து செய்திருப்பதை எதிர்த்து தேர்தல் ஆணையத்திலும் கோர்ட்டிலும் சசிகலா போட்டுள்ள வழக்கில் சசிகலாவுக்கு ஆதரவாக டெல்லி செயல்படலாம்... சென்னை வந்ததும் மற்றதை பேசுவோம்" என்று சொல்லியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.. ஓபிஎஸ்-எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தில் நடந்ததை அறிந்து ஏக டென்சனில் இருக்கிறார்களாம் அதிமுக சீனியர்கள்...!

English summary
Whats the reason behind in ADMK Edapadi palanisamy and OPSs delhi visit
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X